SIP Mutual Fund: இன்றைய காலகட்டத்தில்,சிறிய சேமிப்புடன் எதிர்காலத்திற்காக ஒரு பெரிய நிதியை சேர்க்க, முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) ஒரு சிறந்த வழி. கூட்டு வட்டி வருமானத்தின் பலன் கொடுக்கும் மூலதன ஆதாயத்துடன், ஆயிரங்களில் செய்யப்படும் முதலீடு கோடிகளாகும். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் ரூ.4,600, ரூ.5,600, ரூ.6,600 அல்லது ரூ.7,600 என்ற அளவில் SIP முதலீட்டை தொடங்கினால், நீண்ட காலத்திற்கு கிடைக்கும் கார்பஸ் எவ்வளவாக இருக்கும் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கனவுகளை நனவாக்க உதவும் மியூச்சுவல் ஃபண்டு முதலீடு
SIP உத்தியை பின்பற்றி மியூச்சுவல் ஃபண்டுகளில் சரியான உத்தியை கடைபிடித்து தொகையை முதலீடு செய்வதன் மூலம், உங்களது சொந்த வீடு, ஆடம்பர வாகனம், நிம்மதியான ஓய்வு வாழ்க்கை போன்ற கனவுகளை நனவாக்க தேவையான நிதியை எளிதாக உருவாக்கலாம். SIP முதலீட்டிற்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12 சதவீதம் வரை மூலதன ஆதாயம் கிடைப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். முதலீட்டை 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் கூட்டு வட்டி வருமானத்தின் பலனை முழுமையாக பெறலாம். இதனால், பணம் பம்மடங்காக பெருகும்.
SIP மூலம் கோடிகளில் கார்பஸை உருவாக்க செய்ய வேண்டியது என்ன?
உங்களுக்கு 25 வயதாகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்த வயதில், சம்பாதிக்க ஆரம்பித்ததுமே, ஒரு சிறிய தொகையை தேர்ந்தெடுத்து 30 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்தால், 55 வயதிற்குள் நீங்கள் ஒரு கோடீஸ்வரர் ஆகலாம். நீங்கள் 30 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால் கூட, 60 வயதிற்குள் ஒரு மில்லியனர் ஆகிவிடுவீர்கள். ஆம், SIP-யில் செய்யும் தொடர் முதலீடு மூலம் உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும். இப்போதே தொடங்கி படிப்படியாக உங்கள் பெரிய கனவுகளை நனவாக்குங்கள்.
மாதம் ரூ.4,600 SIP முதலீட்டில் கிடைக்கும் கார்பஸ்
SIP மூலம் ரூ. மாதந்தோறும் ரூ.4,600 முதலீடு செய்தால், 30 ஆண்டுகளில் நீங்கள் மொத்தம் ரூ. 16,56,000 (16.6 லட்சம்) முதலீடு செய்திருப்பீர்கள். இந்த முதலீட்டிற்கு 12 சதவீத வருமானம் கிடைத்தால் கூட, இதில் கிடைக்கும் மூலதன ஆதாயம் ரூ. 1,25,16,477 (1.25 கோடி) கோடியாக இருக்கும், மேலும் முதிர்ச்சியடையும் போது உங்க்களுக்கு கிடைக்கும் நிதி ரூ. 1,41,72,477 (1.4 கோடி) கோடி என்ற அளவில் இருக்கும்.
மாதம் ரூ.5,600 SIP முதலீட்டில் கிடைக்கும் கார்பஸ்
SIP மூலம் ரூ. மாதந்தோறும் ரூ. 5,600 முதலீடு செய்தால், 30 ஆண்டுகளில் நீங்கள் மொத்தம் ரூ.20,16,000 (ரூ.20 லட்சம்) முதலீடு செய்திருப்பீர்கள். இந்த முதலீட்டிற்கு 12 சதவீத வருமானம் கிடைத்தால் கூட, இதில் கிடைக்கும் மூலதன ஆதாயம் ரூ.1,52,37,450 (1.5 கோடி) கோடியாக இருக்கும், மேலும் முதிர்ச்சியடையும் போது உங்க்களுக்கு கிடைக்கும் நிதி ரூ.1,72,53,450 (1.7 கோடி) கோடி என்ற அளவில் இருக்கும்.
மாதம் ரூ.6,600 SIP முதலீட்டில் கிடைக்கும் கார்பஸ்
SIP மூலம் ரூ. மாதந்தோறும் ரூ. 6,600 முதலீடு செய்தால், 30 ஆண்டுகளில் நீங்கள் மொத்தம் ரூ.23,76,000 (ரூ.23 லட்சம்) முதலீடு செய்திருப்பீர்கள். இந்த முதலீட்டிற்கு 12 சதவீத வருமானம் கிடைத்தால் கூட, இதில் கிடைக்கும் மூலதன ஆதாயம் ரூ.1,79,58,423(1.7 கோடி) கோடியாக இருக்கும், மேலும் முதிர்ச்சியடையும் போது உங்க்களுக்கு கிடைக்கும் நிதி ரூ.2,03,34,423 (1.7 கோடி) கோடி என்ற அளவில் இருக்கும்.
மாதம் ரூ.7,600 SIP முதலீட்டில் கிடைக்கும் கார்பஸ்
SIP மூலம் ரூ. மாதந்தோறும் ரூ. 7,600 முதலீடு செய்தால், 30 ஆண்டுகளில் நீங்கள் மொத்தம் ரூ.27,36,000 (ரூ.27 லட்சம்) முதலீடு செய்திருப்பீர்கள். இந்த முதலீட்டிற்கு 12 சதவீத வருமானம் கிடைத்தால் கூட, இதில் கிடைக்கும் மூலதன ஆதாயம் ரூ.2,06,79,396 (ரூ.2.06 கோடி) கோடியாக இருக்கும். முதிர்ச்சியடையும் போது உங்க்களுக்கு கிடைக்கும் நிதி ரூ.2,34,15,396 (ரூ.2.3 கோடி) கோடி என்ற அளவில் இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க | NPS: ரூ.5,000 மாத முதலீட்டில்... ஓய்வுக்கு பின் மாதம் ரூ.70,000 பென்ஷன் பெறலாம்
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: ஊழியர்களின் சம்பளம் இரட்டிப்பாகுமா? ஊதிய உயர்வு கணக்கீடு இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ