மாதம் ரூ.11,000 கிடைக்கும்! மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. அசத்தலான திட்டம்

Senior Citizen Savings Scheme: மூத்த குடிமக்கள் சிறிய முதலீட்டின் மூலம் மாதம் ரூ.11,000 வருமானத்தை நீங்கள் பெற முடியும். இதன் மூலம் நீங்கள் வயதான காலத்தில் யாரும் நம்பியிருக்க அவசியம் இருக்காது.

Written by - Umabarkavi K | Last Updated : Nov 11, 2025, 06:28 PM IST
  • மூத்த குடிமக்கள் மிஸ் பண்ணாதீங்க
  • மாதம் ரூ.11,000 கிடைக்கும்
  • இந்த திட்டம் பற்றி தெரியுமா
மாதம் ரூ.11,000 கிடைக்கும்! மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. அசத்தலான திட்டம்

Post Office Senior Citizen Savings Scheme Latest News: பலருக்கும் நிதிப் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகள் போன்றவை பெரும்பாலும் வேலைக்கு பிறகான வாழ்க்கை குறித்து மூத்த குடிமக்களுக்கு கவலையை ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான், மூத்த குடிமக்களுக்காக பல திட்டங்களை இந்தியன் போஸ்ட் ஆபிஸ் வழங்கி வருகிறது.

Add Zee News as a Preferred Source

SCSS திட்டத்தில் யாரெல்லாம் சேரலாம்?

போஸ்ட் ஆபிஸில் இருக்கும் திட்டங்களில் மூலம் மூத்த குடிமக்கள் மாதாந்திர வருமானத்தை பெற முடியும். இதன் மூலம் மூத்த குடிமக்கள் வயதான காலத்தில் தங்களின் அன்றாட செலவுகள், மருத்துவ செலவுகளை பார்த்துக் கொள்ள முடியும். அந்த வகையில், இந்திய போஸ்ட் ஆபிஸில் தபால் அலுவலக தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் உள்ளது. இந்த திட்டம் மூலம் ஓய்வுக்குப் பிறகு பாதுகாப்பான மற்றும் நிலையான வருமானத்தை மூத்த குடிமக்கள் பெற முடியும்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் என்பது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கானது. 55 முதல் 60 வயதுடையவர்கள் ஓய்வு பெற்ற ஒரு மாதத்திற்குள் சேரலாம். தன்னார்வ ஓய்வூதியத் திட்டம் (VRS) எடுப்பவர்கள் 50 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் சேரலாம்.

SCSS திட்டத்தில் மாத வருமானம் எவ்வளவு கிடைக்கும்

இந்த திட்டத்தில் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். உங்கள் மனைவியுடன் கூட்டுக் கணக்கில் ரூ.60 லட்சம் வரை முதலீடு செய்யலாம். நீங்கள் கணக்கை ஐந்து ஆண்டுகளுக்கு வைத்திருக்கலாம், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்குகிறது. நீங்கள் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் வட்டியைப் பெற்று தபால் அலுவலகம் அல்லது வங்கியில் டெபாசிட் செய்யலாம். திட்டம் முதிர்ச்சியடைந்த பிறகு நீங்கள் அதைப் புதுப்பிக்கலாம்.

உதாரணமாக ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், ஆண்டுக்கு 2.46 லட்சம் வட்டி கிடைக்கும். இந்த தொகை 12 மாதங்களுக்கு பிரித்தால், தோராயமாக ரூ.20,500 மாதாந்திர வருமானம் தருவதாக இருக்கிறது. மேலும், நீங்கள் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால், மாதத்திற்கு சுமார் ரூ.11,750 வரை கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் முதலீடு பிரிவு 80சி வரிச் சலுகைகளுககு தகுதி பெற்றது. அதிகபட்ச வரிச் சலுகை வரம்பு ரு.1.50 லட்சமாகும்.

SCSS திட்டத்தில் எப்படி விண்ணப்பிக்கலாம்

மூத்த குடிமக்கள் திட்டத்தில் சேர நீங்கள் எந்த தபால் அலுவலகம் அல்லது வங்கியிலும் கணக்கை திறக்கலாம்.ஆதார், பான், புகைப்படம் தேவைப்படும். இந்தத் திட்டம் பாதுகாப்பானது, ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பணத்தை எடுத்தால் 1% அபராதமும், முதல் ஆண்டில் 2% அபராதமும் விதிக்கப்படும். நீண்ட கால திட்டமிடலுக்கு மூத்த குடிமக்கள் ஓய்வூதிய திட்டம் சிறந்தது.

மேலும் படிக்க: வீட்டில் இருந்தே PAN Card அப்டேட் செய்யலாம்.. முக்கிய அப்டேட் இதோ!

மேலும் படிக்க: ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ்: அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

 

About the Author

Trending News