)
'முதலீடு' என்ற வார்த்தை பணக்காரர்களுக்கு மட்டுமே, அதற்கு நிறைய பணம் தேவை என்ற எண்ணத்தை மாற்ற வேண்டிய நேரம் இது. இன்றைய காலகட்டத்தில், முதலீடு செய்ய ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான ரூபாய் தேவையில்லை. மாதத்திற்கு 500 ரூபாய் சேமிப்பதன் மூலம் எதிர்காலத்திற்கான நிதி தேவையை பூர்த்தி செய்ய வளமான அடித்தளம் அமைக்கலாம். ரூபாய் 500 என்பது ஒரு சிறிய தொகை தான். மாணவர், இல்லத்தரசி அல்லது குறைந்த வருமானம் உள்ளவர்கள் என யாராலும் எளிதாக சேமிக்க முடியும். மாதத்திற்கு 500 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம் லட்சக்கணக்கான நிதியை உருவாக்கக்கூடிய சில சிறந்த திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
1. SIP (முறையான முதலீட்டுத் திட்டம்)
SIP அதாவது முறையான முதலீட்டுத் திட்டம் என்பது பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதற்கான மிகவும் பிரபலமான மற்றும் எளிதான வழியாகும். பங்குச் சந்தை முதலீட்டை ரிஸ்க் அதிகம் இல்லாமல் செய்து வருமானத்தை பெற விரும்புவோருக்கும், சிறிது ரிஸ்க் எடுத்து பணவீக்கத்தை வெல்லும் வருமானத்தை பெற விரும்புவோருக்கும் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யக்கூடியவர்களுக்கும் இது சிறந்தது. SIP உத்தி மூலம், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தேதியில் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.500 போன்ற ஒரு சிறிய தொகை கழிக்கப்பட்டு, நீங்கள் தேர்ந்தெடுத்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திற்குச் செல்கிறது. இதில் சந்தை ஆபத்து இருந்தாலும், நீண்ட காலத்திற்கு SIP சிறந்த வருமானத்தை அளித்துள்ளதை தரவுகள் மூலம் அறியலாம். நீண்ட கால முதலீட்டில், SIP சராசரியாக 12% அல்லது அதற்கு மேற்பட்ட வருமானத்தை அளிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
SIP கணக்கீடு
SIP மூலம் செய்யப்பட்ட முதலீட்டிற்கு மாதத்திற்கு ரூ.500 முதலீடு செய்து சராசரியாக 12% வருமானத்தைப் பெற்றால், உங்கள் பணம் எவ்வாறு வளரும் என்பதை கணக்கீடு மூலம் அறிந்து கொள்ளலாம்:
15 ஆண்டுகளுக்குப் பிறகு: உங்கள் மொத்த முதலீடு ரூ.90,000 என்ற அளவில் இருக்கும், ஆனால் உங்களுக்கு தோராயமாக ரூ.2,37,966 கிடைக்கும்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு: உங்கள் மொத்த முதலீடு ரூ.1,20,000 என்ற அளவில் இருக்கும், மேலும் முதிர்வுத் தொகை தோராயமாக ரூ.4,59,929 என்ற அளவில் அதிகரிக்கும்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு: உங்கள் மொத்த முதலீடு ரூ.1,50,000 என்ற அளவில் இருக்கும், ஆனால் உங்கள் நிதி ரூ.8,51,103 என்ற அளவில் வளர்ந்திருக்கும்.
2. PPF (பொது வருங்கால வைப்பு நிதி)
ரிஸ்க் எதுவும் இல்லாத, மிகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் ஒரு சிறிய முதலீட்டை விரும்பபுபவர்களுக்கு, PPF சிறந்த தேர்வு. வங்கி அல்லது தபால் நிலையத்தின் மூலம் PPF கணக்கைத் திறந்து வருடத்திற்கு ரூ.500 இல் முதலீடு செய்யத் தொடங்கலாம். தற்போது இது 7.1% கூட்டு வட்டி விகிதத்தைப் பெறுகிறது. இந்தத் திட்டம் 15 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது, ஆனால் நீங்கள் அதை 5 ஆண்டுகள் கொண்ட தொகுதிகளாக நீட்டிக்கலாம்.
PPF கணக்கீடு
PPF திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.500 (ஆண்டுக்கு ரூ.6,000) டெபாசிட் செய்தால்:
15 ஆண்டுகளுக்குப் பிறகு: உங்கள் மொத்த முதலீடு ரூ.90,000 என்ற அளவில் இருக்கும் இதில் உங்களுக்கு ரூ.1,62,728 கிடைக்கும்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு (திட்டத்தை நீட்டிக்கும்போது): உங்கள் மொத்த முதலீடு ரூ.1,20,000 என்ற அளவில் இருக்கும், உங்கள் நிதி ரூ.2,66,332 என்ற அளவில் வளர்ந்திருக்கும்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு (திட்டத்தை நீட்டிக்கும்போது): உங்கள் மொத்த முதலீடு ரூ.1,50,000 என்ற அளவில் இருக்கும், மேலும் உங்கள் நிதி ரூ.4,12,321 என்ற அளவில் வளர்ந்திருக்கும்.
3. சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY)
தந்தையாக மகளின் எதிர்காலத்திற்கான, சுகன்யா சம்ரிதி யோஜனா என்னும் இந்த செல்வ மகள் சேமிப்புத் திட்டம் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். மகள்களின் கல்வி மற்றும் திருமணத்திற்காக பணத்தைச் சேமிக்க மத்திய அரசின் இந்தத் திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.மகள் பிறந்தது முதல் மகளுக்கு 10 வயது ஆகும் முன் இந்தக் கணக்கைத் திறக்கலாம். இதில் ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ரூ.250 டெபாசிட் செய்யலாம். தற்போது இதற்கு 8.2% வட்டி கிடைக்கிறது, இது PPF திட்டத்தை விட அதிகம். இதில், நீங்கள் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். கணக்கு 21 ஆண்டுகளில் முதிர்ச்சியடைகிறது.
செல்வ மகள் சேமிப்புத் திட்டம் கணக்கீடு
சுகன்யா சம்ரிதி யோஜனாவில் உங்கள் மகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.500 முதலீடு செய்தால்;
15 ஆண்டுகளுக்கு மொத்த முதலீடு: ரூ.90,000.
21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும் போது: உங்களுக்கு சுமார் ரூ.2,77,103 கிடைக்கும். இதில் சிறப்பு என்னவென்றால், முதலீடு 15 ஆண்டுகளுக்கு மட்டும் செய்தால் போதும், ஆனால் வட்டி 21 ஆண்டுகள் முழுவதும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.
4. தபால் அலுவலக RD (தபால் அலுவலக தொடர் வைப்புத்தொகை)
குறுகிய காலத்திற்கு நிலையான வருமானம் தரும் தபால் அலுவலக RD குறுகிய காலத்திற்கு ஒரு நிலையான இலக்கிற்கு (பைக் வாங்குவது அல்லது விடுமுறைக்குச் செல்வது போன்றவை) பணத்தைச் சேமிக்க விரும்பினால், தபால் அலுவலக RD சிறந்த வழி. தபால் அலுவலக RD என்பது 5 ஆண்டு திட்டமாகும், இதில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். தற்போது, இதற்கு 6.7% வட்டி வழங்கப்படுகிறது. இது முற்றிலும் பாதுகாப்பான முதலீடு.
தபால் அலுவலக RD கணக்கீடு
ஒவ்வொரு மாதமும் தபால் அலுவலக RD-யில் ரூ.500 டெபாசிட் செய்தால்-
5 ஆண்டுகளில் மொத்த முதலீடு: ரூ.30,000.
5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடையும் போது: உங்களுக்கு ரூ.35,681 கிடைக்கும் (இதில் ரூ.5,681 வட்டியாக இருக்கும்).
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ