Pensioners Latest News: குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் மிக மூத்த ஓய்வூதியதாரர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக ஜூலை 1 முதல் மேற்கொள்ளப்படும் ஒரு மாத கால சிறப்பு பிரச்சாரம் 2.0 -க்கான வழிகாட்டுதல்களை பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ளார்.
)
Pensioners Latest News: அரசு பணிகளிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரரா நீங்கள்? உங்கள் வீட்டில் யாரேனும் ஓய்வூதியதாரர்கள் உள்ளார்களா? அப்படியென்றால், இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங் ஒரு முக்கிய அப்டேட்டை அளித்துள்ளார்.
Special Campaign 2.0 for Redressal of Grievances: MoS Jitendra Singh
குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் மிக மூத்த ஓய்வூதியதாரர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காக ஜூலை 1 முதல் மேற்கொள்ளப்படும் ஒரு மாத கால சிறப்பு பிரச்சாரம் 2.0 -க்கான வழிகாட்டுதல்களை பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங் வெளியிட்டுள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் மேம்பாட்டு பயணத்தை எடுத்துரைத்த ஜிதேந்திர சிங், துறையின் முன்முயற்சியைப் பாராட்டினார். மேலும் குறைகளை சரியான நேரத்தில் மற்றும் தரமான முறையில் நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
Family Pensioners and Super Senior Pensioners
மத்திய அரசு குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் மிக மூத்த ஓய்வூதியதாரர்களின் குறைகளை சரியான நேரத்தில் மற்றும் தரமான முறையில் நிவர்த்தி செய்வதற்காக, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை (DOPPW) ஜூலை 1 முதல் 31 வரை ஒரு மாத கால சிறப்பு பிரச்சாரம் 2.0 ஐ நடத்தும் என்று அமைச்சர் கூறினார்.
Department of Pension and Pensioners Welfare
இந்த பிரச்சாரத்தை DoPPW ஒருங்கிணைக்கும். இந்த பிரச்சாரத்தின் கீழ் மொத்தம் 2210 ஓய்வூதிய குறைகள் பரிசீலிக்கப்பட்டு, தீர்வு காண அரசாங்கத்தின் 51 அமைச்சகங்கள்/துறைகள் மற்றும் அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. பத்திரிகை தகவல் பணியக அறிக்கைகள் மற்றும் ட்வீட்கள் மூலம் வெற்றிக் கதைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பரவலாகப் பரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் குறைகளை திறம்பட நிவர்த்தி செய்வதன் மூலம் பெண்களின் அதிகாரமளித்தல் மற்றும் மூத்த குடிமக்களின் நலனில் மத்திய அரசு கொண்டுள்ள உறுதிப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
செயலாளர் (ஓய்வூதியம்) தலைமையில், ஓய்வூதியதாரர்களின் குறைகளைக் கையாளும் நோடல் அதிகாரிகளுடன் ஒரு ஆயத்தக் கூட்டம் ஜூன் 11, 2025 அன்று நடைபெற்றது. DOPPW தினசரி அடிப்படையில் குறைகளின் நிலையை கண்காணித்து வருகிறது. பிரச்சாரம் ஏற்கனவே வேகம் பெற்றிருப்பது தெரிகிறது. அடையாளம் காணப்பட்ட வழக்குகளில் 25 சதவீதத்திற்கும் அதிகமானவை இதுவரை தீர்க்கப்பட்டுள்ளன என்பதிலிருந்து இந்த வேகத்தை புரிந்துகொள்ள முடிகின்றது.
#SpecialCampaignFamilyPension2.0
இந்த பிரச்சாரத்தின் ஹேஷ்டேக் #SpecialCampaignFamilyPension2.0 ஆக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Unified Pension Scheme
நலத்திட்ட நடவடிக்கைகளின்படி, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசு ஊழியர்கள் இப்போது ஓய்வூதிய மற்றும் இறப்பு கிராஜுவிட்டி சலுகைகளுக்குத் (Retirement Gratuity and Death Gratuity) தகுதி பெறுவார்கள் என்றும் அமைச்சர் இந்த வாரம் அறிவித்தார்.
Central Government Employees: மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிவாரணம்
இந்த நடவடிக்கை அரசு ஊழியர்களின் குறிப்பிடத்தக்க தேவையை நிவர்த்தி செய்வதாகவும், ஓய்வூதிய சலுகைகளில் சமத்துவத்தைக் கொண்டுவருவதாகவும், அவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணத்தை அளிப்பதாகவும் அமைச்சர் கூறினார். புதிய விதி, தேசிய ஓய்வூதிய அமைப்பின் (National Pension Scheme) கீழ் உள்ள அனைத்து வகை ஊழியர்களுக்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
Central Government Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள்
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை, 18.06.2025 தேதியிட்ட அலுவலக குறிப்பாணையின் மூலம், UPS ஐத் தேர்ந்தெடுக்கும் மத்திய ஊழியர்கள் மத்திய சிவில் சேவைகள் விதிகள், 2021 இன் விதிகளின் கீழ் 'ஓய்வூதிய பணிக்கொடை மற்றும் இறப்பு பணிக்கொடை' யின் நன்மைக்குப் தகுதியுடையவர்களாக இருப்பார்கள் என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. UPS இன் கீழ் பணிக்கொடை செலுத்துதல் குறித்த தெளிவுபடுத்தல் ஊழியர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ