)
Tamil Nadu Free Business Training : தமிழ்நாடு அரசு சொந்த தொழில் செய்ய வேண்டும் என ஆர்வம் உள்ளவர்களுக்காகவே மாவட்ட அளவில் பல்வேறு தொழில் பயிற்சிகளை கொடுக்கிறது. தொழில் ஆர்வம் இருந்து என்ன தொழில் செய்வது என தெரியாமல் இருப்பவர்களுக்கும் வழிகாட்டுதல்களை கொடுக்கிறது. தமிழ்நாடு அரசின் இந்த பயிற்சி மூலம் இளைஞர்கள் தங்களின் எதிர்காலத்தை நல்ல முறையில் உருவாக்கிக் கொள்ள முடியும். ஆர்வமுடன் இருப்பவர்கள் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சியில் கலந்து கொள்ளலாம். திருப்பத்தூர் மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு 25 வகையான சுய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பித்து பயன்பெற்றுக் கொள்ளுங்கள்
சுயவேலைவாய்ப்பு பயிற்சி
மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறை உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சென்னை தவிர 37 மாவட்டங்களிலும் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவ னங்கள் செயல்பட்டு வருகின்றன.
இப்பயிற்சி மையங்களில் வேலைவாய்ப்புகளை அதிகம் வழங்கிடும் பயிற்சிகளான செல்போன் பழுதுநீக்குதல், நான்கு சக்கரவாகன ஓட்டுனர் உரிமம் பயிற்சி மற்றும் இலவசமாக ஓட்டுநர் உரிமம் பெற்றுத்தரப்படும். இருசக்கர வாகன பழுது நீக்குதல், மின்சாதன வீட்டு உபயோகப் பொருட்கள் பழுது நீக்குதல், கான்கிரீட் கொத்தனார் பயிற்சி. பிளம்பிங் பயிற்சி, ஓயரிங் அலுமினியம் பேப்ரிக்ஷேன், காளான் வளர்ப்பு பயிற்சி, CCTV Camera பழுதுநீக்குதல் பயிற்சி உள்ளிட்ட 25 வகையான சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள் எவ்வித கட்டணமும் இன்றி 18.45 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
தொழில் கருவிகள்
இதில் கல்வித் தகுதியாக குறைந்தது 8-ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. 8-ம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ. டிப்ளமோ மற்றும் பட்ட படிப்பு வரை படித்தவர்களுக்கு தங்களின் கல்வித்தகுதிக்கு ஏற்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது. குறைந்தது 10 நாட்கள் முதல் அதிகபட்சம் 45 நாட்கள் வரை உள்ள பயிற்சி காலத்தின் போது மதிய உணவும், காலை மற்றும் மாலையில் சிற்றுண்டி தேநீர் போன்றவை இலவசமாக வழங்கப்படுவதுடன், பயிற்சியாளர்களுக்கு சீருடை பாடப்பொருட்கள் தொழில் முனைவோராக மாறுவதற்கு உரிய அடிப்படை தொழில் கருவிகள் ஆகியவையும் வழங்கப்படுகிறது.
பயிற்சியின் முடிவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்ற நிறுவனம் மூலம் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்த இளைஞர்கள் சுய தொழில் மேற்கொள்ள ஏதுவாக 2 ஆண்டுகள் வரை பயிற்சி நிலைய அலுவலர்களால் தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடன் உதவி
பயிற்சி முடித்து இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பில் ஈடுபட கடன் உதவி தேவைப்படும் பட்சத்தில், வங்கிகள் மூலம் கடன் பெறவும், பயிற்சி நிலைய அலுவலர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் பல்வேறு பயிற்சிகளுக்கான கால அட்டவணை. ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பட்டிய லிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கிராமப்புற இளைஞர்கள் தங்களுக்கு ஏற்ற தொழில் பயிற்சிகளில் சேர்ந்து பயன்பெற விரும்பினால், திருப்பத்தூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் அலுவலகம் மற்றும் இயக்குனர், ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனங்களை தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.
வாழ்வாதார உதவி அழைப்பு
மேலும் கூடுதல் விவரங்களை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வாழ்வாதார அழைப்பு எண் 155330 உதவி அழைப்பு எண் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் 1800 309 8039 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ