)
IRCTC Latest News: நாட்டில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது விரைவு ரயில்களின் சேவை. தொலைதூர பயணங்களுக்கு மக்கள் ரயில் சேவைகளையே விரும்புகின்றனர். குறைந்த செலவில், படுக்கை வசதி, கழிவறை வசதிகளுடன் இருப்பதால் மக்கள் தொலைதூர பயணங்களுக்கு ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பயணிகள் வசதிக்காகவும் ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுபுது வசதிகளையும் இந்தியன் ரயில்வே கொண்டு வருகிறது.
ஆனால், ரயில்களில் டிக்கெட் கிடைப்பது என்பது அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை. குறிப்பாக, பண்டிகை நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் ரயில்களில் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாகவே உள்ளது. பயணத்தின் கடைசி நாள் வரை மக்கள் ரயில் டிக்கெட் கிடைக்க முயற்சித்து வருகின்றனர். இதற்காக தட்கலிலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர்.
காலை 11 மணிக்கு தட்கல் டிக்கெட் ஓபன் செய்யப்பட்டவுடன் ஒருசில நிமிடங்களில் டிக்கெட்டுகள் தீர்ந்து விடுகின்றன. இதனால், பலருக்கும் டிக்கெட் கிடைப்பதில்லை. இதனால், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய இடைதரகர்கள் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. இவர்கள் டிக்கெட் கட்டணத்தை விட, கூடுதலாக ரூ.500 முதல் 600 வரை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்ட இந்தியன் ரயில்வே, தட்கல் டிக்கெட்டில் விதிமுறை மாற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரயில் நிலையம் டிக்கெட் கவுண்டர்களில் தட்கல் டிக்கெட் பெறுபவர்களுக்கு ரயில்வே கொண்டு வந்த புதிய ரூல்ஸ் பெரிதும் உதவியாக இருக்கும். புதிய விதிமுறைப்படி, தட்கல் டிக்கெட் படிவத்தில் மொபைல் எண்ணைச் சேர்ப்பது இப்போது கட்டாயமாகும். டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் அல்லது டிக்கெட் கவுண்டர் கண்காணிப்பாளர் டிக்கெட் படிவத்தை ஏற்று கொள்வதற்கு முன்பு, மொபைல் எண்ணைச் சரிபார்ப்பார்.
சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயல்பாட்டையும் உடனடியாகக் கண்டறிய ரயில்வே பாதுகாப்புப் படையினரால் மொபைல் எண்ணும் சரிபார்க்கப்படும். இது போலியாக டிக்கெட்டுகளைப் பெறுவதற்கான வாய்ப்பைக் கணிசமாகக் குறைக்கும். மேலும், டிக்கெட் முன்பதிவு செய்பவர் மற்றும் அவரது தாய், தந்தைக்கு மட்டுமே டிக்கெட் படிவங்கள் வழங்கப்படும்.
உறவினர்கள் என யாருக்கும் தட்கல் டிக்கெட் படிவம் வழங்கப்படாது. டிக்கெட் முன்பதிவு கவுண்டர்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் பணியமர்த்தப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தட்கல் டிக்கெட்டுகள் விற்பனை செய்பவர்களை சம்பவ இடத்திலேயே பிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.
இந்த அமைப்பு டிக்கெட் மையங்களில் ஒழுக்கத்தையும் வெளிப்படைத்தன்மையையும் பராமரிக்க உதவும். இந்த புதிய விதிமுறை பயணிகளுக்கு பணத்தை மிச்சப்படுத்தும். இனி தட்கல் டிக்கெட் பெறும்போது கூடுதலாக ரூ.500 முதல் ரூ.600 வரை மிச்சப்படுத்த உதவும். தட்கல் டிக்கெட்டை விற்பனையும் இது தடுக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ