)
மியூச்சுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதிய முதலீடுகள், ஆயிரங்களை கோடிகளாக்கும் வல்லமை படைத்தவை. இவை பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீடுகள் என்றாலும், குறைவான ரிஸ்க் கொண்டது என்பது இதன் சிறப்பு அம்சங்களில் ஒன்று. அதோடு வழக்கமான முதலீடுகளை விட அதிக வருமானத்தை தரக்கூடிய சிறந்த முதலீடு.
கூட்டு வட்டி வருமானத்தின் அடிப்படையில் கிடைக்கும் வருமானம்
பொதுவாக வழக்கமாக செய்யும் முதலீடுகள் மூலம், 8% அல்லது 9% என்ற அளவில் தான் வருமானத்தை எதிர்பார்க்க முடியும். ஆனால் மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகளில், சராசரி ஆண்டு வருமானம் 12% என்ற அளவில் இருப்பதை கடந்த கால தரவுகள் எடுத்து காட்டுகின்றன. பொருளாதார வல்லுனர்களும் இதையே கூறுகின்றனர். இதில் கிடைக்கும் வருமானம் அல்லது மூலதன ஆதாயம், கூட்டு வட்டி வருமானத்தின் அடிப்படையில் உள்ளதால், பணம் எளிதில் பன்மடங்கு ஆகிறது.
கூட்டு வட்டியின் பலனை அதிகபட்சமாக பெற நீண்ட கால முதலீடு அவசியம்
சம்பாதிக்க ஆரம்பித்த உடனேயே, முதலீட்டை தொடங்குவது சிறந்த உத்தியாக கருதப்படுகிறது. ஏனெனில் நீண்ட கால முதலீடு மூலம், கூட்டு வட்டி வருமானத்தின் பலனை அதிகபட்சமாக பெறலாம். இன்றைய காலகட்டத்தில் ரூ.4000 என்பது மிகப்பெரிய தொகை என்று கூற இயலாது. இளமைக்காலத்தில், தேவையற்ற செலவுகள் சிலவற்றை குறைத்துக் கொண்டாலே இந்த அளவு சேமிக்க முடியும். இதனை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது, அது கோடிகளாக பெருகுகிறது.
மாதம் ரூ.4,200 முதலீட்டில் கிடைக்கும் கார்ப்பஸ்
உங்களது இருபதாவது வயதில் பரஸ்பர நிதியத்தில் ரூ.4200 என்ற அளவிலான மாத முதலீட்டை தொடங்கினால், நீங்கள் ஓய்வு பெறும்போது அதாவது அறுபதாவது வயதில், உங்களிடம் சுமார் ரூ.4 கோடி இருக்கும். குறைந்தபட்ச சராசரி ஆண்டு வருமானமான 12 சதவீதம் என்ற அளவில் இந்த வருமானம் கணக்கிடப்பட்டுள்ளது.
40 ஆண்டு கால தொடர் முதலீட்டில் கோடிகளைத் தாண்டும் வட்டி வருமானம்
20 வயது முதல் 60 வயது வரை மேற்கொண்ட 40 ஆண்டு கால தொடர் முதலீட்டில் நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ. 20,16,000 என்ற அளவில் இருக்கும். இதில் மூலதன ஆதாயம் மட்டும், ரூ.3,91,14,878 என்ற அளவில் இருக்கும். அசல் மற்றும் மூலதன ஆதாயம் இரண்டையும் சேர்க்கும் போது, இறுதியாக உங்களிடம் ரூ. 4,11,30,898 என்ற அளவில் இருக்கும். நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கான வரியை செலுத்திய பிறகும் கூட உங்களிடம் சுமார் ரூ.4 கோடி கார்ப்பஸ் இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ