சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவரா... அதிர்ச்சி தகவல் - இனி இதுக்கும் GST

GST For Apartment Maintenance Charges: அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களும் இனி ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என  அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Apr 13, 2025, 12:55 PM IST
  • பெருநகரங்களில் அதிகமானோர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர்.
  • அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் பராமரிப்பு கட்டணம் செலுத்துவார்கள்.
  • இந்த பராமரிப்பு கட்டணத்திற்கு GST விதிக்கப்படுகிறது.
சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவரா... அதிர்ச்சி தகவல் - இனி இதுக்கும் GST

GST For Apartment Maintenance Charges: உயர் சொகுசு வசதிகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் ஒன்று வெளியாகி உள்ளது.

Add Zee News as a Preferred Source

GST For Apartment Maintenance Charges: இந்த கட்டணத்தை மிஞ்சினால் ஜிஎஸ்டி

அதாவது, அடுக்குமாடி குடியிருப்பில் மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் மேல் பராமரிப்பு கட்டணமாக வசூலிக்கப்பட்டால், அதற்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், சொகுசு வசதிகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் பராமரிப்பு கட்டணத்தை கூடுதலாக செலவிட நேரிடலாம்.

வரவிருக்கும் புதிய விதியின்படி, அடுக்குமாடியிருப்பின் மாத பராமரிப்பு கட்டணம் ரூ.7,500 தாண்டினாலோ, மொத்த அடுக்குமாடி குடியிருப்பு சமூகத்தின் பராமரிப்பு கட்டணம் ரூ.20 லட்சத்தை தாண்டினாலோ 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என தெரிகிறது.

GST For Apartment Maintenance Charges: அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் கிடையாது

சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற பெருநகரங்களில் அதிகமானோர் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். பெங்களூரு நகரில் சுமார் 50 லட்ச மக்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். அதேபோல், ஹுப்பள்ளி, பெலகாவி, மங்களூரு, மைசூர் உள்ளிட்ட நகரங்களில் குறைந்தபட்சம் 40 லட்ச மக்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். 

எனவே, வரி அலுவலகத்தை நாடி எந்தெந்த அடுக்குமாடி குடியிருப்புகள் இந்த வரி சட்டடகத்திற்குள் வரும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம். அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் இந்த வரி வசூலிக்கப்படாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GST For Apartment Maintenance Charges: வரிச்சுமை

யாருக்காவது தங்களின் குடியிருப்போ அல்லது கம்யூனிட்டியோ வரி அடுக்கில் வருகிறதா இல்லையா என்ற சந்தேகம் இருந்தால், அருகில் உள்ள கமர்ஷியல் டேக்ஸ் ஆபிஸை நாடி, ரூ.500 செலுத்தி உங்களின் அடுக்குமாடி குடியிருப்பின் நிலையை அறிந்துகொள்ளலாம்.

பெங்களூரு நகரில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் இப்போது ஜிஎஸ்டியில் பதிவு செய்ய வேண்டுமா வேண்டாமா என்று விவாதிக்கத் தொடங்கி உள்ளனர். ஒருவேளை ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்தால், அவர்கள் மாதத்திற்கு இரண்டு முறை வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதமும் 11ஆம் தேதி ஒரு முறையும், 20ஆம் தேதி மீண்டும் ஒரு முறையும். கூடுதலாக, அவர்கள் வருடாந்திர வருமான வரியும் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். அடிக்கடி வருமான வரி தாக்கல் செய்வதால், கூடுதலாக ரூ.1–2 லட்சம் வரை செலவிட நேரிடலாம்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழுவில் CGHS -க்கு பதிலாக புதிய சுகாதாரத் திட்டமா? அரசு ஊழியர்களுக்கு அசத்தல் அப்டேட்

மேலும் படிக்க | இனி UAN உருவாக்கம் உங்கள் கையில்: EPFO முக அங்கீகார தொழில்நுட்பம் மூலம் இப்படி நிமிடங்களில் செய்யலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News