கடும் சரிவில் பங்குச் சந்தை... SIP பரஸ்பர நிதிய முதலீடுகள் பாதுகாப்பானது தானா...

இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்துள்ள நிலையில், எஸ்ஐபி மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதிய முதலீட்டாளர்கள், பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 7, 2025, 03:34 PM IST
  • பங்குச்சந்தை சரிவுக்கான முக்கிய காரணங்கள்.
  • பங்குச்சந்தை சரிவு தள்ளுபடி விலையில் பங்குகளை வாங்கும் வாய்ப்பை கொடுக்கிறது.
  • முதலீட்டாளர்கள் அஞ்ச வேண்டிய அவசியமில்லை.
கடும் சரிவில் பங்குச் சந்தை... SIP பரஸ்பர நிதிய முதலீடுகள் பாதுகாப்பானது தானா...

இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3000 திற்கும் அதிகமான புள்ளிகள் சரிந்து உள்ளது. தேசிய பங்கு சந்தை லிப்டியும் 1000க்கும் அதிகமான புள்ளிகள் சரிந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால், எஸ்ஐபி என்னும் ம்யூச்சுவல் ஃபண்ட் அல்லது பரஸ்பர நிதிய முதலீட்டாளர் கடும் கலக்கத்தில் உள்ளனர்.

Add Zee News as a Preferred Source

பங்குச் சந்தை சரிவின் போது SIP மூலம் முதலீடு செய்துள்ள பரஸ்பர நிதி முதலீட்டாளர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை பற்றி பொருளாதார வல்லுநர்கள் கூறும் ஆலோசனைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பங்குச்சந்தை சரிவுக்கான முக்கிய காரணங்கள்

இந்தியாவில் மட்டும் அல்ல உலக அளவில் பங்குச் சந்தையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த வர்த்தகவரி விதிப்பு, பணவீக்கத்தின் தாக்கம், உலகளாவிய மந்த நிலை ஏற்படும் அச்சம், போன்றவை காரணமாக பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், இன்றைய பங்குச் சந்தையில் சில நொடிகளிலேயே, ரூபாய் 19 லட்சம் கோடிகளை இழந்தனர்.

முதலீட்டாளர்கள் அஞ்ச வேண்டிய அவசியமில்லை

பங்குச்சந்தை சரிவு நிச்சயம் முதலீட்டாளர்களுக்கு ஒரு பதற்றத்தை கொடுக்கும் என்பதை மறுக்க இயலாது. ஆனால் தரவுகளை வைத்து பார்க்கும் போது, கடும் சரிவு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே. இதில் பொறுமையுடன் இருந்தால், நீண்டகால முதலீட்டின் பயனை சிறப்பாக அனுபவிக்கலாம். அவசரப்பட்டு வெளியே வருவதால் நஷ்டம் ஏற்படுவதோடு, தவறுக்காக பின்னர் வருத்தப்பட வேண்டி வரும்.

நீண்டகால முதலீட்டின் நன்மைகள்

எஸ்ஐபி என்னும் பரஸ்பர நிதிய முதலீட்டில், குறைந்தது 5 ஆண்டு கால முதலீடு அவசியம். பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம் காணப்படுவது சகஜம் தான். ஆனால் நீண்ட கால முதலீட்டில், அது எக்கச்சக்க பலனை கொடுக்கும் என்பதை மறுக்க முடியாது.

போர்ஃபோலியோவை சிறப்பாக தேர்ந்தெடுத்தல்

நீங்கள் முதலீடு செய்துள்ள பங்குகள் சிறந்தவை தானா என்பதை அவ்வப்போது ஆராய்ச்சி செய்வதும் அவசியம். நல்ல வருமானம் கொடுத்த பங்குகளை தேர்ந்தெடுப்பது எப்போதுமே நல்லது. முதலீட்டு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் உதவியுடன், சிறந்த நிறுவனத்தை தேர்ந்தெடுத்து, முதலீடு செய்வதால், சிறப்பான வருமானத்தை பெறலாம்.

எஸ்ஐபி முதலீடுகளை தொடர வேண்டுமா?

பங்குச்சந்தை சரியும்போது எஸ்ஐபி முதலீடுகளை நிறுத்துவது மிகப்பெரிய தவறு. அப்போதுதான் நிச்சயம் தொடர வேண்டும். ஏனெனில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை, யூனிட்டுகளாக வரவு வைக்கப்படுகின்றன. சந்தை சரி செய்யும் போது உங்கள் முதலீட்டிற்கு அதிக யூனிட்டுகள் உங்களுக்கு கிடைக்கும். பங்குச்சந்தை ஏறும் போது இதனால் வருமானமும் அதிகரிக்கும். அதாவது குறைந்த விலையில் வாங்கி அதிக விலையில் விற்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். அதாவது பங்குச்சந்தை சரிவு தள்ளுபடி விலையில் வாங்கும் வாய்ப்பை கொடுக்கிறது.

அவசரகால நிதிக்கான ஒதுக்கீடு

எப்போதுமே பணத்தை முதலீடு செய்யும் போது, பங்குச்சந்தை, வங்கி எஃப்டி அல்லது ஆர்டி முதலீடுகள், தங்கம் என பிரித்து செய்வது நல்லது. இப்போது அவசர கால தேவையின் போது, நிலைமையை சிறப்பாக கையாள கை கொடுக்கும். நீண்டகால முதலீட்டை, தடையில்லாமல் தொடர இந்த உத்தி உதவும். இதனால், கூட்டு வட்டி வருமானத்தை பலனை முழுமையாக பெறலாம்.

சமூக ஊடக தகவல்களை நம்ப வேண்டாம்

சமூக ஊடகங்கள் மூலம் பரவும் தகவல்களை நம்பாமல், அதிகாரப்பூர்வமாக வெளியாகும் தகவல்களை தேடிப் படிக்கவும். முதலீட்டு ஆலோசனைகளை வழங்கும் நிபுணர்களிடம், கலந்து பேசி உங்கள் அச்சத்தை தெரிவிக்கவும். அவர்கள் கொடுக்கும் வழிகாட்டியை பின்பற்றி செயல்படவும்.

மேலும் படிக்க | பங்குச் சந்தை வீழ்ச்சி.. சில வினாடிகளில் ரூ.19 லட்சம் கோடி இழப்பு... 5 முக்கிய காரணங்கள்

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: அடிப்படை ஆண்டு, டிஏ கணக்கீட்டில் மாற்றம்..... ஜாக்பாட் ஊதிய உயர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News