SIP Mutual Fund: ஆயிரங்களை லட்சங்களாக்குவது எளிது... பெண்களே நோட் பண்ணுங்க

SIP Mutual Fund: வீட்டை சிக்கனமாக நிர்வகிக்கும் பெண்ணால், மாதம் ரூபாய் ஆயிரம் சேர்ப்பது என்பது மிகவும் எளிதான காரியம்தான். சேமித்த பணத்தை, திட்டமிட்டு முதலீடு செய்தால், ஆயிரம் பத்து லட்சம் ரூபாயாக பெருகும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 14, 2025, 10:14 AM IST
  • சிறிய தொகையை முதலீடு செய்தாலும் பெரும் லாபம் ஈட்டி கோடீஸ்வரராகலாம்.
  • ஆயிரங்களை லட்சங்களாக பெருக்குவது எளிது.
  • ரூ.1000 முதலீட்டை ரூ.10 லட்சம் என்ற அளவில் பெருக்குவது எப்படி?
SIP Mutual Fund: ஆயிரங்களை லட்சங்களாக்குவது எளிது... பெண்களே நோட் பண்ணுங்க

இல்லறத்தை நல்லறமாக மாற்றும் ஆற்றல் கொண்ட பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். வீட்டைக் கட்டுக்கோப்பாக, சிக்கனமாக நிர்வகிக்கும் பெண்ணால் குடும்பங்களின் பொருளாதாரங்கள் பெருமளவு உயர்ந்த உதாரணங்கள் பல உண்டு. பெண்கள் மனது வைத்தால், ஆயிரங்களை லட்சங்கள் ஆக்குவது எளிது.

Add Zee News as a Preferred Source

மாதம் ஆயிரம் ரூபாய் முதலீடு

வீட்டை சிக்கனமாக நிர்வகிக்கும் பெண்ணால், மாதம் ரூபாய் ஆயிரம் சேர்ப்பது என்பது மிகவும் எளிதான காரியம்தான். சேமித்த அந்த ஆயிரம் ரூபாயை, திட்டமிட்டு முதலீடு செய்தால், ஆயிரம் பத்து லட்சம் ரூபாயாக பெருகும். சிறுசேமிப்பின் மூலம் பெரிய அளவில் நிதியை சேர்க்க, மியூச்சுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதியம் உங்களுக்கு கை கொடுக்கும்.

பணம் காய்க்கும் மரமாகும் பரஸ்பர நிதியம் முதலீடு

எஸ்ஐபி மூலம் முச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தொடங்குவதால், பணத்தை எளிதாக பன்மடங்காக்கலாம். இதற்கு கூட்டு வட்டியின் பலன் பெரிதும் கை கொடுக்கும். பரஸ்பர நிதிய முதலீட்டில், வருமானத்தின் மீது வருமானம் கிடைப்பதால், நீண்டகால முதலீடுகள், ஆயிரங்களில் செய்யப்படும் டெபாசிட்டிகளை, லட்சங்களாக பெருக்கி கொடுக்கும்.

பரஸ்பர நிதிய முதலீடுகளில் கிடைக்கும் சராசரி வருமானம்

SIP முறையில் செய்யப்படும் பரஸ்பர முதலீடுகளுக்கு கூட்டுத்தொகையின் பலன் கிடைப்பதால், நீங்கள் எவ்வளவு நீண்ட காலம் SIP  முதலீட்டை தொடருகிறீர்களோ, அவ்வளவு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவாக 12 சதவீதம் வருமானம் கிடைக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.  சில சமயம் 15 முதல் 20 சதவீதம் வரை கிடைக்கும். எனவே, இதில் நல்ல லாபம் ஈட்ட, நீண்ட காலம் முதலீடு செய்ய வேண்டும். இதில் 15 முதல் 20 ஆண்டுகள் முதலீடு செய்தால் சிறிய தொகையை முதலீடு செய்தாலும் பெரும் லாபம் ஈட்டி கோடீஸ்வரராகலாம்.

ரூ.1000 முதலீட்டை ரூ.10 லட்சம் என்ற அளவில் பெருக்குவது எப்படி? 

மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் சந்தையுடன் இணைக்கப்பட்டிருந்தாலும், நேரடியாக பங்குகளில் முதலீடு செய்வதை விட இது குறைவான அபாயகரமானதாக கருதப்படுகிறது. வெறும் 500 ரூபாயில் SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தொடங்கலாம். SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 முதலீடு செய்யத் தொடங்கினால், ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் முதலீடு செய்திருப்போம். இந்த முதலீட்டை 20 ஆண்டுகள் தொடர்ந்தால், மொத்தம் ரூ.2,40,000 முதலீடு செய்திருப்போம். இதில் சராசரி 12 சதவீத வருமானத்தில் ரூ.6,79,857  என்ற அளவில் வருமானம் மட்டுமே கிடைக்கும். இந்த வழியில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு நம்மிடம் மொத்தம் ரூ.9,19,857 அதாவது தோராயமாக ரூ.10 லட்சம் கையில் இருக்கும்.

ஆயிரங்களை லட்சங்களாக பெருக்குவது எளிது

நம்முடைய முதலீடுகள் 14 சதவீத லாபத்தைப் பெற்றால், முதிர்வுத் தொகை ரூ.11,73,474 ஆகவும், 15 சதவீத விகித வருமானத்தில் முதிர்வு காலத்தில் ரூ.13,27,073 ஆகவும் இருக்கும். அதாவது, எஸ்ஐபி மூலம், மாதந்தோறும் ரூ.1000 முதலீடு செய்வதன் மூலம், குறைந்த பட்சம் ரூ.10 லட்சம் அல்லது அதற்கும் அதிகமாக வெறும் 20 ஆண்டுகளில் சேர்க்கலாம்.

பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | SIP Mutual Fund: கோடீஸ்வர கனவை நனவாக்க... மாதம் ரூ.3000 முதலீடு போதும்... எளிய கணக்கீடு இதோ

மேலும் படிக்க | SWP: ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்க உதவும் பரஸ்பர நிதியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News