)
Central Government Employees Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. வியாழக்கிழமை, மாநிலங்களவையில் இது குறித்து தெரிவிக்கப்பட்டது. அடானமஸ் அமைப்பு அதாவது ஒரு தன்னாட்சி அமைப்பில் ஊழியர் ஆற்றும் சேவையும் மத்திய ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவதற்குக் கணக்கிடப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணத்தை அளிக்கும் செய்தியாக பார்க்கப்படுகின்றது.
Autonomous Body: எந்த அமைப்புகள் தன்னாட்சி அமைப்புகளாக கருதப்படும்?
தன்னாட்சி அமைப்புகள் என்பவை அரசாங்கத்தால் நிறுவப்பட்ட நிறுவனங்களாகும். அவை நேரடி அரசாங்கக் கட்டுப்பாட்டிலிருந்து ஓரளவு சுதந்திரத்துடன் செயல்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். அவை பெரும்பாலும் வழக்கமான அரசாங்க கட்டமைப்பிற்கு வெளியே குறிப்பிட்ட செயல்பாடுகள் அல்லது சேவைகளைக் கையாள உருவாக்கப்படுகின்றன.
மாநிலங்களவையில் அமைச்சர் கூறியது என்ன?
மத்திய பணியாளர் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், ‘மத்திய அரசு ஊழியர்களுக்கான மத்திய சிவில் சேவைகள் (தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் பணிக்கொடை செலுத்துதல்) விதிகள், 2021 ஐ ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை (DOPPW) நோடிஃபை செய்துள்ளது’ என்று எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார். இந்த விதிகள் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு தானாகவே பொருந்தாது. ஆனால் ஒரு தன்னாட்சி அமைப்பில் ஒரு ஊழியர் வழங்கும் சேவைக்கும் பணிக்கொடை வழங்கப்படும் பட்சத்தில் அவரது சேவை நேரத்தில் இது சேர்க்கப்படலாம்.
தன்னாட்சி அமைப்புகளின் பணிக்கொடை செலுத்துதல், வட்டி செலுத்துதல் அல்லது சேவை காலத்தை கணக்கிடுதல் போன்றவை குறிப்பிட்ட தன்னாட்சி அமைப்பு பின்பற்றும் குறிப்பிட்ட பணிக்கொடை விதிகளைப் பொறுத்தது. ஏனெனில் DoPPW விதிகள் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கு தானாக பொருந்தாது என்று அமைச்சர் மேலும் கூறினார்.
80 லட்சம் பொது குறைகள் தீர்க்கப்பட்டன
தன்னாட்சி அமைப்புகளால் பணிக்கொடை செலுத்துதல், வட்டி செலுத்துதல் அல்லது சேவை காலத்தைக் கணக்கிடுதல் போன்றவை குறிப்பிட்ட தன்னாட்சி அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறப்பு பணிக்கொடை விதிகளைப் பொறுத்தது என்று அமைச்சர் கூறினார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ஜிதேந்திர சிங், 2022 ஆம் ஆண்டு முதல் ஜூன் 2025 வரை 80,36,042 பொது குறைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
4.8 லட்சம் நிலுவை காலியிடங்களை நிரப்பிய மத்திய அரசு
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகள் வழங்கிய தரவுகளின்படி, 2016 முதல் மத்திய அரசில் சுமார் 4.8 லட்சம் நிலுவை காலியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்றார். காலியாக உள்ள பதவிகளை உரிய நேரத்தில் நிரப்புமாறு மத்திய அரசின் அமைச்சகங்கள்/துறைகளுக்கு அவ்வப்போது அறிவுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ