முதலீட்டைப் பொறுத்தவரை, அதிக வருமானம் தரும் திட்டங்களில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மிகச் சிறந்த தேர்வாக கருதப்படுகின்றன. எஸ்ஐபி என்னும் முறையான முதலீட்டு திட்டம் மூலம், சாமானியர்களும் இதில் எளிதாக முதலீடு செய்யலாம்.

முதலீட்டைப் பொறுத்தவரை, அதிக வருமானம் தரும் திட்டங்களில், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மிகச் சிறந்த தேர்வாக கருதப்படுகின்றன. எஸ்ஐபி என்னும் முறையான முதலீட்டு திட்டம் மூலம், சாமானியர்களும் இதில் எளிதாக முதலீடு செய்யலாம். இதில் ரூ.250 என்ற அளவில் கூட முதலீட்டைத் தொடங்கலாம். கூட்டு வட்டி வருமானத்தின் பலன் கிடைப்பதால், நூறுகள் இலட்சங்கள் ஆக்குவதும், ஆயிரங்களை கோடிகளாக்குவதும் மிக எளிது.
எஸ்ஐபி முதலீட்டில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
எஸ்ஐபி பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டம் என்றாலும், இதில் ரிஸ்க் குறைவு. இதில் செய்யப்படும் நீண்ட கால முதலீடுகளுக்கு, குறைந்த பட்சம் 12 சதவீத வருமானம் கிடைக்கிறது என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். நீண்ட கால தரவுகளும் இதை உறுதிப்படுத்துகின்றன. எனினும், எஸ்ஐபி என்னும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் இதில் செய்யும் சில தவறுகள், பெரும் இழப்பை ஏற்படுத்தலாம்.
பரஸ்பர நிதிய முதலீட்டில் தவிர்க்க வேண்டிய சில தவறுகள்
நிதி நிலையை கருத்தில் கொள்ளாமல் SIP தொகையை தேர்வு தேர்வு செய்தல்
எஸ்ஐபி தொகையை தேர்ந்தெடுக்கும் போது நமது நிதி நிலையை கருத்தில் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப மாதாந்திர முதலீட்டுத் தொகையை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் அதனை தடையில்லாமல் நீண்ட காலம் தொடங்க முடியும். எஸ்ஐபி முதலீட்டை எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம் தொடரலாம் என்றாலும், நீண்ட கால தொடர் முதலீட்டில் தான், கூட்டு வட்டி வருமானத்தின் முழுமையான பலனை பெற முடியும். முதலீடு தடை பட்டால், அதிகபட்ச பலனை பெற முடியாமல் போய்விடும்.
முதலீட்டைப் பல்வகை படுத்தாமல் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகள்
எப்போதுமே ஒரே ஃபண்டில் முதலீடு செய்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். அதனை கடன், ஈக்விட்டி, மற்றும் பிற வகை சொத்துக்களில் பிரித்து முதலீடுகள் செய்வது சிறப்பு. ஸ்மால் கேப் ஃபண்டுகள் மிகச் சிறந்த வருமானத்தை கொடுக்கும் அதே நேரத்தில் ரிஸ்க் அதிகம் கொண்டது. லாட்ஜ் கேப் ஃபண்ட்கள், அதிக வருமானம் கொடுக்கவில்லை என்றாலும் ரிஸ்க் குறைவாக கொண்டது. இது இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் மிட் கேப் ஃபண்டுகள் உள்ளது. உங்களது முதலீட்டை, இந்த மூன்று வகையான ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்வது புத்திசாலித்தனம்.
எஸ்ஐபி முதலீடுகள் குறுகிய காலத்திற்கு ஏற்றது அல்ல
எஸ்ஐபி முதலீடுகளில் அதிகபட்ச லாபம் பெற விரும்பினால், அதனை நீண்ட காலம் தொடர்வது மிக அவசியம். இப்போது தான் கூட்டு வட்டி வருமானத்தின் அதிகபட்ச பலனை பெற முடியும். குறைந்தது 5 ஆண்டுகளில் நல்ல வருமானம் பார்க்கலாம் என்றாலும், 15 அல்ல 20 ஆண்டுகள் ஆண்டுகள் தொடர்ந்தால், கிடைக்கும் வருமானம் வியக்கத்தக்க அளவில் இருக்கும். ஆயிரங்களை கோடிகளாக மாற்ற தடையில்லாத நீண்ட முதலீடு தேவை.
முதலீடு செய்யும் ஃபண்டுகளின் செலவு விகிதத்தை கணக்கிடுதல்
முயூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது, நாம் முதலீடு செய்யும் குறிப்பிட்ட பரஸ்பர நிதியத்தின் செலவு விகிதம் என்ன என்பதை பார்க்க வேண்டும். செலவு விகிதம் அதிகமாக இருக்கும் போது அது வருமானத்தை குறைக்கும். மியூச்சுவல் ஃபண்டுகளின் செலவு விகிதம் என்பது, குறிப்பிட்ட ஃபண்ட், நிதியை நிர்வகிக்க செய்யும் செலவுகள்.
முதலீட்டு போர்ட்போலியோவை அவ்வப்போது மதிப்பிடாமல் இருத்தல்
நீங்கள் செய்யும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, எந்த அளவிற்கு வருமானத்தை கொடுத்துள்ளது என்பதை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வது முக்கியம். இதன் மூலம், வருமானம் அதிகம் தரும் பண்டுகளை கண்டறிந்து அதற்கு ஏற்ப உங்களது உத்திகளை மாற்ற முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ