)
Tamil Nadu ITI Admissions 2025: தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி மையங்களில் 2025-ம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இது தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், இப்போது திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐ.டி.ஐ) ஆகஸ்ட் 2025-ம் ஆண்டுக்கான நேரடிச்சேர்க்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 17.06.2025 அன்று முதல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசினர் தொழிற் பயிற்சி மையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
எனவே, 10-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, புகைப்படம்-5 மற்றும் விண்ணப்பக் கட்டணங்களுடன் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவ, மாணவிகள் நேரடி சேர்க்கையில் கலந்து பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திண்டுக்கல் – 9965291516, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), திண்டுக்கல் – 9499055763, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் ஒட்டன்சத்திரம் – 9025155088, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் குஜிலியம்பாறை- 9600827733, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திண்டுக்கல்-0451-2970049 ஆகிய தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் உதவித் தொகை ரூ.750 வழங்கப்படும். தமிழ் புதல்வன் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும். பயிற்சியில் சேர ஆண்களுக்கான வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை, மகளிருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. விலையில்லா பாடப்புத்தகம், சீருடை, மிதிவண்டி, வரைபட கருவிகள் மற்றும் மூடு காலணிகள், இலவச பேருந்து பயண அட்டை, விலையில்லா சீருடை மற்றும் தையற் கூலி ஆண்டுதோறும் வழங்கப்படும். மத்திய அரசின் NCVT சான்றிதழ் வழங்கப்படும். கட்டணமில்லா உணவுடன் கூடிய தங்கும் விடுதி வசதி உண்டு. தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் தொழில்பழகுநர் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்து தரப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ