தொழிலபதிராக விரும்பும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்!

Tamil Nadu Government : தமிழ்நாடு அரசு தொழில் முனைவோரை உருவாக்கும் விதமாக பால் பண்ணை அமைத்தல் மற்றும் மின்சார வாகனம் பழுது பார்க்கும் பயிற்சிகளை வழங்க உள்ளது. 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Jul 5, 2025, 11:22 AM IST
  • தமிழ்நாடு அரசின் இரண்டு குட் நியூஸ்
  • மின்சார வாகன பழுது நீக்கும் பயிற்சி
  • பால்வளத்துறையில் வரப்போகும் குட் நியூஸ்
தொழிலபதிராக விரும்பும் இளைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்!

Tamil Nadu Government Good News : தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் 3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி வரும் 10.07.2025 முதல் 12.07.2025 (காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை) நடைபெற உள்ளது. இந்த பயிற்சி EDII-TN வளாகம், ஈக்காட்டுத்தாங்கல், சென்னை கிண்டியில் நடைபெறுகிறது. மின்சார வாகன (EV) தொழில்நுட்பத்தை தெளிவாக புரிந்துகொள்வீர்கள். மோட்டார், பேட்டரி, கட்டுப்பாட்டி, சார்ஜிங் அமைப்புகள் இயக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகள், சர்வீசிங் முறைகள் மற்றும் அடிப்படை கோளாறுகளை கண்டறியும் திறன், EV டீலர்ஷிப், பழுது சரிசெய்தல் நிலையங்கள் மற்றும் ஃபிராஞ்சைஸி தொழில் மாடல்களை செயல்படுத்தும் பயிற்சி பெறுவீர்கள். 

Add Zee News as a Preferred Source

மின்சார வாகனத் துறையில் கிடைக்கும் அரசுத் திட்டங்கள் மற்றும் ஊக்கத் தொகைகள் குறித்து வழிகாட்டல் பெறுவீர்கள். இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது: 9543773337 / 9360221280

பால்பண்ணை மேம்பாட்டுத் துறை பயிற்சி

தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களில் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு எளிதாக கறவை மாட்டுக் கடன் பெற்று வழங்க வழிவகை செய்தல், தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களை பல்வகை சேவை மையங்களாக செயல்படுத்துதல், சுழற்சி பொருளாதாரம் (Waste to Wealth) மற்றும் சிறு பால் பண்ணை அமைப்பதற்குண்டான நிதி ஆதாரங்கள் ஆகியவை குறித்து மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலர்கள்/ பணியாளர்களுக்கு அவர்களின் பணித்திறனை மேம்படுத்தும் பொருட்டு 01.07.2025 முதல் 04.07.2025 வரை ஒரு நாள் பயிற்சியாக நான்கு குழுக்களுக்கு நான்கு நாட்கள் மாமல்லபுரத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கூட்ட அரங்கில் நடத்தப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் பேசிய பால்வளத்துறை அமைச்சர், தமிழ்நாட்டில் அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கும் கறவை மாட்டுக் கடன் பெற்றுத்தர வங்கியுடன் இணைந்து பணியாற்றவும், பால் கூட்டுறவு சங்கங்களை பல் வகை சேவையுடன் நிலைத்த வளர்ச்சியுடன் கூடிய சங்கங்களாக மாற்றிட வேண்டும் என அறிவுறுத்தினார்கள். மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு அவர்கள் வழங்கிய பாலின் தரத்திற்கேற்றவாறு விலை வழங்கிட வேண்டும் என்று தெரிவித்து, ஆவின் மூலம் கால்நடைத் தீவனம் வழங்கிட வேண்டும் என்றும், கலப்புத்தீவனம் வழங்கி பால் உற்பத்தியை பெருக்கிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இப்பயிற்சி வகுப்பில் ஆவின் பால் உப பொருட்கள், பால் பரிசோதனை கருவிகள் காட்சிபடுத்தப்பட்டது. தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு கறவை மாட்டுக்கடன் பெற்று வழங்கும் வழிமுறைகள், தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை பல்வகை சேவை மையங்களாக மாற்றி அச்சங்கங்களை இலாபகரமாக செயல்படவைப்பது, சுழற்சி பொருளாதாரம் (Waste to Wealth) மற்றும் சிறு பால் பண்ணை அமைப்பதற்குண்டான நிதி ஆதாரங்கள் குறித்து விரிவாக பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சியில் 450 பணியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

இப்பயிற்சியின் விளைவாக அனைத்து பால் உற்பத்தியாளர்களுக்கும் கறவைக்கடன் பெற்று வழங்குதல், அனைத்து சங்கங்களையும் இலாபகரமாக செயல்பட வைத்தல், செயலற்ற சங்கங்களை புதுப்பித்தல், பால் கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றி இலாபகரமாக செயல்படவைத்தல், இளைஞர்களை பால் உற்பத்தி தொழிலுக்கு ஈர்த்தல், சங்கங்கள் இல்லாத பகுதிகளில் புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்துதல், வறட்சிகாலத்தில் எவ்வித தட்டுப்பாடுமின்றி கால்நடைத் தீவனம் கிடைப்பதை உறுதி செய்தல், ஆவின் பால் உப பொருட்கள் விற்பனையை அதிகரித்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் கிராம பொருளாதாரத்தை உயர்த்தி பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயல்திட்டம் வகுக்கப்பட்டது.

மேலும் படிக்க | கூட்டுறவு வங்கிகளில் வேலை வேண்டுமா? தமிழ்நாடு அரசு குட் நியூஸ்..!!

மேலும் படிக்க | கூட்டுறவு வங்கியில் அரசு வேலை வேண்டுமா? தமிழ்நாடு அரசின் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளுங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News