SIP Mutual Funds: 10 ஆண்டுகளில் ரூ.1 கோடி பெற எவ்வளவு முதலீடு தேவை?

SIP மூலம் செய்யப்படும் நீண்ட கால முதலீடு பணத்தை பெருக்க உதவுகிறது, ஏனெனில் இதில் கூட்டு வட்டியில் பலன் கிடைக்கிறது. இதில் உங்கள் வசதிக்கேற்ப ஒவ்வொரு மாதமும், காலாண்டும் அல்லது ஆண்டுதோறும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்யலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 23, 2025, 10:36 AM IST
  • சரியான மியூச்சுவல் ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
  • எஸ்ஐபியில் முதலீடு கூட்டு வட்டி வருமானம் தரும் மந்திரம்.
  • ₹1 கோடி நிதி இலக்கை அடைவது எப்படி?
SIP Mutual Funds: 10 ஆண்டுகளில் ரூ.1 கோடி பெற எவ்வளவு முதலீடு தேவை?

SIP என்னும் முறையான முதலீட்டுத் திட்டம் என்பது பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதற்கான சிறந்த வழி. இதில் உங்கள் வசதிக்கேற்ப ஒவ்வொரு மாதமும், காலாண்டும் அல்லது ஆண்டுதோறும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்யலாம். SIP மூலம் செய்யப்படும் நீண்ட கால முதலீடு பணத்தை பெருக்க உதவுகிறது, ஏனெனில் இதில் கூட்டு வட்டியில் பலன் கிடைக்கிறது..

Add Zee News as a Preferred Source

SIP சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு எதிராக பாதுகாக்க உதவுகிறது மற்றும் ஓய்வு, குழந்தைகளின் கல்வி, வீடு வாங்குதல் போன்ற நீண்ட கால இலக்குகளுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது. SIP முதலீட்டில் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இது சாமான்ய மக்கள் முதல் பணக்காரர் வரை அனைத்து வருமான நிலையில் உள்ள மக்களும் அணுகக்கூடியதாக உள்ளது.

₹1 கோடி நிதி இலக்கை அடைவது எப்படி?

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் சராசரியாக ஆண்டு வருமானம் 12% முதல் 16% வரை வழங்குவதாக பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். இதில் சராசரியாக 12% ஆண்டு வருமானம் கிடைத்தால், 10 ஆண்டுகளில் ரூ. 1 கோடி பெற, ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.45,000 என்ற அளவில் எஸ்ஐபியில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் இன்னும் கொஞ்சம் ரிஸ்க் எடுத்தால், 15% ஆண்டு வருமானம் பெறலாம். ஒவ்வொரு மாதமும் ரூ.39 ஆயிரம் முதலீடு செய்தால் போதும்.

கூட்டு வட்டி வருமானம் என்னும் மந்திரம்

SIP முதலீட்டின் மிக முக்கியமான விஷயம் "கூட்டு வட்டி வருமானம் என்னும் மந்திரம்" ஆகும். உங்கள் முதலீடு எவ்வளவு காலம் நீடிக்கிறதோ, அவ்வளவு அதிக லாபம் கிடைக்கும். உதாரணமாக, முதல் 5 ஆண்டுகளில் ₹27 லட்சத்தை டெபாசிட் செய்திருந்தால், அடுத்த 5 ஆண்டுகளில் ₹1 கோடி என்ற இலக்கை கூட்டுத்தொகையின் உதவியுடன் அடையலாம்.

சரியான மியூச்சுவல் ஃபண்டைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

ரிஸ்க்கை சமன் செய்ய ஒற்றை நிதியில் முதலீடு செய்வதற்குப் பதிலாக தனது போர்ட்ஃபோலியோவை வெவ்வேறு வகை நிதிகளில் முதலீடு செய்ய வேண்டும். ஏனெனில், எந்த ஒரு நிதியமும் சீரான வருமானத்தை கொடுக்கும் என எதிர்பார்க்க முடியாது. 

1. முதலீட்டில் 40% நிதி லார்ஜ் கேப் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யப்படுகிறது. இது போர்ட்ஃபோலியோவுக்கு ஸ்திரத்தன்மையை வழங்குகிறது

2. முதலீட்டில் 30% மிட்-கேப் மற்றும் ஸ்மால்-கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது., அவை அதிக வளர்ச்சி திறன் கொண்டவை. அதே சமயத்தில் கொஞ்சம் ரிஸ்கும் உண்டு

3. புதிய வாய்ப்புகளைக் காணக்கூடிய துறைசார் மற்றும் கருப்பொருள் நிதிகளில் 20% முதலீடு.

4. தங்கம் ETF நிதியில் 10% முதலீடு. அதனால் முதலீடு பன்முகத்தன்மையுடன் இருக்கும்

பல்வகைப்படுத்தல் ரிஸ்க் மற்றும் வருமானத்திற்கு இடையே சரியான சமநிலையை பராமரிக்கிறது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இது சந்தை ஏற்ற இறக்கம் இருந்தபோதிலும் நீண்ட காலத்திற்கு நல்ல வருமானத்திற்கு வழிவகுக்கிறது.

மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

சந்தைகள் நிலையற்றதாக இருக்கும்:

ஈக்விட்டி முதலீடுகள் நிலையற்றவை. மேலும் உங்கள் இலக்க்கை எட்டும் நிலையில், ஒரு பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சி ஏற்பட்டால், உங்கள் வருமானம் பாதிக்கப்படலாம்.

அளவுக்கு அதிக எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை கொடுக்கும்:

பொதுவாக, 15% வருமானத்திற்கு உத்தரவாதம் இல்லை. வருமானம் குறைவாக இருந்தால், முதலீட்டு காலத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது SIP தொகையை அதிகரிக்க வேண்டும்.

பணப்புழக்கச் சிக்கல்

ஒவ்வொரு மாதமும் ₹45,000 எஸ்ஐபியில் முதலீடு செய்வது அதிக வருமானம் உள்ளவர் மற்றும் தனது செலவுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவருக்கு மட்டுமே சாத்தியமாகும். எனினும், உங்களுக்கு ஏற்ற ஒரு தொகையை தேர்ந்தெடுக்கலாம். ரூ.1000 என்ற அளவில் கூட முதலீட்டை தொடங்கலாம்.

வரி விதிப்பின் தாக்கம்

₹1 லட்சத்துக்கும் மேலான நீண்ட கால மூலதன ஆதாயங்களுக்கு 10% வரி விதிக்கப்படுகிறது, இது உங்கள் நிகர வருமானத்தை சிறிது குறைக்கலாம்.

பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | Retirement Planning: நிம்மதியான ஓய்வு காலத்திற்கு உதவும்... அரசின் சில சூப்பர் முதலீட்டு திட்டங்கள்

மேலும் படிக்க | ஏப்ரல் 1 முதல் UPS: பதிவு செய் கட்-ஆஃப் டேட் இதுதான், முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News