SIP vs PPF: ரூ.10,000 முதலீட்டை ரூ.50 லட்சமாக பெருக்க உதவும் முதலீடு எது?

SIP vs PPF: முதலீட்டில் நல்ல வருமானத்தைப் பெற, சரியான திட்டமிடல் அவசியம். இந்நிலையில் மாதம் ரூ10,000 என்ற அளவில் செய்யப்படும் தொடர் முதலீட்டில், SIP மற்றும் PPF ஆகிய இரண்டில் எது அதிக வருமானத்தை கொடுக்கக் கூடியது என்பதை அறிந்து கொள்ளலாம்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 14, 2025, 04:46 PM IST
  • எஸ்ஐபி சாமானியர்கள் தங்கள் வசதிக்கேற்ப முதலீடு செய்ய உதவும் வகையில் உள்ளது.
  • ஓய்வு காலத்திற்கான நிதியை திட்டமிட, சிறந்த முதலீடு எது?
  • எஸ்ஐபி மற்றும் பிபிஎஃப் இரண்டில் அதிக வருமானம் தரும் நிதி எது?
SIP vs PPF: ரூ.10,000 முதலீட்டை ரூ.50 லட்சமாக பெருக்க உதவும் முதலீடு எது?

Investment Tips In Tamil: நீண்ட கால முதலீட்டை பொருத்தவரை பரஸ்பர நிதியம் பொது வருங்கால வைப்பு நிதி ஆகிய இரண்டுமே, முதலீட்டிற்கான சிறந்த தேர்வுகளாக இருக்கும். ஓய்வு காலத்தில் யாரையும் சாராமல், தன்னம்பிக்கையுடன் வாழ, ஓய்வு காலத்திற்கான நிதியை திட்டமிட, இரண்டுமே சிறந்த முதலீடுகள் தான்.

Add Zee News as a Preferred Source

முதலீட்டில் நல்ல வருமானத்தைப் பெற, சரியான திட்டமிடல் அவசியம். இந்நிலையில் மாதம் ரூ10,000 என்ற அளவில் செய்யப்படும் தொடர் முதலீட்டில் (வருடத்திற்கு ரூ.1,20,000), SIP மற்றும் PPF ஆகிய இரண்டில் எது அதிக வருமானத்தை கொடுக்கக் கூடியது என்பதை ஒரு எளிய கணக்கீட்டின் மூலம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

எஸ்ஐபி முதலீடு என்றால் என்ன

பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்ய கடைப்பிடிக்கும் SIP என்னும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான், சாமானியர்கள் தங்கள் வசதிக்கேற்ப முதலீடு செய்ய உதவும் வகையில் உள்ளது. பரஸ்பர நிதியம் பங்குச்சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீடு என்றாலும், பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதை விட இதில் ரிஸ்க் குறைவு. வங்கிகளுடன் ஒப்பிடுகையில் இதில் கிடைக்கும் அதிக வருமானமும் கூட்டு வட்டியின் பலனும், இதனை கவர்ச்சிகரமான முதலீடாக ஆக்கியுள்ளது. இதில் ஆண்டிற்கு 12 % என்ற அளவில் வருமானம் கிடைப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொது வருங்கால வைப்பு நிதி

பொது வருங்கால வைப்பு நிதி என்னும் PPF, அரசின் திட்டம் என்பதால் இது மிகவும் பாதுகாப்பான திட்டம் என்பதை மறுக்க இயலாது. தற்போது இதில் 7.1% என்ற அளவில். இதில் அதிகபட்சமாக ஆண்டிற்கு ஒன்று. ஐந்து லட்சம் முதலீடு செய்யலாம்.

எஸ்ஐபி மற்றும் பிபிஎஃப்: அதிக வருமானம் தரும் நிதி எது?

மாதம் ரூ.10,000 என்ற அளவில், ஆண்டிற்கு 1,20,000 ரூபாய் முதலீடு செய்தால், எஸ்ஐபி மற்றும் பிபிஎஃப் ஆகிய இரண்டில் அதிக வருமானம் தருவது எது என்பதை எளிய கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SIP முதலீடு: ஆண்டுக்கு ரூ.1,20,000 முதலீட்டில் 15 ஆண்டுகளில் எவ்வளவு நிதியை சேர்க்கலாம்?

நீங்கள் SIP முதலீட்டு முறையில் ஆண்டுக்கு ரூ.1,20,000 (மாதத்திற்கு ரூ.10,000) முதலீடு செய்தால், உங்கள் மொத்த முதலீடு 15 ஆண்டுகளில் ரூ.18,00,000 ஆக இருக்கும். சராசரியாக 12 சதவீத ஆண்டு வருமானம் என்று வைத்துக் கொண்டால், 15 ஆண்டுகளின் முடிவில் உருவாக்கப்படும் மொத்த நிதி கார்பஸ் தோராயமாக ரூ.50,45,760 ஆக இருக்கும், இதில் ரூ.32,45,760 மூலதன ஆதாயங்களும் அடங்கும்.

PPF முதலீடு: ஆண்டுக்கு ரூ.1,20,000 முதலீட்டில் 15 ஆண்டுகளில் எவ்வளவு நிதியை சேர்க்கலாம்?

நீங்கள் ஒரு PPF திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1,20,000 முதலீடு செய்தால், 15 ஆண்டுகளில் உங்கள் மொத்த முதலீடு ரூ.18,00,000 ஆக இருக்கும். இருப்பினும், ஆண்டு வருமானம் 7.1 சதவீதமாக இருந்தால், கிடைக்கும் வட்டி ரூ.14,49,567 என்ற அளவில் இருக்கும். இதன் மூலம், முதரிச்சித் தொகை ரூ.32,41,567 (அசல் + வட்டி) என்ற அளவில் இருக்கும்.

பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | SIP Mutual Fund: கோடீஸ்வர கனவை நனவாக்க... மாதம் ரூ.3000 முதலீடு போதும்... எளிய கணக்கீடு இதோ

மேலும் படிக்க | SWP: ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்க உதவும் பரஸ்பர நிதியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News