Tamilnadu Government Awareness fortified rice : தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் சார்பில் செறிவூட்டப்பட்ட அரிசி பயன்படுத்துதலை ஊக்குவிப்பது தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி பயன்படுத்துதலின் முக்கியத்துவம் குறித்தான துண்டு பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை திருச்சிராப்பள்ளி மாவட்டம் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் செறிவூட்டப்பட்ட அரிசி (FR) மற்றும் இரட்டை செறிவூட்டப்பட்ட உப்பு (DFS) குறித்த சிறப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
செறிவூட்டப்பட்ட அரிசி விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோக்கம்
இந்தத் திட்டம் FSSAI மற்றும் GIZ (ஜெர்மனி) ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது. மேலும் சமூக மற்றும் நடத்தை மாற்றத்தை (SBCC) கொண்டு வருவதற்காக புது தில்லியில் உள்ள New Concept Information Systems அமைப்பு மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரம், “ஊட்டச்சத்தைப் பாதுகாத்தல், மீள்தன்மையை மேம்படுத்துதல் (SENU)” என்ற பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு போன்ற நிலைமைகளைத் தடுக்க, செரிவூட்டப்பட்ட உணவுகளைப் பயன்படுத்துவதன் ஆரோக்கிய நன்மைகளைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள உதவுவதும், அவற்றின் பயன்பாட்டை ஊக்குவிப்பதும் இதன் நோக்கமாகும். குறிப்பாக மாவட்டத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட, ஊட்டச்சத்து குறைபாடுடைய, எடை குறைந்த குழந்தைகளை கருத்திற்கொண்டு செயல்படுவது இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
ரேஷன் கடை பணியாளர்கள் பங்கேற்பு
இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தகவல், கல்வி மற்றும் தொடர்பு வாகனம் (IEC VAN) ஒன்று மாவட்டம் முழுவதும் 10 நாட்களுக்குப் சுமார் 8 முதல் 10 ஒன்றியத்தில் உள்ள 40 கிராமங்களுக்கு பயணம் செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட அதிகாரி மற்றும் FSO-க்களுடன் கலந்தாலோசித்து விரிவான பாதைத் திட்டம் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு கிராமத்திற்கு செல்வதற்கு முன், SBCC ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் FSO-க்கள் உள்ளுர் தலைவர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட பணியாளர்கள் (ICDS), மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் நியாய விலைக் கடை பணியாளர்கள் ஆகியோர்கள் விழிப்புணர்வு நிகழ்விற்கு மக்களை ஒருங்கிணைப்பார்கள்.
சந்தைகளுக்கு செல்லும் விழிப்புணர்வு வாகனம்
செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் இருமுறை செரிவூட்டப்பட்ட உப்பு ஆகியவற்றின் நன்மைகள் பற்றிய குறும்படங்கள் திரையிடல், உள்ளூர் தலைவர்கள், சுய உதவிக்குழுக்கள், பொது விநியோகத்திட்ட அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடுதல் மற்றும் சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல் உள்ளிட்டவை முக்கிய செயல்பாடுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் சுமார் 75 முதல் 100 பேர் வரை பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்தில் இந்த விழிப்புணர்வு வாகனம் முழு பிரச்சாரத்தின் போது மொத்தம் 4,000 முதல் 5,000 நபர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்படும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வாராந்திர சந்தைகள் மற்றும் பிற பரபரப்பான பகுதிகளில் வீடியோக்களை இயக்கி விழிப்புணர்வை பரப்புவதற்காக இந்த விழிப்புணர்வு வாகனத்தின் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மேலும் படிக்க | EPS Pension: EPF உறுப்பினர்கள் அதிகபட்ச ஓய்வூதியத்தை எப்படி பெறுவது? கணக்கீடு இதோ
மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு நிவாரணம்: மக்களவையில் கிடைத்த முக்கிய CGHS அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









