)
Private Sector Employees Latest News: தனியார் துறையில் பணிபுரியும் ஊழியரா நீங்கள்? இபிஎஃப் கணக்கில் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு சில முக்கிய செய்திகள் காத்திருக்கின்றன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPF உறுப்பினர்களுக்கு இந்த தீபாவளி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கவுள்ளது. EPFO அவ்வப்போது அதன் உறுப்பினர்களுக்கு புதிய திட்டங்கள், வட்டி விகித மாற்றங்கள் மற்றும் நிதி சலுகைகள் மூலம் வசதிகளையும் பயன்களையும் அதிகப்படுத்துகின்றது. இந்த முறை, தீபாவளிக்கு முன், இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மூன்று பெரிய செய்திகள் கிடைக்கும். இந்த மூன்று செய்திகள் என்ன? இவற்றால் யார் பயனடைவார்கள்? இவற்றை பற்றி இங்கே காணலாம்.
தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அதன் உறுப்பினர்களுக்கு 2 நற்செய்திகளுக்கான குறிப்பை அளித்துள்ளது.
முதல் நற்செய்தி: பிஎஃப் வட்டி
2024-25 நிதியாண்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட EPF வட்டி விகிதம் ஆண்டுக்கு 8.25% ஆகும். இது மே 22, 2025 அன்று மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இந்த தொகை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) பிஎஃப் உறுப்பினர் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. 2024-25 ஆம் ஆண்டிற்கான வட்டி தீபாவளிக்கு முன் பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரது கணக்குகளிலும் வரவு வைக்கப்படும் என்றும் EPFO அறிவித்துள்ளது. இது ஊழியர்களின் ஓய்வூதிய சேமிப்பை அதிகரிக்கும்.
இரண்டாவது நற்செய்தி: இபிஎஸ் ஓய்வூதியம்
அக்டோபர் 10-11 தேதிகளில் EPFO மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டம் நடைபெற உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் மன்சுக் மண்டவியா தலைமை தாங்குவார். இந்த கூட்டத்தில் இபிஎஸ் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை அதிகரிப்பது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டு ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகின்றது.
தற்போது EPS இன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 ஆகவும், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆகவும் உள்ளது. குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை ரூ.1,000 லிருந்து ரூ.7,500 ஆக, அல்லது குறைந்தபட்சம் ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. அக்டோபர் மாதம் நடக்கவுள்ள கூட்டத்தில் இது தொடர்பான நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.
மூன்றாவது நற்செய்தி: EPFO 3.0 அமலாக்கம்
அக்டோபர் மாதம் நடக்கவுள்ள கூட்டத்தில் EPFO 3.0 -இன் அமலாக்கம் பற்றிய அப்டேட்டும் கிடைக்க வாய்ப்புள்லது. ATM, UPI மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி, எளிய க்ளெய்ம் செயல்முறை, டிஜிட்டல் ரீதியான புதுப்பித்தல்கள், கணக்கு விவரங்களை மாற்றுவதற்கான எளிய அமைப்புகள் என பல வித மேம்படுத்தல்கள் EPFO 3.0 -இல் இருக்கும் என கூறப்படுகின்றது. அக்டோபரில் நடக்கவுள்ள கூட்டத்தில், EPFO 3.0 அமலுக்கு வரக்கூடிய தேதி, இதில் இடம்பெறவுள்ள புதிய அப்டேட்கள் ஆகியவை இறுதிசெயப்படலாம் என வட்டாரங்கள் கூறுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ