)
Tamil Nadu Government : தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி கொடுக்க உள்ளது. இந்த பயிற்சி சென்னையில் 18.08.2025 to 22.08.2025 வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இப்பயிற்சி, இந்நிறுவன வளாகத்தில் நடைபெறும்.
பயிற்சியின் விவரம்
- இப்பயிற்சியில் தங்கம், வெள்ளி, போன்ற உலோகங்களின் தரம் அறிதல். கேரட் மதிப்பீடுகள்.
- ஆசிட் சோதனை
- எடை அளவு இணைப்பான்.
- விலை நிர்ணயிக்கும் முறை (Board Rate).
- ஹால் மார்க் மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணும் நடைமுறைகள் போன்றவை கற்றுத்தரப்படும்.
- மேலும் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறைகள்.
- தங்க அணிகலன் வகைகள் பற்றிய பயிற்சியும் அளிக்கப்படும்.
வேலைவாய்ப்பு வழிகாட்டல்
பொதுத்துறை. கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கான வாய்ப்புகள், அவற்றை பெறும் நடைமுறைகள். அரசுத் திட்ட உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்த ஆலோசனைகளும் இந்த பயிற்சியில் வழங்கப்படும்.
பதிவு மற்றும் தொடர்பு விவரங்கள்
இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் 18 வயதிற்கு மேல் மற்றும் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் வசதி குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். பயிற்சிக்கு முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களுக்கு மற்றும் முன்பதிவிற்கு ஐயம் அல்வது 9548773887 / 9380221280 என்ற எண்களில் அலுவலக நேரத்தில் (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை) தொடர்புகொள்ளலாம். நாகரி தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல். சென்னை. முன்பதிவு அவசியம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
வீட்டு பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் பயிற்சி
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், வீட்டு பராமரிப்பு பொருட்கள் தயாரித்தல் மற்றும் தொழிற்ச்சாலைக்கு உதவும் இராசயான பொருட்கள் தொடர்பான பயிற்சி வரும் 28.08.2025 முதல் 30.08.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் பிளாக் ஃபீனைல், கட்டிங் ஆயில், கிரீஸ், தொழில்துறை சோப்பு எண்ணெய், பைப் கிளீனிங் பவுடர், வாட்டர் டேங்க் கிளீனிங் லிக்விட், டிஷ்வாஷ் சோப், டிடர்ஜென்ட் சோப், டெட்டால், எஸ்எஸ் - மெட்டல் கிளீனிங் லிக்விட், கார் பாலிஷ் மற்றும் இன்டஸ்ட்ரியல் ஃப்ளோர் க்ளீனிங், ஃப்ளோர் கிளீனர், டிஷ்வாஷ் திரவம், சோப்பு திரவம் , ஃபேப்ரிக் சாஃப்ட்னர் & கண்டிஷனர், கை கழுவும் திரவம் மற்றும் பயிற்சி வழிமுறைகளுடன் சுயமாக தொழில் தொடங்குவதற்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இப்பயிற்சியில் அரசு வழங்கும் கடன் உதவிகள் மற்றும் மானியத்தை பற்றி விளக்கப்படும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சியாளர்கள் விண்ணப்பிக்கலாம். பங்குபெறும் ஆண், பெண் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி - தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலகச் சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை. மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் - 8668102600. முன்பதிவு அவசியம். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ