)
State Bank Of India FD Interest Rate Cuts: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகளை குறைத்து கடந்த ஜூன் 6ஆம் தேதி அன்று உத்தரவிட்டது. ரிசர்வ் வங்கி நாட்டில் உள்ள மற்ற வங்கிகளுக்கு அளிக்கும் வட்டி விகிதம்தான் இந்த ரெப்போ வட்டி விகிதம்.
ஆர்பிஐயின் இந்த நடவடிக்கையின் மூலம் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன் உள்ளிட்டவைகளின் வட்டி விகிதம் குறையும். இதன்மூலம், மக்கள் வங்களுக்கு செலுத்தும் வட்டி குறையும், பணம் சேமிப்பாகும். மேலும், மக்களின் வாங்கும் திறனும் உயரும். இது பொருளாதாரத்திற்கு ஊக்கமாக இருக்கும் எனலாம்.
Interest Rate Cuts: வட்டிகளை குறைத்த எஸ்பிஐ
மறுபுறம், ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை குறைப்பதன் மூலம் வங்கிகள் வாடிக்கையாளர்களின் FD, சேமிப்பு கணக்கின் வட்டி விகிதத்தையும் குறையும். இதனால், FD மற்றும் சேமிப்பு கணக்குகளின் மூலம் வாடிக்கையாளர்கள் பெறும் வட்டியும் குறையும். ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கிகள் தங்களின் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்திருந்தது. அப்படியிருக்க, இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ அதன் FD மற்றும் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்துள்ளது.
எஸ்பிஐ வங்கி FD திட்டங்களின் வட்டி விகிதத்தில் 25 அடிப்படை புள்ளிகளையும், சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதத்தில் 50 அடிப்படை புள்ளிகளையும் குறைத்துள்து. இந்த மாற்றங்கள் நேற்று (ஜூன் 15) முதல் அமலுக்கு வந்தது. அந்த வகையில், எஸ்பிஐ தற்போது பல FD திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் வட்டி விகிதங்களில் என்னென்ன மாற்றம் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
SBI FD Interest Rate: FD வட்டி குறைப்பு
- 7 நாள்கள் முதல் 45 நாள்கள் வரையிலான FD திட்டத்தில் இதுவரை பொதுவாடிக்கையாளர்களுக்கு 3.3% வட்டி விகிதமாக இருந்தது. தற்போது 3.05% ஆக குறைந்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு 3.8% வழங்கப்பட்ட நிலையில் தற்போது 3.55% ஆக குறைந்துள்ளது.
- 46 நாள்கள் முதல் 179 நாள்கள் வரையிலான FD திட்டத்தில் இதுவரை பொதுவாடிக்கையாளர்களுக்கு 5.3% வட்டி விகிதமாக இருந்தது. தற்போது 5.05% ஆக குறைந்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு 5.8% வழங்கப்பட்ட நிலையில் தற்போது 5.55% ஆக குறைந்துள்ளது.
- 180 நாள்கள் முதல் 210 நாள்கள் வரையிலான FD திட்டத்தில் இதுவரை பொதுவாடிக்கையாளர்களுக்கு 6.05% வட்டி விகிதமாக இருந்தது. தற்போது 5.8% ஆக குறைந்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு 6.55% வழங்கப்பட்ட நிலையில் தற்போது 6.3% ஆக குறைந்துள்ளது.
- 211 நாள்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான FD திட்டத்தில் இதுவரை பொதுவாடிக்கையாளர்களுக்கு 6.3% வட்டி விகிதமாக இருந்தது. தற்போது 6.05% ஆக குறைந்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு 6.8% வழங்கப்பட்ட நிலையில் தற்போது 6.55% ஆக குறைந்துள்ளது.
- 1 வருடம் முதல் 2 வருடங்களுக்கு குறைவான FD திட்டத்தில் இதுவரை பொதுவாடிக்கையாளர்களுக்கு 6.5% வட்டி விகிதமாக இருந்தது. தற்போது 6.25% ஆக குறைந்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு 7% வழங்கப்பட்ட நிலையில் தற்போது 6.75% ஆக குறைந்துள்ளது.
- 2 வருடங்கள் முதல் 3 வருடங்களுக்கு குறைவான FD திட்டத்தில் இதுவரை பொதுவாடிக்கையாளர்களுக்கு 6.7% வட்டி விகிதமாக இருந்தது. தற்போது 6.45% ஆக குறைந்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு 7.2% வழங்கப்பட்ட நிலையில் தற்போது 6.95% ஆக குறைந்துள்ளது.
- 3 வருடங்கள் முதல் 5 வருடங்களுக்கு குறைவான FD திட்டத்தில் இதுவரை பொதுவாடிக்கையாளர்களுக்கு 6.55% வட்டி விகிதமாக இருந்தது. தற்போது 6.3% ஆக குறைந்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு 7.05% வழங்கப்பட்ட நிலையில் தற்போது 6.8% ஆக குறைந்துள்ளது.
- 5 வருடம் முதல் 10 வருடங்களுக்கு குறைவான FD திட்டத்தில் இதுவரை பொதுவாடிக்கையாளர்களுக்கு 6.3% வட்டி விகிதமாக இருந்தது. தற்போது 6.05% ஆக குறைந்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு 7.30% வழங்கப்பட்ட நிலையில் தற்போது 7.5% ஆக குறைந்துள்ளது.
SBI Savings Account Interest Rate: சேமிப்பு கணக்கு...
அதேநேரத்தில், எஸ்பிஐ சேமிப்பு கணக்கின் வட்டி விகத்திலும் 50 அடிப்படை புள்ளிகளை குறைத்துள்ளது. இதன்மூலம், அனைத்து வகையான சேமிப்பு கணக்கு இருப்புகளுக்கு ஆண்டு வட்டி விகிதம் 2.5% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னர் ரூ.10 கோடி ரூபாய்க்கு குறைவான வங்கி கணக்குகளுக்கு 2.7% மற்றும் ரூ.10 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட இருப்பு உள்ள கணக்களுக்கு 3% வழங்கப்படுகிறது.
SBI Interest Rate: எஸ்பிஐ அம்ரித் விருஷ்டி FD திட்டம்
எஸ்பிஐ வழக்கமான FD திட்டங்களை தாண்டி, அம்ரித் விருஷ்டி என்ற பெயரில் சிறப்பு FD திட்டத்தையும் வைத்துள்ளது. இதன் கால அளவு 444 நாள்கள் ஆகும். இந்த திட்டத்தில் பொதுவாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதம் 6.85 சதவீதத்தில் இருந்து இருந்து 6.60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதுவும் நேற்று முதல் அமலுக்கு வந்தது. ஆனால், 60 வயதான சீனியர் சிட்டிசன்கள், 80 வயதான சூப்பர் சீனியர் சீட்டிசன்களுக்கு அதே வட்டி விகிதமே தொடர்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ