வருமானத்தை வாரிக் கொடுக்கும் SIP... ஆனால் இந்த தவறுகள் நஷ்டத்தை ஏற்படுத்தும்

பரஸ்பர நிதியத்தில் SIP மூலம் செய்யப்படும் முதலீடுகள் சாமான்யர்களுக்கு வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் பணம் காய்ச்சி மரம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. ஆனால், சில தவறுகள் காரணமாக நஷ்டம் ஏற்படலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 1, 2025, 05:01 PM IST
  • பணம் அனைத்தையும் ஒரே ஃபண்டில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.
  • எந்தவிதமான ஆராய்ச்சியும் தகவல்களும் இல்லாமல் முதலீடு செய்வது தவறு.
  • நீண்ட கால SIP முதலீட்டில் ஆபத்து குறைவு.
வருமானத்தை வாரிக் கொடுக்கும் SIP... ஆனால் இந்த தவறுகள் நஷ்டத்தை ஏற்படுத்தும்

பரஸ்பர நிதியத்தில் SIP மூலம் செய்யப்படும் முதலீடுகள் சாமான்யர்களுக்கு வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் பணம் காய்ச்சி மரம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. இதற்கு, முதலீட்டு உத்தியை சரியாக கடைபிடிப்பது அவசியம். இதன் மூலம் ஆயிரங்களை கோடிகளாக்கலாம். சரியான நிதியங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். இல்லை என்றால் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம். பரஸ்பர நிதிய முதலீடுகளில் செய்யப்படும் பொதுவான தவறுகளை அறிந்து கொள்வோம்.

Add Zee News as a Preferred Source

எந்தவிதமான ஆராய்ச்சியும் தகவல்களும் இல்லாமல் முதலீடு செய்வது

SIP முறை மூலம் செய்யப்படும் பரஸ்பர நிதிய  முதலீடுகள், பணத்தை பன்மடங்காக்க பெரிதும் உதவுகிறது. ஆனால், முதலீட்டை தொடங்க விரும்பினால், முதலில் சந்தையில் ஆராய்ச்சி செய்து, SIP முதலீட்டை புத்திசாலித்தனமாகவும் உங்கள் தேவைக்கு ஏற்பவும் தேர்வு செய்து முதலீடு செய்யுங்கள். இந்த விஷயத்தில் ஒரு நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம். ஆனால் யாரோ ஒருவரின் பேச்சைக் கேட்டு எந்தவிதமான ஆராய்ச்சியும் தகவல்களும் இல்லாமல் முதலீடு செய்வது உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும்.

குறுகிய கால SIP முதலீடு

நீண்ட கால SIP முதலீட்டில் ஆபத்து குறைவு. சராசரியாக பலன் உண்டு. மேலும் கூட்டு வட்டியின் பலன் கிடைக்கும். ஆனால் நீங்கள் நீண்ட கால எஸ்ஐபியை ஆரம்பித்திருந்தால், அதை பாதியிலேயே நிறுத்த வேண்டாம். இல்லையெனில் உங்கள் லாப இலக்கை அடைய முடியாது. நீங்கள் எவ்வளவு அதிக காலம் முதலீடு செய்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக கூட்டு வட்டி வருமானத்தின் பயனை அடைவீர்கள். இதன் மூலம் ஒரு பெரிய கார்பஸை உருவாக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொருளாதார நிலையை கருத்தில் கொள்ளாமல் இருத்தல்

அதிக லாபம் ஈட்டுவதற்காக SIP முதலீடு பெரிய தொகையை முதலீடு செய்யாதீர்கள், உங்கள் பட்ஜெட் பாதிக்கப்படும் வகையில் முதலீடு செய்தால், SIP முதலீட்டை நீண்ட காலத்திற்கு தொடர முடியாமல் போகலாம். எனவே, உங்கள் நிதி நிலையைக் கருத்தில் கொண்டு முதலீட்டின் அளவைத் தீர்மானிக்க வேண்டும். SIP திட்டங்களில் நெகிழ்வுத்தன்மை உண்டு. இதனை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம், இடைநிறுத்தம் செய்யலாம் மற்றும் SIP முதலீட்டு தொகையை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். இந்த நெகிழ்வுத்தன்மையைப் பயன்படுத்தி, உங்கள் பட்ஜெட்டை மனதில் வைத்து முதலீடு செய்யுங்கள். வருமானம் அதிகரிக்கும் போது, ​​அதற்கேற்ப முதலீட்டை அதிகரிக்கவும்.

முதலீட்டில் பல்வகைப்படுத்தல் இல்லாமை

உங்கள் பணம் அனைத்தையும் ஒரே ஃபண்டில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். இது உங்கள் முதலீட்டின் அபாயத்தை அதிகரிக்கிறது. கடன், ஈக்விட்டி மற்றும் பிற சொத்து வகைகளில் பிரித்து உங்கள் முதலீடுகளை சமநிலைப்படுத்த வேண்டும். இதன் மூலம் உங்கள் ஆபத்தை பெருமளவு குறைக்க முடியும்.

செலவு விகிதத்தை புறக்கணிக்காதீர்கள்

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன், அதில் உள்ள செலவு விகிதத்தை புறக்கணிக்காதீர்கள். பொதுவாக ஒரு ஃபண்டின் வருமானம் 15 சதவிகிதம் அல்லது 18 சதவிகிதம் என்றால், முதலீடு செய்வதன் மூலம் அதே பலன் கிடைக்கும் நினைப்பீர்கள். ஆனால் செலவு விகிதம் வருமானத்தை குறைக்கும் என்பது பலருக்கு தெரிவதில்லை. உங்கள் மியூச்சுவல் ஃபண்ட்  செய்யும் நிர்வாகச் செலவுகள், செலவு விகிதம் எனப்படும்.  நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிதியின் செலவு விகிதம் குறைவாக இருந்தால், வருமானம் அதிகம் கிடைக்கும். அதிக செலவு விகிதம் உங்கள் வருமானத்தை பாதிக்கும்.

போர்ட்ஃபோலியோவை மதிப்பிடாமல் இருத்தல்

நீங்கள் எந்த நிதியத்தில் முதலீடு செய்திருந்தாலும், அதை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வது மிகவும் முக்கியம். இதைச் செய்யாவிட்டால் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். நிதி செயல்திறன் மற்றும் சந்தை மாற்றங்களை புறக்கணிப்பது உங்கள் வருமானத்தை பெரிதும் பாதிக்கலாம்.

பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | SIP Mutual Fund: கோடீஸ்வர கனவை நனவாக்க... மாதம் ரூ.3000 முதலீடு போதும்... எளிய கணக்கீடு இதோ

மேலும் படிக்க | SWP: ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்க உதவும் பரஸ்பர நிதியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News