அமெரிக்க அதிரடி நடவடிக்கை தொடர்பான புவிசார் அரசியல் பதற்றம் மற்றும் நிச்சயமற்ற தன்மை ஆகியவை உலகெங்கிலும் உள்ள சந்தைகளில் அழுத்தத்தை அதிகரித்து வருகிறது. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உச்சத்தில் இருந்து இரட்டை இலக்க அளவில் பலவீனமடைந்துள்ளன. பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் பணத்தை இழப்பது மட்டுமின்றி, ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் செய்யப்பட்டுள்ள எஸ்ஐபி முதலீடுகளும் பாதிக்கப்படுகின்றன. கடந்த 6 மாதங்களில், பல மியூச்சுவல் ஃபண்டுகளின் வருமானம் பெரிதும் குறைந்துள்ளது.
முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பீதி
SIP வருமானம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், முதலீட்டாளர்கள் மனதில் பதற்றம் அடைந்துள்ளனர். இழப்புகள் அதிகரிக்கும் என்ற அச்சத்தால் பணத்தை திரும்பப் பெறும் முதலீட்டாளர்கள் அதிகரித்துள்ளனர். சந்தையின் தற்போதைய சரிவில், எனது SIP முதலீட்டை நிறுத்த வேண்டுமா என்பது போன்ற கேள்விகள் முதலீட்டாளர்களிடமிருந்து அதிகரித்து வருகின்றன. கேள்வி நியாயமானது தான். ஏனெனில் சில்லறை முதலீட்டாளர்கள் எப்போதும் தங்கள் முதலீடுகளில் (Sip Investment) சிறந்த வருமானத்தை எதிர்பார்க்கிறார்கள்.
பங்குச்சந்தை முதலீட்டின் குரு வழங்கும் டிப்ஸ்
சந்தை நிலைமையினால் பீதியில் முடிவை எடுப்பது உகந்தது அல்ல என நிபுணர்கள் கூறுகின்றனர். அதேசமயம் பொறுமையாக இருக்கும் முதலீட்டாளர்கள் சிறந்த வருமானத்தை பெறுவார்கள் (SIP Returns). எனவே, முதலீட்டாளர்கள் ஏற்ற இறக்கத்திற்கு அஞ்சாமல் முதலீடு செய்வதன் மூலம் கூட்டு வட்டியின் பலனை நன்றாக பயன்படுத்திக் கொள்ள முடியும். பீதி அடைவதற்கு பதிலாக, பங்குச்சந்தை முதலீட்டின் குரு என அழைக்கப்படும் வாரன் பஃபெட்டின் சில முதலீட்டு மந்திரங்களை நீங்கள் பின்பற்றினால், உங்கள் SIP உத்தியில் சூப்பர் வருமானம் பெறலாம்.
சந்தையில் நிலைத்து நிற்பதே வெற்றியின் ரகசியம்
முதலீட்டாளர்கள் சந்தையில் பொறுமையாக இருப்பது முக்கியம் என்றும், இலக்கு பெரியதாக இருந்தால், முதலீட்டு காலமும் அதிகமாக இருக்க வேண்டும். 1960ம் ஆண்டில், 30 வயதில், வாரன் பஃபெட்டின் சொத்து $ 1 மில்லியனாக இருந்தது, இது 1986ம் ஆண்டில் $100 கோடியாக உயர்ந்தது. 56 வயதில், 2025ம் ஆண்டில், 94 வயதில் $161 பில்லியன்களுக்கு உரிமையாளரானார். அதாவது நீண்ட கால முதலீடுகள் அதிக வருமானம் தருவதோடு மட்டுமல்லாமல் பணத்தை பன்மடங்காக்கலாம்.
நீண்ட கால முதலீட்டில் கிடைக்கும் பலன்கள்
நீண்ட கால முதலீட்டில் கிடைக்கும் பலன்களை கணக்கீடுகள் மூலம் இதைப் புரிந்து கொள்ள முடியும். 15 ஆண்டுகளுக்கான முதலீட்டில் 18 சதவீதம் ஆண்டு வருமானம் கிடைத்ததாக வைத்துக்கொள்வோம். மாதம் ரூ 3000 மாதாந்திர SIP முதலீட்டில், 15 ஆண்டுகளில் உங்கள் சொத்து சுமார் 24 லட்சமாக அதிகரிக்கும். உங்கள் ரூ.5.40 லட்சமாக இருந்த மொத்த முதலீட்டில், ரூ.18.60 லட்சம் லாபம் கிடைத்துள்ளது.
கூட்டு வட்டி வருமானத்தினால் கிடைக்கும் பலன்கள்
25 ஆண்டுகளுக்கு முதலீட்டில் 12 சதவீதம் மட்டுமே வருமானம் கிடைத்தாலும் கூட உங்கள் மாதாந்திர SIP முதலீடான ரூ.3000, 25 ஆண்டுகளில் ரூ 51 லட்சம் என்ற அளவில் அதிகரிக்கும். அதேசமயம் உங்கள் மொத்த முதலீடு ரூ.9 லட்சம் மட்டுமே. ஆனால், அதில் கிடைத்த நிகர லாபம் ரூ.42 லட்சம். கூட்டு வட்டி வருமானத்தினால் இது சாத்தியமானது.
SIP முதலீட்டில் கீழ்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்:
1. பரஸ்பர நிதிய சந்தையில் அதிக பட்ச வருமானத்தை பெற நீண்ட கால முதலீடு தேவை.
2. சந்தை சரியும் போது அதிக பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று வாரன் பஃபெட் கூறுகிறார். இதன் மூலம் அதிகபட்ச பலனை அடையலாம்.
3. நீண்ட கால முதலீட்டில் 15 முதல் 20 சதவீதம் லாபம் கிடைக்கும் வகையிலான சிறந்த பங்குகளில் முதலீடு செய்யுங்கள் என்று வாரன் பஃபெட் கூறுகிறார். பேராசையால் குழப்பமடைவது நஷ்டத்தை கொடுக்கும்.
4. முதலீடு செய்த பிறகு, போர்ட்ஃபோலியோவின் மதிப்பை மீண்டும் மீண்டும் சரிபார்ப்பது தவறான உத்தி. சந்தை ஏற்ற இறக்கங்கள் ஒரு இயற்கையான நிகழ்வு, இது அவ்வப்போது நடக்கும்.
மேலும் படிக்க | SWP: ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்க உதவும் பரஸ்பர நிதியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









