மியூச்சுவல் ஃபண்டுகளில் முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) மூலம் முதலீடு செய்வதால், ஆயிரங்களை எளிதில் கோடிகளாக்கலாம். சாமானியர்கள் கூட எளிதில் இதில் முதலீடு செய்யலாம் என்பது இதன் சிறப்பு அம்சம். இதில் சிறிய அளவிலான முதலீட்டை நீண்ட காலம் தவறாமல் தொடங்குவதால், கோடீஸ்வர கனவை எளிதில் நிறைவேற்றலாம். பணத்தை பன்மடங்காக பெருக்கும் மிகவும் பயனுள்ள உத்திகளில் இதுவும் ஒன்றாகும்.
ஓய்வூதியத் திட்டமிடலுக்கு சில ஆண்டுகளுக்கு நிலையான முதலீடு தேவைப்படுகிறது. இளமையிலேயே முதலீட்டை தொடங்குவது உங்களுக்கு ஒரு நல்ல நிதியை உருவாக்க உதவும். ஒவ்வொரு மாதமும் வழக்கமான முதலீட்டுடன் ஒரு ஓய்வூதிய கார்பஸை உருவாக்க நினைத்தால், SIP ஒரு பொருத்தமான தேர்வாக இருக்கலாம். சீக்கிரமாகத் தொடங்குவது உங்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க உதவும்.
நீண்ட முதலீட்டு காலம் கூட்டு வட்டி விகிதத்தில் கிடைக்கும் மூலதன ஆதாயத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள உதவுகிறது. 30 வயதில் தொடங்கும் முதலீட்டு பழக்கம் மூலம் ஒருவர் ஓய்வு காலத்தில் நல்ல வளமான ஆடம்பரமான வாழ்க்கையை வாழலாம். 60 வயது ஓய்வூதிய வயதாக இருந்தால், ஒரு SIP திட்டத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர் ஓய்வூதிய நிதியை உருவாக்க குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் கிடைக்கும். இதில் செய்யப்படும் நிலையான முதலீட்டின் மூலம், பெரிய அளவில் நிதியை உருவாக்கி, நீங்கள் ஓய்வு பெறும் நேரத்தில் கோடீஸ்வரராகலாம்.
கோடீஸ்வர கனவை நிறைவேற்றும் எஸ் ஐ பி முதலீடு: முழுமையான கணக்கீட்டை அறிந்து கொள்ளலாம்
நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 மற்றும் ரூ.10,000 மட்டுமே முதலீடு செய்தால் உங்கள் செல்வம் எவ்வாறு வளரும் என்பதை ஒரு உதாரணம் மூலம் புரிந்துகொள்வோம்.
மியூச்சுவல் ஃபண்ட் SIP-யில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12% மூலதன ஆதாயம் கிடைப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறும் நிலையில், 30 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 முதலீடு செய்தால், மொத்தத் தொகை ரூ.1.5 கோடியைத் தாண்டும். எளிய கணக்கீடு இதோ:
மாதம் ரூ.5,000 முதலீடு
மொத்த முதலீட்டுத் தொகை: ரூ.18,00,000
மதிப்பிடப்பட்ட மூலதன வருமானம்: ரூ.1.36 கோடி
இறுதி கார்பஸ் மதிப்பு: ரூ.1.54 கோடி
மாதம் ரூ.10,000 முதலீடு
இதேபோல், 12% வருடாந்திர வருமானத்தில் ரூ.10,000 மாதாந்திர SIP எவ்வளவு வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் புரிந்து கொளவோம்.
மொத்த முதலீட்டுத் தொகை: ரூ.36,00,000
மதிப்பிடப்பட்ட வருமானம்: ரூ.2.72 கோடி
இறுதி கார்பஸ் மதிப்பு: ரூ.3.08 கோடி
அதாவது, SIP தொகையை ரூ.5,000 அதிகரிப்பது 30 ஆண்டுகளுக்குள் ஓய்வூதிய கார்பஸின் மதிப்பை இரட்டிப்பாக்கக்கூடும். இருப்பினும், சந்தை நிலவரங்களைப் பொறுத்து வருமானம் ஏற்ற இறக்கமாக இருக்கலாம்.
பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க | தங்கம் விலை அதிரடியாக சரியும்... அதுவும் 2 மாதங்களில்... எவ்வளவு குறையும் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ