SIP Mutual Funds Investment Tips: சரியான நேரத்தில் செய்யப்படும் சரியான முதலீடு பணத்தை பன்மடங்காக்கும் ஆற்றல் கொண்டது. ஓய்வு காலத்தில், நிதி சுதந்திரம் இருக்க வேண்டும் என விரும்பினால், SIP திட்டங்களில் முதலீடு செய்வது சிறந்த தேர்வாக இருக்கும். குடும்ப பொறுப்புகளை திறமையாக சமாளிக்கவும், ஓய்வு காலத்தில் யாரையும் சாராமல் இருக்கவும், உங்கள் முதலீட்டு பயணத்தை, சம்பாதிக்க ஆரம்பிக்கும் போதே தொடங்க வேண்டும்.
SIP கொடுக்கும் கூட்டு வருமான ஆதாயம்
சிறிய அளவிலான தொகையுடன் கூட நீங்கள் எளிதாக SIP மூலம் முதலீடு செய்யத் தொடங்கலாம். நீங்கள் மாதம் வெறும் 900 ரூபாய்க்கு SIP முதலீட்டை தொடங்கினாலும். உங்களுக்காக ஒரு நல்ல நிதியை உருவாக்க முடியும். பணவீக்கம் வேகமாக அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில், குழந்தைகளின் கல்வி, வீட்டுக் கனவு, வசதியான ஓய்வுகாலம் என அனைத்தும் எப்படி நிறைவேற்ற முடியும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், SIP கொடுக்கும் கூட்டு வருமான ஆதாயம் என்னும் சக்தி அனைத்தையும் சாத்தியமாக்கும்.
SIP பணம் காய்க்கும் மரம் என்பதை நினைவில் கொள்ளவும்
முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான ஒரு எளிய வழியாகும். இதில், நீங்கள் விரும்பும் மியூச்சுவல் ஃபண்டில் ஒவ்வொரு மாதமும் அல்லது உங்கள் வசதிக்கேற்ப ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சிறிய தொகையை முதலீடு செய்கிறீர்கள். SIP என்பது நீங்கள் ஒவ்வொரு மாதமும் உங்கள் உண்டியலில் பணத்தை போன்றது தான். ஆனால், ஒரே வித்தியாசம் என்னவென்றால், இங்கே உங்கள் பணம் 'வளர்கிறது'.
₹900 என்ற அளவில் செய்யும் SIP முதலீடு
நீங்கள் தினமும் ₹30 என்ற அளவில் அதாவது மாதத்திற்கு ₹900 என்ற அளவில் செய்யும் SIP முதலீடு செய்தால், நீண்ட காலத்திற்கு தொடரும் போது 'கூட்டு வட்டியின் சக்தி' மூலம் ஒரு கோடியாக மாறும். உண்மையில், SIP-யில், உங்கள் பணம் வளர்வது மட்டுமல்லாமல், நீங்கள் ஈட்டிய வருமானத்தின் மீதும் வருமானம் பெறுவீர்கள். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் முதலீடுகள். நீண்ட கால முதலீட்டில் குறைந்தது 12 % முதல் 15 % வரை ரிட்டன் கிடைக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் உறுதி கூறுகின்றனர்.
SIP உங்கள் கோடீஸ்வர கனவை நனவாக்கும்!
நீங்கள் மாதத்திற்கு ₹900 SIP செய்து சராசரியாக ஆண்டுக்கு 15% வருமானம் பெற்றால், 30 ஆண்டுகளில் சுமார் ₹50 லட்சம் நிதியை சேர்க்க முடியும். இது தவிர, உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது, முதலீட்டை அதிகரிப்பதன் மூலம் கோடீஸ்வர கனவை நனவாக்கலாம். மாதம் 900 ரூபாய் முதலீட்டுத் தொகையை SIP மூலம் 30 ஆண்டுகளுக்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரும் நிலையில், ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற அளவில் முதலீட்டை அதிகரித்தால் கூட, 30 ஆண்டு கால் இறுதியில் மொத்தம் ரூ.1.35 கோடி கிடைக்கும்.
SIP முதலீடு வெற்றி பெற கவனத்தில் கொள்ள வேண்டிய 3 விஷயங்கள்
முதலில் நீங்கள் எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறீர்களோ, அவ்வளவுக்கு கூட்டு வட்டி வருமானத்தின் நன்மை அதிகமாக இருக்கும். இரண்டாவது சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு பயப்பட வேண்டாம். ஏனென்றால், நீண்ட பந்தயத்திற்கு SIP ஒரு குதிரை. மூன்றாவது உங்கள் வருமானம் அதிகரிக்கும் போதெல்லாம், உங்கள் SIP தொகையை சிறிது அதிகரிக்கவும்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் கூட்டு வட்டி வருமானத்தை பெறுவதன் மூலம், ஒரு சிறிய முதலீடு கூட நீண்ட காலத்திற்கு பெரிய நிதியாக மாறும் என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் ஆபத்தும் உள்ளது. எனவே, எங்கும் முதலீடு செய்வதற்கு முன், கண்டிப்பாக நிதி ஆலோசகரின் உதவியைப் பெறுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ