SIP Mutual Fund: ஓய்வு காலத்தில் மாதம் ரூ.80,000 வருமானத்தை தரும் பரஸ்பர நிதியம்

ஓய்வுக்கு பிறகு பொருளாதார ரீதியாக யாரையும் சாராமல் இருக்க, ஓய்வூதிய நிதியை சேர்ப்பதற்கான திட்டமிடல் அவசியம். உங்களுக்கு பென்ஷன் இல்லாத நிலையில் வழக்கமான வருமான ஆதாரத்தை உருவாக்க முறையான திட்டமிட்ட முதலீடுகள் உதவும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 15, 2025, 01:46 PM IST
  • ரூ.80000 வருமானம் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கான கணக்கீடு.
  • பரஸ்பர நிதியத்தில் செய்யப்படும் நீண்ட கால முதலீட்டின் மூலம் பணம் பன்மடங்காவது எளிது.
  • வாழ்நாள் முழுவதும் வருமானத்தை பெற உதவும் வகையிலான முதலீடு.
SIP Mutual Fund: ஓய்வு காலத்தில் மாதம் ரூ.80,000 வருமானத்தை தரும் பரஸ்பர நிதியம்

ஓய்வுக்கு பிறகு பொருளாதார ரீதியாக யாரையும் சாராமல் இருக்க, ஓய்வூதிய நிதியை சேர்ப்பதற்கான திட்டமிடல் அவசியம். உங்களுக்கு பென்ஷன் இல்லாத நிலையில் வழக்கமான வருமான ஆதாரத்தை உருவாக்க முறையான திட்டமிட்ட முதலீடுகள் உதவும். உங்கள் ஓய்வூதிய வாழ்க்கையை வசதியாக நடத்த உதவும் வகையில், வாழ்நாள் முழுவதும் வருமானத்தை பெறும் வகையில் முதலீடு தேவை.

Add Zee News as a Preferred Source

முதலீட்டை திட்டமிட்டு சேமித்தால் உங்கள் வாழ்நாள் முழுவதும் வீட்டில் உட்கார்ந்து கொண்டே வருமானம் பெறலாம். ஒவ்வொரு மாதமும் ரூ. 80,000 கிடைக்கும் வகையில் முதலீடு செய்ய வேண்டும். நல்ல வருமானம் ஈட்ட நீங்கள் SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். பரஸ்பர நிதியத்தில் செய்யப்படும் நீண்ட கால முதலீட்டின் மூலம் பணம் பன்மடங்காவது எளிது. பரஸ்பர நிதியம் பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீடு என்றாலும், பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதை விட ரிஸ்க் குறைவு. 

இந்த பதிவில், ஓய்வு பெறும்போது  ஓய்வு பெறும்போது ரூ. 80,000 மாத வருமானத்தைப் பெற உங்கள் மாதாந்திர மற்றும் ஒரு முறை முதலீடுகள் என்னவாக இருக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம். உங்களது வயது 25, 30, 35 அல்லது 40 வயதாக இருக்கும் நிலையில், நீங்கள் முதலீட்டை தொடங்கும் வயதை பொறுத்து, எந்த அளவில் முதலீடு தேவை என்பதை  அறிந்து கொள்ளலாம்.

ஓய்வூதிய நிதித் தொகை கணக்கீடுகள்

உங்களது தற்போதைய வயது 25, 30, 35 அல்லது 40 ஆண்டுகள் என்றால், 60 வயதிலிருந்து ஆயுள் முழுவதும் ரூ.80,000 மாதாந்திர ஊதியத்தைப் பெறுவதற்குத் தேவையான ஓய்வூதிய நிதி, மாதாந்திர SIP முதலிடு மற்றும் ஒரு முறை (மொத்த தொகை) முதலீடு செய்யும் தொகையை ஆகியவற்றை கணக்கிடலாம்.

கீழ்கண்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு, மாதம் ரூ.80000 வருமானம் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை கணக்கிடப்பட்டுள்ளது:

ஓய்வூதிய வயது- 60 ஆண்டுகள்

எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம்- 80 ஆண்டுகள்

தற்போதைய மாதாந்திர செலவு- ரூ.80,000

பணவீக்க விகிதம் - 6 சதவீதம்

தற்போதைய ஓய்வூதிய நிதி - 0

ஓய்வூதியத்திற்கு முந்தைய வரி வருமானம்- 12 சதவீதம்

ஓய்வூதியத்திற்குப் பிந்தைய வரி வருமானம் - 6 சதவீதம்

25 வயதில் முதலீட்டை தொடக்கும் போது

- மாதம் ரூ. 80,000 பெற தேவையான ஓய்வூதிய நிதி ரூ.14,75,72,880. 

- மாதம் ரூ. 80,000 வருமானம் பெற தேவையான மாதாந்திர SIP முதலீட்டு தொகை ரூ. 22,720.

- மாதம் ரூ. 80,000 பெற தேவையான மொத்த முதலீட்டுத் தொகை . ரூ. 27,94,962

30 வயதில் முதலீட்டை தொடக்கும் போது

- மாதம் ரூ. 80,000 பெற தேவையான ஓய்வூதிய நிதி ரூ.11,02,74,960. 

- மாதம் ரூ. 80,000 வருமானம் பெற தேவையான மாதாந்திர SIP தொகை ரூ. 31,240.  

- மாதம் ரூ. 80,000 வருமானம் பெற தேவையான மொத்த முதலீட்டுத் தொகை ரூ.36,80,750

35 வயதில் முதலீட்டை தொடக்கும் போது

- மாதம் ரூ. 80,000 பெற தேவையான ஓய்வூதிய நிதி ரூ. 8,24,04,000. 

- மாதம் ரூ. 80,000 வருமானம் பெற தேவையான மாதாந்திர SIP தொகை ரூ. 43,425.  

- மாதம் ரூ. 80,000 பெற தேவையான மொத்த முதலீட்டுத் தொகை ரூ.48,47,276

40 வயதில் முதலீட்டை தொடக்கும் போது

- மாதம் ரூ. 80,000 பெற தேவையான ஓய்வூதிய நிதி ரூ. 6,15,77,040. 

- மாதம் ரூ. 80,000 வருமானம் பெற தேவையான மாதாந்திர SIP தொகை ரூ.61,630.  

- மாதம் ரூ. 80,000 வருமானம் பெற தேவையான மொத்த முதலீட்டுத் தொகை ரூ.63,83,493

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | SIP Mutual Fund: கோடீஸ்வர கனவை நனவாக்க... மாதம் ரூ.3000 முதலீடு போதும்... எளிய கணக்கீடு இதோ

மேலும் படிக்க | SWP: ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்க உதவும் பரஸ்பர நிதியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News