)
Small Saving Schemes: சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், சுகன்யா சம்ரித்தி யோஜனா என்றழைக்கப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 2025-26 நிதியாண்டின் நான்காவது காலாண்டிலும் மாற்றமின்றி முன்னர் இருந்த விகிதங்களிலேயே தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் ஜனவரி-மார்ச் காலாண்டில் மாற்றமின்றி இருக்கும் என்று நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"2025-26 நிதியாண்டின் நான்காவது காலாண்டான, ஜனவரி 1, 2026 முதல் மார்ச் 31, 2026 வரை உள்ள காலத்திற்கான பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள், 2025-26 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டிற்கு (செப்டம்பர் 1, 2025 முதல் டிசம்பர் 31, 2025 வரை) அறிவிக்கப்பட்ட விகிதங்களிலிருந்து மாற்றமின்றித் தொடரும்," என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி-மார்ச் 2026 காலாண்டிற்குப் பொருந்தக்கூடிய அனைத்து 13 சிறு சேமிப்புத் திட்டங்களின் சமீபத்திய வட்டி விகிதங்களை இங்கே காணலாம்:
அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு (Post Office Savings Account)
வட்டி விகிதம் 01.01.2026 முதல் 30.3.2026 வரை: 4.0
கூட்டு வட்டி கணக்கிடும் காலம்: ஆண்டுதோறும்
1 வருட கால வைப்பு (1 Year Time Deposit)
வட்டி விகிதம்01.01.2026 முதல் 30.3.2026 வரை: 6.9 (₹10,000/-க்கு ஆண்டு வட்டி ₹708)
கூட்டு வட்டி கணக்கிடும் காலம்: காலாண்டுக்கு ஒருமுறை
2 வருட கால வைப்பு (2 Year Time Deposit)
வட்டி விகிதம் 01.01.2026 முதல் 30.3.2026 வரை: 7.0 (₹10,000/-க்கு ஆண்டு வட்டி ₹719)
கூட்டு வட்டி கணக்கிடும் காலம்: காலாண்டுக்கு ஒருமுறை
3 வருட கால வைப்பு (3 Year Time Deposit)
வட்டி விகிதம் 01.01.2026 முதல் 30.3.2026 வரை: 7.1 (₹10,000/-க்கு ஆண்டு வட்டி ₹719)
கூட்டு வட்டி கணக்கிடும் காலம்: காலாண்டுக்கு ஒருமுறை
5 வருட கால வைப்பு (5 Year Time Deposit)
வட்டி விகிதம் 01.01.2026 முதல் 30.3.2026 வரை: 7.5 (₹10,000/-க்கு ஆண்டு வட்டி ₹771)
கூட்டு வட்டி கணக்கிடும் காலம்: காலாண்டுக்கு ஒருமுறை
5 வருட தொடர் வைப்புத் திட்டம் (5 Year Recurring Deposit Scheme)
வட்டி விகிதம் 01.01.2026 முதல் 30.3.2026 வரை: 6.7
கூட்டு வட்டி கணக்கிடும் காலம்: காலாண்டுக்கு ஒருமுறை
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme)
வட்டி விகிதம் 01.01.2026 முதல் 30.3.2026 வரை: 8.2 (₹10,000/-க்கு காலாண்டு வட்டி ₹205)
கூட்டு வட்டி கணக்கிடும் காலம்: காலாண்டுக்கு ஒருமுறை மற்றும் வழங்கப்படும்
மாதாந்திர வருமானக் கணக்கு (Monthly Income Account)
வட்டி விகிதம் 01.01.2026 முதல் 30.3.2026 வரை: 7.4 (₹10,000/-க்கு மாத வட்டி ₹62)
கூட்டு வட்டி கணக்கிடும் காலம்: மாதந்தோறும் மற்றும் வழங்கப்படும்
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (VIII வெளியீடு) (National Savings Certificate (VIII Issue))
வட்டி விகிதம் 01.01.2026 முதல் 30.3.2026 வரை: 7.7 (₹10,000/-க்கு முதிர்வுத் தொகை ₹14,490)
கூட்டு வட்டி கணக்கிடும் காலம்: ஆண்டுதோறும்
பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம் (Public Provident Fund Scheme)
வட்டி விகிதம் 01.01.2026 முதல் 30.3.2026 வரை: 7.1
கூட்டு வட்டி கணக்கிடும் காலம்: ஆண்டுதோறும்
கிசான் விகாஸ் பத்திரம் (Kisan Vikas Patra)
வட்டி விகிதம் 01.01.2026 முதல் 30.3.2026 வரை: 7.5 (115 மாதங்களில் முதிர்ச்சியடையும்)
கூட்டு வட்டி கணக்கிடும் காலம்: ஆண்டுதோறும்
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (Mahila Samman Savings Certificate)
வட்டி விகிதம் 01.01.2026 முதல் 30.3.2026 வரை: 7.5 (₹10,000/-க்கு முதிர்வுத் தொகை ₹11,602)
காலாண்டுக்கு ஒருமுறை
சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம் (Sukanya Samriddhi Account Scheme)
வட்டி விகிதம் 01.01.2026 முதல் 30.3.2026 வரை: 8.2
கூட்டு வட்டி கணக்கிடும் காலம்: ஆண்டுதோறும்
அஞ்சல் அலுவலகங்களால் இயக்கப்படும் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை அரசாங்கம் காலாண்டு அடிப்படையில் அறிவிக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ