)
Tamilnadu Government : திருவள்ளூரைச் சேர்ந்த பெண்கள் நவீன சலவையகம் அமைக்க நிதியுதவியும், திருநெல்வேலியில் உள்ள முன்னாள் படைவீரர்களின் மனைவி, கைம்பெண்கள், திருமணமாகாத பெண்கள் ஆகியோர் இலவச தையல் பயிற்சி பெறவும் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்களில் பயன்பெற யார் விண்ணப்பிக்கலாம்?, என்ன தகுதிகள் வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
திருவள்ளூர் - நவீன முறை சலவையகம் அமைக்க நிதி உதவி
திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைசார்ந்த சலவை தொழிலில் ஈடுபட்டு வருகின்றவர்களை மேம்படுத்துவதற்காக 5 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து நவீன முறை சலவையகங்கள் அமைத்தல் திட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு மூலம் செயல்டுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில்பயன்பெறுவதற்கானதகுதிகள்மற்றும்நிபந்தனைகள்
1. குறைந்தபட்சம் வயது வரம்பு 20
2. குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ( Ministry of Micro Small and Medium Enterprises ) துறையில் மூலம்பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கலாம்
3. குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
4. குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டுவருமானம் ரூ.1,00,000/-க்கு மிகாமல் இருத்தம் வேண்டும்.
5. 5 நபர்கள் கொண்ட குழுவாக அமைத்து செயல்படுத்த வேண்டும்.
6. உபகரணங்களில் வழங்கப்படும் துணி துவைக்கும் இயந்திரத்தின் (Washing Machine) கொள்ளளவு 50 Kgகிலோ ஆக உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.
7. நவீன சலவையகம் அமைக்க வழங்கப்படும் தொகையை ரூ.5,00,000/-ஆக உயர்த்தி 15 குழுக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
8. உபகரணங்களில் வழங்கப்படும் தொடர்ந்து வழங்கப்பட (Steam Iron Box )வேண்டும்.
மேற்படிதகுதிகளுடன் இத்திட்டத்தில் விருப்பம் உள்ளவர்கள், உரிய விண்ணப்பபடிவத்தினை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தரைதளத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று, அதனை பூர்த்தி செய்து, உரிய சான்று மற்றும் ஆவணங்களின் நகல்களை இணைத்து சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.
திருநெல்வேலி - இலவசமாக தையல் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள் மற்றும் திருமணமாகாத மகள்கள் இலவசமாக தையல் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண்கள் மற்றும் திருமணமாகாத மகள்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் மூலம் இலவசமாக தையல் பயிற்சி பெற்று பயனடையலாம்.
விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்களின் மனைவி, கைம்பெண்கள் மற்றும் திருமணமாகாத மகள்கள் இத்திட்டத்தின் வாயிலாக இலவச தையல் பயிற்சி பெற திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ (0462-2901440) தொடர்பு கொண்டு விருப்ப விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ