SIP Calculator: இன்றைய காலகட்டத்தில், அனைவரும் தங்கள் சிறிய சேமிப்பைக் கொண்டு எதிர்காலத்திற்கு ஒரு நல்ல நிதியை உருவாக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அதை வெற்றிகரமாக செய்ய, சரியான முதலீட்டை எங்கு செய்வது என்று பலருக்கு புரியவில்லை. எனவே இன்று நாம் ரூ.4,800 ரூபாய் என்ற அளவில் செய்யும் முதலீட்டில் எவ்வாறு ரூ.1 கோடி நிதியை உருவாக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு
நீங்கள் ஆயிரங்களை கோடிகளாக்க விரும்பினால், SIP மூலம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். ஆம், SIP முதலீட்டில் சரியான பரஸ்பர நிதியத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதன் மூலம், உங்களுக்காக ஒரு வலுவான நிதியை உருவாக்க முடியும். ஆம், SIP திட்டங்களில் சரியான உத்தியை கடைபிடித்து நிதியை முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 கோடி நிதியை சேர்க்கும் கனவை நிறைவேற்ற முடியும். SIP போன்ற ஒரு விருப்பத்தின் மூலம் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்தால், SIP முதலீட்டில் மாதம் தோறும் ரூ.4,800 முதலீடு செய்தால் கூட, எதிர்காலத்தில் ரூ. 1 கோடி எளிதாக (Investment Tips) பெறலாம்.
கூட்டு வட்டியின் பலன் (Power Of Compounding)
பரஸ்பர நிதியத்தில் கிடைக்கும் ஆண்டு முதலீட்டு ஆதாயம் குறைந்தபட்சம் 12% என்ற அளவில் இருக்கும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். அதோடு, கூட்டு வட்டியின் பலனுடன் பணம் எந்த அளவிற்கு பன்மடங்காகிறது என்பதை எளிதான கணக்கீடு மூலம் அறிந்து கொள்ளலாம்.
எத்தனை ஆண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரராக ஆகலாம்
நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.4800 முதலீடு செய்தால், 27 ஆண்டுகளில் உங்களுக்காக ஒரு வலுவான நிதியை உருவாக்க முடியும். முதலீட்டில் சராசரியாக 12 சதவீதம் வரை ஆண்டு வருமானம் கிடைத்தால் கூட நீங்கள் ரூ.1 கோடி நிதியை உருவாக்க முடியும்.
SIP முதலீட்டின் எளிய கணக்கீடு
நீங்கள் ரூ.4,800 என்ற அளவிற்கு 27 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், முதலீட்டுத் தொகை ரூ.15,55,200 மட்டுமே. ஆனால், இதில், உங்களுக்கு ரூ.88,23,902 மூலதன ஆதாயம் கிடைக்கும். இதில், முதலீட்டுத் தொகையும் வருமானமும் சேர்ந்து நிதியை ரூ.1,03,79,102 கோடியாக மாற்றும்.
ஸ்டெப்-அப் SIP உத்தி மூலம் குறுகிய காலத்தில் இலக்கை அடையலாம்
உங்கள் வருமானம் உயரும் போது, உங்கள் முதலீட்டையும்அதிகரிக்க விரும்பினால், நீங்கள் ஸ்டெப்-அப் SIP விருப்பத்தைத் தேர்வு செய்யலாம். இதில், உங்கள் முதலீட்டுத் தொகையை ஒவ்வொரு ஆண்டும் ஒரு நிலையான சதவீதம் (எ.கா. 10%) அதிகரித்தால், ரூ.1 கோடி நிதி இன்னும் விரைவாகப் பெறப்படும்.
பணத்தை பன்மடாங்காக்க தொடர் முதலீடு அவசியம்
SIP மூலம் உங்கள் நிதி இலக்குகளை அடைவதில் தொடர் முதலீடு ஒரு முக்கிய காரணி. மாதாந்திர அடிப்படையில் அல்லது காலாண்டு அடிபப்டையில் ஒரு நிலையான தொகையை தவறாமல் முதலீடு செய்து வந்தால், கூட்டு வட்டி வருமானத்தில் பலனால், பணம் எளிதில் பன்மடங்காகும்.
பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க | FD வட்டியை குறைத்து... வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்துள்ள சில முக்கிய வங்கிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ