SIP என்னும் பரஸ்பர நிதிய முதலீடுகள் சாமானியர்களின் கோடீஸ்வர கனவை நிறைவேற்றும், சிறந்த திட்டங்கள். பங்குச்சந்தை முதலீட்டைப் போன்று ரிஸ்க் இதில் இல்லை. ஏனெனில், சந்தை ஏற்ற இறக்கங்கள் மூலம் இதன் வருமானம் குறைவதற்கான வாய்ப்பு இல்லை எனலாம். இதற்கு முக்கிய காரணம் இதில் செய்யப்படும் நீண்ட கால முதலீடுகள், கூட்டு வட்டி வருமானத்தின் பலனை கொடுக்கின்றன. சந்தை இறங்கும் போது நஷ்டம் ஏற்பட்டாலும், சந்தை உயரும் போது வருமானம் அதிகரிப்பதால், சராசரி ஆண்டு வருமானம் பெரிய அளவில் பாதிப்பதில்லை.
SIP முதலீடுகளில் கிடைக்கும் ஆண்டு சராசரி வருமானம்
பரஸ்பர நிதியத்தில் செய்யப்படும் நீண்ட கால முதலீடுகள் சராசரியாக குறைந்தபட்சம் 12 சதவீத வருமானத்தை கொடுக்கின்றன என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். சிறந்த பரஸ்பர நிதியங்கள் சில சமயங்களில் 30 சதவீதம் வரை கூட வருமானத்தை கொடுக்கின்றன.
தொடர்ந்து அதிகரிக்கும் எஸ் ஐ பி முதலீடுகள்
பங்கு சந்தையுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பானது என்பதால்,சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) மீதான மோகம் மக்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. SIP கணக்குகளின் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதம் சுமார் 10.22 கோடியை எட்டியது. இது அக்டோபரில் 10.12 கோடியாக இருந்தது. அதே நேரத்தில், SIP முதலீடுகளில் உள்ள மொத்த AUM (நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள்) சுமார் ₹ 13.54 லட்சம் கோடியை எட்டியது. இது இந்தத் திட்டத்தில் சிறு முதலீட்டாளர்களின் அதிகரித்து வரும் ஆர்வத்தை இந்த தரவு உறுதிபடுத்துகிறது.
லட்சங்களில் நிதியை சேர்க்க உதவும் பரஸ்பர நிதிய முதலீடு
எஸ்ஐபி முதலீட்டில் உள்ள மிகச் சிறந்த அம்சம் என்னவென்றால், இதில் ரூபாய் 500 என்ற அளவில் கூட முதலீட்டை தொடங்கலாம். இன்றைய காலகட்டத்தில் நாளொன்றுக்கு இருபது ரூபாய் சேமிப்பது பெரிய விஷயம் அல்ல. தினம் 20 ரூபாய் என்ற அளவில் பணத்தை சேமித்து, பரஸ்பர நிதியத்தில் முதலீடு செய்தால் லட்சங்களில் நிதியை சேர்க்க முடியும். தினமும் ₹ 20 சேமித்து லட்சக்கணக்கில் நிதியை உருவாக்கலாம்.இந்த சேமிப்பை 20-20-20 ஃபார்முலாவை கடைபிப்பதன் மூலம், 20 ரூபாய் சிறு சேமிப்பு உதவியுடன் நீண்ட காலத்திற்கு லட்சங்களில் நிதியை உருவாக்க முடியும்
டாப் அப் எஸ்ஐபி முதலீடு
தினம் ரூபாய் 20 என்று அளவில் சேமித்தால் மாதம் உங்களிடம் 600 ரூபாய் இருக்கும். இந்த அளவில் உங்கள் முதலீட்டை தொடங்கினால் முதல் வருடத்தில் 7,200 முதலீடு செய்து இருப்பீர்கள். இதனை ஒவ்வொரு ஆண்டும் உங்கள் வருமானம் கூடும்போது, முதலீட்டை 20% என்ற அளவில் அதிகரித்து வந்தால், 20 ஆண்டுகளில் நீங்கள் செய்த மொத்த முதலீடு 13.44 லட்சமாக இருக்கும். இதில் கிடைக்கும் ஆண்டு வருமானம் 14% என்ற அனுமானத்துடன் இந்தத் தொகை சுமார் ரூ.33.98 லட்சமாக அதிகரிக்கலாம், அதாவது 20 ஆண்டுகளுக்கு முதலீட்டில் கிடைத்த வருமானம் ரூ. 20.54 லட்சமாக இருக்கும். முதலீட்டு தொகையான ரூ.13.44 மற்றும் ரூ.20.54 இரண்டையும் சேர்த்தால் மொத்த நிதி 33.98 லட்சமாக இருக்கும்.
பணத்தை எளிதாக பெருக்க அனைவருக்கும் வாய்ப்பு
SIP முதலீட்டின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், சிறிய முதலீட்டாளர் கூட இதில் பங்கேற்க முடியும். தினசரி ₹20 போன்ற சிறிய சேமிப்பை நீங்கள் நிலைத்தன்மையுடனும் பொறுமையுடனும் தொடர வேண்டும். இதன் மூலம், எதிர்காலத்தில் குழந்தைகளின் உயர்கல்வி, திருமணம் அல்லது ஓய்வு கால நிதி என உங்களின் நிதி தேவையை தீர்க்க பெரிதும் உதவும் கார்பஸாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க | SWP: ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்க உதவும் பரஸ்பர நிதியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









