பங்குச் சந்தை வீழ்ச்சி.. சில வினாடிகளில் ரூ.19 லட்சம் கோடி இழப்பு... 5 முக்கிய காரணங்கள்

இந்தியப் பங்குச் சந்தையின் வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை 'Black Monday' என அழைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் 3000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நிஃப்டியும் 1000 புள்ளிகள் சரிந்தது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 7, 2025, 12:58 PM IST
  • உலகம் முழுவதும் உள்ள பங்குச் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன.
  • சந்தை வீழ்ச்சியின் முக்கிய காரணங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
  • ஆசியாவில் இருந்து இந்தியா வரை பங்குச் சந்தையில் நிலவும் குழப்பம்.
பங்குச் சந்தை வீழ்ச்சி.. சில வினாடிகளில் ரூ.19 லட்சம் கோடி இழப்பு... 5 முக்கிய காரணங்கள்

இந்தியப் பங்குச் சந்தையின் வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை 'Black Monday' என அழைக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் 3000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. நிஃப்டியும் 1000 புள்ளிகள் சரிந்தது. இதற்கிடையில், ஆசிய பங்குச் சந்தைகளிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக வரி அறிவிப்புக்குப் பிறகு, உலகம் முழுவதும் உள்ள பங்குச் சந்தைகள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. சந்தை வீழ்ச்சியின் முக்கிய காரணங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்...

Add Zee News as a Preferred Source

ஆசியாவில் இருந்து இந்தியா வரை பங்குச் சந்தையில் நிலவும் குழப்பம்

திங்களன்று ஆசிய சந்தைகளில் உள்ள அனைத்து பங்குச் சந்தைகளும் செயலிழந்தன. ஹாங்காங்கின் ஹாங் செங் 9.24%, ஜப்பானின் நிக்கேய் 8.50% சரிந்தன. மறுபுறம், சிங்கப்பூர் சந்தை 7% என்ற அளவிலும், சீனா சந்தை 5.5% என்ற அளவிலும், மலேசிய சந்தை 4.2% என்ற அளவிலும் சரிந்துள்ளது. இதனுடன், ஆஸ்திரேலிய பங்குச் சந்தை 4.1% என்ற அளவிலும் மற்றும் நியூசிலாந்து பங்குச் சந்தை 3.6% என்ற அளவிலும் சரிந்தது. இந்தியாவில் சென்செக்ஸ் சுமார் 3000 புள்ளிகள் சரிந்தது. அதே நேரத்தில் நிஃப்டியும் 1000 புள்ளிகள் சரிந்தது. 

கடுமையான சரிவு ஏற்படுவதற்கான பெரிய காரணங்கள்

திங்கட்கிழமை பங்குச் சந்தையில் ஏற்பட்ட குழப்பத்திற்குப் பின்னால் உள்ள காரணங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வர்த்தக வரி அறிவிப்பு இதற்கு முக்கிய காரணம் என்று சொல்லலாம். மேலும், சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்டுள்ள வர்த்தக போர், அமெரிக்க மந்தநிலை பற்றிய அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளன. இதன் நேரடி தாக்கம் பங்குச் சந்தைகளில் காணப்படுகிறது.

டிரம்பின் வர்த்தக வரி விதிப்பு குறித்த அறிக்கைகள்

டொனால்ட் டிரம்பின் வர்த்தக வரி விதிப்பின் தாக்கத்தை, உலகெங்கிலும் உள்ள அனைத்து முக்கிய சந்தைகளிலும் காணலாம். டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை தனது வர்த்தக வரி விதிப்பு, பொருளாதாரத்தை சீர்படுத்த தான் தரும் கசப்பு மருந்து எனக் கூறினார். 180க்கும் மேற்பட்ட நாடுகள் மீது கடுமையான வரிகளை விதித்து, டிரம்ப் நிர்வாகம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இது பங்குச்சந்தையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது

மந்தநிலை அதிகரிக்கும் அபாயம்

உலகின் 180 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அதிக அளவில் வர்த்தக வரி விதித்து, டிரம்ப் தனது கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருவதால், அமெரிக்காவில் மந்தநிலை அதிகரிக்கும் என்ற அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் உலகம் முழுவதும் காணப்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். டிரம்பின் வரிகளால் இந்தியாவிற்கு ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்பட்டாலும், உலகளாவிய பொருளாதார மந்தநிலையின் தாக்கம் ஓரளவுக்கு இந்தியாவின் இருக்கும் என கூறப்படுகிறது.

பணவீக்கம் அதிகரிக்கும் அச்சுறுத்தல்

டிரம்பின் அதிரடி நடவடிக்கை பணவீக்கத்தை விரைவாக அதிகரிக்கும் என்றும், நுகர்வோர் உணர்வை இது பாதிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இது பொருளாதார வளர்ச்சியை நேரடியாக பாதிக்கும். வரி விதிப்பு மற்றும் அமெரிக்கப் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பதன் மூலம் சீனாவின் எதிர்த்தாக்குதல் ஆகியவை ஒரு பெரிய வர்த்தகப் போரக உருவெடுத்து, உலகப் பொருளாதாரத்திற்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலையை அதிகரித்துள்ளது. ஜேபி மோர்கன் அமெரிக்க மற்றும் உலகளாவிய மந்தநிலையின் நிகழ்தகவை 40 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக அதிகரித்துள்ளது என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறுகிறது.

பங்குகளை அதிகம் விற்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

இந்திய பங்குச்சந்தை சரிவுக்கு அடுத்த காரணம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு விற்பனை நடவடிக்கை. வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் அதாவது FPI மீண்டும் இந்திய பங்குச் சந்தைகளில் இருந்து பணத்தை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது. இது பங்குச் சந்தையை பாதித்துள்ளது. டிரம்ப் வர்த்த வரி கட்டணங் அறிவிப்பு இதை தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை வரை  வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ.13,730 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளன.

மேலும் படிக்க | ஆயிரங்களை கோடிகளாக்குவது எளிது தான்... உங்களுக்கு கை கொடுக்கும் 7 ஃபார்முலாக்கள்

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: சம்பள உயர்வுக்கு முக்கியமான ஃபிட்மெண்ட் ஃபாக்டர்.... கணக்கிடப்படுவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News