SIP Mutual Fund: கூட்டு வட்டி வருமானத்தின் பலனால்... ரூ.10,000 முதலீட்டிலும் லட்சாதிபதியாகலாம்

Power of Compounding in SIP: சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் மூலம் முதலீடு செய்வது கூட்டு வட்டி வருமானத்தின் சரியான பலனை அதிகபட்சமாக பெறலாம். கூட்டு வட்டியினால் நீண்ட கால சிறிய அளவிலான முதலீடுகளில் வருமானம் பெருகும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 5, 2025, 11:48 AM IST
  • பரஸ்பர நிதிய முதலீடுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி வருமானம்.
  • கூட்டு வட்டியினால் நீண்ட கால சிறிய அளவிலான முதலீடுகளில் பெருகும் வருமானம்.
  • நீண்ட கால முதலீடுகள் கொடுக்கும் அதிபட்ச பலன்கள்.
SIP Mutual Fund: கூட்டு வட்டி வருமானத்தின் பலனால்... ரூ.10,000 முதலீட்டிலும் லட்சாதிபதியாகலாம்

சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது இன்றைய காலகட்டத்தில் நீண்ட கால முதலீட்டிற்கான மிகவும் பிரபலமான முறையாகும். சாமானியர்களுக்கான சிறந்த திட்டாமான இதில், முதலீடு செய்வதால், உங்கள் வீடு வாங்கும் கனவு, குழந்தைகளின் கல்வி என உங்களது அனைத்து நிதி பொறுப்புகளும் எளிதாகும். SIP மூலம் முதலீட்டாளர்கள் தங்களால் இயன்ற சிறிய தொகைகளை மாத தவணைகளில் டெபாசிட் செய்யலாம். 

Add Zee News as a Preferred Source

நீண்ட கால முதலீடுகள் கொடுக்கும் அதிபட்ச பலன்கள்

சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் மூலம் முதலீடு செய்வது கூட்டு வட்டி வருமானத்தின் சரியான பலனை அதிகபட்சமாக பெறும் வாய்ப்பை அளிக்கிறது. இவற்றில், குறுகிய காலத்திற்கு அதிக பணத்தை முதலீடு செய்தல் மற்றும் நீண்ட காலத்திற்கு குறைந்த பணத்தை முதலீடு செய்தல் போன்ற நிகழ்வுகளில் பெறப்பட்ட வருமானத்தை ஒப்பிட்டு பார்க்கையில் அதன் மூலம் கிடைக்கும் ஆதாயம் அதிகமாக உள்ளதை புரிந்து கொள்ள முடியும். 

கூட்டு வட்டியினால் நீண்ட கால சிறிய அளவிலான முதலீடுகளில் பெருகும் வருமானம்

நீங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்யும்போது, ​​அதன் மீது பெறப்பட்ட வருமானம் அல்லது வட்டியை இரண்டு வழிகளில் பெருக்கலாம். முதலாவதாக, எளிய வட்டி அல்லது வருமானம். இதில் நீங்கள் டெபாசிட் செய்த பணத்திற்கான வட்டி கிடைக்கும். இரண்டாவதாக, கூட்டு வட்டி, இதில் நீங்கள் டெபாசிட் செய்த அசல் தொகையிலும் அதன் மீது ஈட்டப்பட்ட வட்டி மீதும் வட்டி கிடைக்கும். உதாரணமாக, நீங்கள் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, ஒரு வருடம் கழித்து அதன் மீது பெறப்பட்ட வட்டி 10 ஆயிரம் ரூபாய் என்று கருதப்பட்டு, அடுத்த வருடனம் உங்களது அசல் தொகையுடன் முதலாம் ஆண்டு ஈட்டப்பட்ட வட்டியையும் சேர்த்து ரூ. 1,10,000 முதலாக கருதப்பட்டு, அசல் மற்றும் வட்டி இரண்டுக்கும் வட்டி கிடைக்கும். 

பரஸ்பர நிதிய முதலீடுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி வருமானம்

கூட்டு வட்டி வருமானத்தின் சக்தியை (Power of Compounding in SIP) புரிந்து கொள்ளும் வகையில், இங்கே 3 நிகழ்வுகளில் கணக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கீடு 12 சதவீத வருடாந்திர வருமானத்தின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், பரஸ்பர நிதிய முதலீடுகளில், சராசரியாக குறைந்தபட்சம் 12% மூலதன ஆதாயம் இருப்பதை தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன.

SIP கால்குலேட்டர் மூலம் எளிய கணக்கீடு

20 ஆண்டுகளுக்கு ரூ.10,000 மாதாந்திர SIP

மாதாந்திர SIP: ரூ.10,000

வருவாய் மதிப்பீடு: 12% CAGR

20 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ரூ.24,00,000 (24 லட்சம்)

20 ஆண்டுகளுக்குப் பிறகு SIP மதிப்பு: ரூ.91,98,574 (92 லட்சம்)

மொத்த லாபம்: ரூ.67,98,574 (68 லட்சம்)

15 ஆண்டுகளுக்கு ரூ.15,000 மாதாந்திர SIP

மாதாந்திர SIP: ரூ.15,000

வருவாய் மதிப்பீடு: 12% CAGR

15 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ரூ. 27,00,000 (27 லட்சம்)

15 ஆண்டுகளுக்குப் பிறகு SIP இன் மதிப்பு: ரூ. 71,38,971 (71.39 லட்சம்)

மொத்த லாபம்: ரூ. 44,38,971 (44.39 லட்சம்)

10 ஆண்டுகளுக்கு ரூ.20,000 மாதாந்திர SIP

மாதாந்திர SIP: ரூ. 20,000

வருமான மதிப்பீடு: 12% CAGR

15 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ரூ. 24,00,000 (24 லட்சம்)

15 ஆண்டுகளுக்குப் பிறகு SIP இன் மதிப்பு: ரூ. 44,80,718 (45 லட்சம்)

மொத்த லாபம்: ரூ. 20,80,718 (21 லட்சம்)

பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | EPS Pension: இதை செய்யாவிட்டால் சரியான நேரத்தில் ஓய்வூதியம் கிடைக்காது, PF உறுப்பினர்களுக்கு முக்கிய அப்டேட்

மேலும் படிக்க | Top-Up SIP: மாதம் ரூ.2,500 முதலீடு போதும்... அதனை ரூ.1.7 கோடியாக பெருக்கும் மியூச்சுவல் ஃபண்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News