SIP என்பது மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான எளிதான வழி மட்டுமல்ல, மிக சிறந்த வழியாகவும் உள்ளது. இதில், ஆர்டி திட்டத்தை போல, ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும் அல்லது ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்ய வேண்டும். இதில், நல்ல வருமானத்துடன் கூட்டு வட்டியின் பலனும் கிடைப்பதால், முதலீட்டாளர்களின் விருப்ப முதலீடாக உள்ளது.
பங்குச்சந்தையின் தொடர் சரிவு
பரஸ்பர நிதிய முதலீடுகள், சாமான்யர்களுக்கான சிறந்த முதலீடாக இருக்கும் நிலையில், பங்குச்சந்தையின் தொடர் சரிவு முதலீட்டாளர்களுக்கு சிறிது கலக்கத்தை கொடுத்துள்ளது. எனினும், இதற்கான பணத்தை கலக்கத்துடன் எடுப்பதால், பயன் இல்லை என்கின்றனர் நிபுணர்கள். சரிவுக்கு மத்தியிலும் முதலீட்டாளர்கள் தங்கள் எஸ்ஐபியை நிறுத்தக் கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
SIP மற்றும் STP வகை முதலீடுகள்
SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கிறீர்கள் என்றால், தவறுதலாகக் கூட அதை நிறுத்தக் கூடாது. சரிவின் போது SIP மூலம் செய்யப்படும் உங்கள் முதலீடு சந்தை மீண்டு வரும்போது உங்களுக்கு பெரிய லாபத்தைத் தரும். பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய SIP மற்றும் STP ஆகிய இரண்டு முறைகளை பயன்படுத்துவது பலன் அளிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
SIP என்றால் என்ன?
முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) பற்றி பலருக்கு தெரியும். இதில், முதலீட்டாளரின் வசதிக்கேற்ப, ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும் அல்லது ஒவ்வொரு காலாண்டிலும் ஒரு நிலையான தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய இது உங்களை அனுமதிக்கிறது. மாதந்தோறும் சம்பளம் பெறும் உழைக்கும் மக்களுக்கு இந்த வழி மிகவும் வசதியாக உள்ளது. இது முதலீட்டில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வாய்ப்பளிக்கிறது.
STP என்றால் என்ன?
முறையான பரிமாற்றத் திட்டம் (STP) குறைவான முதலீட்டாளர்களால் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் இருந்து மற்றொரு திட்டத்திற்கு முன்பே தீர்மானிக்கப்பட்ட தொகையை மாற்றுவதற்கு இது உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. கடன் நிதிகளில் இருந்து ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு மொத்த முதலீடுகளை மாற்ற விரும்பும் முதலீட்டாளர்களுக்கு STP நன்மை பயக்கும். இது முதலீட்டுடன் தொடர்புடைய அபாயத்தைக் குறைக்கிறது.
கடன் நிதிகளில் மொத்த முதலீடு
நீங்கள் அரசு அல்லது தனியார் வேலையில் பணிபுரிந்து, ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் உங்கள் சம்பளம் உங்கள் சேமிப்புக் கணக்கில் வந்தால், SIP தான் உங்களுக்கான சரியான தேர்வாக இருக்கும். ஆனால், சுயதொழில் செய்பவராக இருந்தால் அல்லது வியாபாரம் செய்திருந்தால், STP சரியான தேர்வாக இருக்கும். இதற்குக் காரணம் சுயதொழில் செய்பவர்கள் மற்றும் தொழில் செய்பவர்களின் வருமானம் நிலையானதாக இருக்காது. சில மாதங்களில் அதிக வருமானமும், சில மாதங்களில் குறைந்த வருமானமும் கிடைக்கும். அவர்களுக்கு அதிக வருமானம் இருந்தால், அத்தகையவர்கள் கடன் நிதிகளில் மொத்தமாக முதலீடு செய்யலாம். பிறகு அந்த ஃபண்டிலிருந்து படிப்படியாக STP மூலம் மியூச்சுவல் ஃபண்டின் ஈக்விட்டி திட்டத்திற்குப் பணத்தை மாற்றலாம்.
பங்கு சந்தை வீழ்ச்சியின் போது SIP மற்றும் STP இரண்டில் எது அதிக நன்மை பயக்கும்?
சந்தை வீழ்ச்சியின் போது STP மூலம் முதலீடு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சந்தை சரிவு எப்போது முடிவுக்கு வரும் என்று யாருக்கும் தெரியாது என்பதே இதற்குக் காரணம். அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு மாதமும் உங்கள் பணம் எஸ்டிபி மூலம் ஈக்விட்டி ஃபண்டில் கொஞ்சம் கொஞ்சமாகச் செல்லும். இது உங்கள் சராசரி கொள்முதல் விலையை குறைவாக வைத்திருக்கும். முதலீட்டின் எளிய கொள்கை என்னவென்றால், நீங்கள் முதலீடு செய்யும் நிதிகளுக்கான முதலீட்டு பராமரிப்பு கட்டணம் அல்லது செலவு குறைவாக இருந்தால், உங்கள் லாபம் அதிகமாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையின் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே தவிர, முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவது அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.)
மேலும் படிக்க | லட்சங்களை கோடிகளாக்கும் SIP... ஓய்வில் போது கையில் ரூ.5 கோடி இருக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









