SIP: பங்குச் சந்தை சரிவிலும்... 20% வருமானம் தந்த டாப் 10 மியூச்சுவல் பண்டுகள் இவை தான்

SIP Mutual Funds: எளியான முதலீட்டு முறையும், நல்ல வருமானமும் நடுத்தர வர்க்கம் மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு SIP முதல் தேர்வாக மாறியுள்ளதற்கு முக்கிய காரணம். அதோடு, கடந்த 10 ஆண்டுகளின் தரவைப் பார்த்தால், பல ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் ஆண்டுதோறும் 20% வருமானத்தை அளித்துள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 15, 2025, 02:50 PM IST
  • SIP முதலீடுகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள்
  • முதலீட்டாளர்கள் SIP முதலீட்டை தொடங்கவும் தொடரவும் மிகச் சிறந்த நேரம் இது.
  • சிறந்த வருமானத்தைக் கொடுத்த டாப் 10 மியூச்சுவல் ஃபண்டுகள்.
SIP: பங்குச் சந்தை சரிவிலும்... 20% வருமானம் தந்த டாப் 10 மியூச்சுவல் பண்டுகள் இவை தான்

கடந்த சில ஆண்டுகளில், மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீடுகள் வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை தரவுகள் இதைக் காட்டுகின்றன. 2016 ஏப்ரல் மாதத்தில் மாதாந்திர SIP முதலீடுகள் ரூ.3,122 கோடியாக இருந்தது. இப்போது கடந்த பல மாதங்களாக தொடர்ந்து ரூ.26,000 கோடி அளவில் உள்ளது. இது 8 மடங்குக்கும் அதிகமான வளர்ச்சியாகும். கடந்த 6 மாதங்களாக பங்குச் சந்தையில் ஏற்ற இற்றக்கங்கள் அதிகம் காணப்பட்டாலும், முதலீட்டாளர்கள் முதலீட்டை தொடங்கவும் தொடரவும் மிகச் சிறந்த நேரம் இது தான் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்

Add Zee News as a Preferred Source

SIP முதலீடுகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள்

எளியான முதலீட்டு முறையும், நல்ல வருமானமும் நடுத்தர வர்க்கம் மற்றும் சிறு முதலீட்டாளர்களுக்கு SIP முதல் தேர்வாக மாறியுள்ளதற்கு முக்கிய காரணம். அதோடு, கடந்த 10 ஆண்டுகளின் தரவைப் பார்த்தால், பல ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் ஆண்டுதோறும் 20% க்கும் அதிகமான வருமானத்தை அளித்துள்ளன. அதாவது மாதம் வெறும் ரூ.10,000 SIP முதலீடு செய்திருந்தால் கூட, இன்று அவரது முதலீடு ரூ.44 லட்சத்தை எட்டியிருக்கும். அந்த வகையில் இந்த பதிவில், கடந்த 10 ஆண்டுகளில் 20% என்ற அளவிற்கும் அதிகமான CAGR எனப்படும் ஆண்டு சராசரி வருமானத்தை அளித்த டாப்-10 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளைப் பார்ப்போம்.

கடந்த 10 ஆண்டுகளில் சிறந்த வருமானத்தைக் கொடுத்த டாப் 10 மியூச்சுவல் ஃபண்டுகள்

கடந்த 10 ஆண்டு செயல்திறனை அடிப்படையாகக் கொண்ட இந்த டாப் 10 மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில், நான்கு மிட்கேப் ஃபண்டுகள், மூன்று துறைசார் ஃபண்டுகள், இரண்டு ஸ்மால்கேப் ஃபண்டுகள் மற்றும் ஒரு ELSS ஃபண்டுகள் ஆகியவை அடங்கும்.

1. Quant Small Cap Fund

இதில் கடந்த 10 ஆண்டுகளில் SIP முதலீட்டில் கிடைத்த ஆண்டு சராசரி வருமானம் 24.56% CAGR. இதில் ரூ.10,000 என்ற அளவிலான மாதாந்திர SIP முதலீடு 10 ஆண்டுகளில் ரூ.43.54 லட்சமாக உயர்ந்திருக்கும். இந்த நிதியத்தில் 10 வருட மொத்த முதலீடிற்கு கிடைத்த வருமானம் 19.17% CAGR. அதாவது இந்தத் திட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 1 லட்சம் மொத்த முதலீடு கிட்டத்தட்ட ரூ.5.78 லட்சமாக அதிகரித்திருக்கும்.

2. Nippon India Small Cap Fund

கடந்த 10 ஆண்டுகளில் SIP முதலீட்டில் கிடைத்த ஆண்டு சராசரி வருமானம் 22.93% CAGR. இதில் ரூ.10,000 என்ற அளவிலான மாதாந்திர SIP முதலீடு, 10 ஆண்டுகளில் ரூ. 39.90 லட்சமாக உயர்ந்திருக்கும். இதில் 10 வருட மொத்த முதலீட்டு வருமானம் 20.44% CAGR. அதாவது இந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மொத்த முதலீடு 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ரூ.6.42 லட்சமாக அதிகரித்திருக்கும்.

3. Quant ELSS Tax Saver Fund

கடந்த 10 ஆண்டுகளில் SIP முதலீட்டில் கிடைத்த ஆண்டு சராசரி வருமானம் 21.74% CAGR. இதில் ரூ.10,000 என்ற அளவிலான மாதாந்திர SIP முதலீடு, 10 ஆண்டுகளில் ரூ. 37.43 லட்சத்தை ஈட்டியிருக்கும். இதில் 10 ஆண்டுகளுக்கு முன்பு மொத்த முதலீட்டு வருமானம் 19.62% CAGR. அதாவது 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மொத்த முதலீட்டின் மதிப்பு இப்போது ரூ.6 லட்சமாக இருக்கும்.

4. Quant ELSS Tax Saver Fund

கடந்த 10 ஆண்டுகளில் SIP முதலீட்டில் கிடைத்த ஆண்டு சராசரி வருமானம் 21.60% CAGR. இதில் ரூ.10,000 என்ற அளவிலான மாதாந்திர SIP முதலீடு, 10 ஆண்டுகளில் ரூ. 37.15 லட்சமாக உயர்ந்திருக்கும். இதில் 10 ஆண்டுகளில் மொத்த முதலீட்டு வருமானம் 19.63% CAGR. அதாவது 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மொத்த முதலீடு கிட்டத்தட்ட ரூ.4.78 லட்சமாக மாறியிருக்கும்.

5. Motilal Oswal Midcap Fund

கடந்த 10 ஆண்டுகளில் SIP முதலீட்டில் கிடைத்த ஆண்டு சராசரி வருமானம் 21.47% CAGR.இதில் ரூ.10,000 என்ற அளவிலான மாதாந்திர SIP முதலீடு, 10 ஆண்டுகளில் ரூ.36.90 லட்சமாக மாறியிருக்கும். இதில் 10 ஆண்டுகளுக்கான மொத்த முதலீட்டு வருமானம் 16.99% CAGR. இந்த வருமானத்தின் அடிப்படையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட ரூ.1 லட்சம் என்ற அளவிலான மொத்த முதலீடு ரூ.4.80 லட்சமாக மாறியிருக்கும்.

6. ICICI Prudential Infrastructure Fund

கடந்த 10 ஆண்டுகளில் SIP முதலீட்டில் கிடைத்த ஆண்டு சராசரி வருமானம் 21.37% CAGR. இதில் ரூ.10,000 என்ற அளவிலான மாதாந்திர SIP முதலீடு, 10 ஆண்டுகளில் ரூ.36.7 லட்சமாக மாறியிருக்கும். இதில் 10 வருட மொத்த முதலீட்டில் கிடைக்கும் வருமானம் 15.53% CAGR. அதாவது 10 வருடங்களுக்கு முன்பு இந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மொத்த முதலீட்டின் இன்றைய மதிப்பு இப்போது ரூ.4.23 லட்சமாக இருக்கும்.

7. Edelweiss Mid Cap Fund

கடந்த 10 ஆண்டுகளில் SIP முதலீட்டில் கிடைத்த ஆண்டு சராசரி வருமானம் 20.97% CAGR. இதில் ரூ.10,000 என்ற அளவிலான மாதாந்திர SIP முதலீடு, 10 ஆண்டுகளில் ரூ. 35.91 லட்சமாக மாறியிருக்கும். இதில் 10 வருட மொத்த முதலீடில் கிடைத்த வருமானம்: 17.26% CAGR. இந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மொத்த முதலீடு இப்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.4.91 லட்சமாக உயர்ந்திருக்கும்.

8. Invesco India Infrastructure Fund

கடந்த 10 ஆண்டுகளில் SIP முதலீட்டில் கிடைத்த ஆண்டு சராசரி வருமானம் 20.67% CAGR.இதில் ரூ.10,000 என்ற அளவிலான மாதாந்திர SIP முதலீடு, 10 ஆண்டுகளில் இப்போது ரூ. 35.33 லட்சமாக வளர்திருக்கும். இதில் 10 வருட மொத்த முதலீடில் கிடைத்த வருமானம் 15.65% CAGR. இதில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மொத்த முதலீடு இப்போது கிட்டத்தட்ட ரூ.4.28 லட்சம் மதிப்புடையதாக இருக்கும்.

9. Franklin Build India Fund

கடந்த 10 ஆண்டுகளில் SIP முதலீட்டில் கிடைத்த ஆண்டு சராசரி வருமானம் 20.60% CAGR. இந்த SIP வருமானத்தின் அடிப்படையில், ரூ. 10,000 மாதாந்திர SIP 10 ஆண்டுகளில் ரூ. 35.21 லட்சமாக மாறியிருக்கும். இதில் 10 வருட மொத்த முதலீட்டிற்கு கிடைத்த வருமானம்: 16.59% CAGR. அதாவது இந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மொத்த முதலீடு இப்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 4.64 லட்சமாக அதிகரித்திருக்கும்.

10. Nippon India Growth Fund

கடந்த 10 ஆண்டுகளில் SIP முதலீட்டில் கிடைத்த ஆண்டு சராசரி வருமானம் 20.38% CAGR. இந்த SIP வருமானத்தின் அடிப்படையில், ரூ. 10,000 மாதாந்திர SIP 10 ஆண்டுகளில் ரூ. 34.79 லட்சம் மதிப்புடையதாக இருக்கும். இதில் செய்யப்பட்ட 10 வருட மொத்த முதலீட்டிற்கு கிடைத்துள்ள வருமானம் 16.66% CAGR. அதாவது இந்தத் திட்டத்தில் செய்யப்பட்ட ரூ. 1 லட்சம் மொத்த முதலீடு 10 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 4.67 லட்சமாக அதிகரித்திருக்கும்.

(ஆதாரம்: Value Research)

சந்தை ஏற்ற இறக்கம் SIP முதலீடுகளை பாதிக்கும்

சந்தை எல்லா நேரங்களிலும் சிறப்பாகச் செயல்படுவதில்லை என்பதும் உண்மை. கடந்த ஒரு வருடத்தில், ஒரு சில துறை சார்ந்த நிதிகளைத் தவிர, கிட்டத்தட்ட அனைத்து ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளும் நஷ்டத்தில் இருந்தன அல்லது மிகக் குறைந்த வருமானத்தையே அளித்தன. ஆனால் SIP பற்றிய ஒரு சிறப்பு விஷயம் என்னவென்றால், ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் நீண்ட கால முதலீட்டில் நல்ல வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்பு சிறப்பாக உள்ளது.

பொறுப்பு துறப்பு: பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | Mutual Funds: மாதம் ரூ.5000 SIP ஆரம்பிங்க.... 45 வயதில் கையில் ரூ.1.08 கோடி இருக்கும்

மேலும் படிக்க | NPS முதலீடு... 55வது வயதில் கையில் ரூ.3.7 கோடி... மாதா மாதம் ரூ.85,000 பென்ஷனும் உண்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News