SIP மூலம் பரஸ்பர நிதியத்தில் உங்களால் முடிந்த சிறிய அளவிலான தொகையை கூட முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அபரிமிதமான லாபத்தை தருகிறது. கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேற தேவையானது சில திட்டமிடல் மட்டுமே. நீண்ட கால தொடர் முதலீடு உங்களை கோடீஸ்வரர் ஆக்கும். அதிகம் வேண்டாம், மாதம் ரூ.3000 முதலீட்டிலும் ரூ.1 கோடி நிதியை உருவாக்கலாம்.
கோடீஸ்வர கனவு நனவாக சிறந்த ஃபார்முலாவான நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் உத்தியை கடைபிடிக்க வேண்டும். அற்புதமான வருமானம் இதில் காணப்படும். முதலீட்டு காலம் முழுவதும் வட்டிக்கு வட்டி கிடைக்கும். எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு பலன் கிடைக்கும். கூட்டு வட்டியின் பலனை முழுமையாக பெற, முடிந்த அளவு இளம் வயதிலிருந்தே முதலீடு செய்யத் தொடங்குங்கள்.
கோடீஸ்வர கனவு நிறைவேற நீங்கள் கடைபிடிக்க வேண்டிய முதலீட்டு உத்திகள்
மாத முதலீடு
மாதம் தோறும் ₹3000 மட்டும் எஸ்ஐபியில் முதலீடு செய்தால் போதும். இன்றைய காலகட்டத்தில், மாதம் 3000 ரூபாய் மிச்சப்படுத்துவது சாமான்யர்களுக்கு எளிதான விஷயம் தாம். கொஞ்சம் செலவுகளை கட்டுப்படுத்தினால், இது சாத்தியமே.
முதலீட்டு காலம்
மாதம் தோறும் ₹3000 என்ற அளவில் 30 ஆண்டுகள் முதலீட்டை தொடர வேண்டும். இதனை இடைவிடாமல் தொடர வேண்டும் என்பது மிக முக்கியம். இளம் வயதிலேயே, முதலீட்டை தொடங்குபவர், தாமதமாகத் தொடங்குபவரை விட அதிக ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய முடியும். அதோடு, இளம் வயதில் முதலீடு செய்வதன் மூலம் கூட்டு வட்டி வருமானத்தின் பலனை அதிகபடசம் பெறலாம்.
மொத்த முதலீட்டுத் தொகை
மாதந்தோறும் ரூ.3,000 முதலீடு செய்து வந்தால், அவர்களின் மொத்த முதலீடு ரூ.10,80,000 என்ற அளவில் இருக்கும். அதில் சராசரியாக 12 சதவீத வருடாந்திர வருமானத்தைப் பெற்றால் கூட, அவர்களின் கார்பஸ் சுமார் 1 கோடி ரூபாயாக அதிகரித்து விடும்.
முதலீட்டில் கிடைக்கும் வருமானம்
மாதம் ரூ.3,00 முதலீடு செய்வதன் மூலம், 30 ஆண்டுகளில் எஸ்ஐபி மூலம் ரூ.1,05,89 741 பெறுவீர்கள். அதாவது இதில் கிடைக்கும் வருமானம் ரூ.95,09,741. ஆனால், நீங்கள் முதலீடு செய்தது, ரூ.10,80,000 மட்டுமே. கூட்டு வட்டியின் பலனால், பணம் பன்மடங்காகிறது.
பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









