லட்சங்களில் வருமானம் கிடைக்க.. நீங்கள் கட்டாயம் வேண்டிய 5 முதலீடுகள் இவை தான்...

உங்கள் பொருளாதார நிலை உயரவும், ஓய்வு காலத்தில் லட்சங்களில் வருமானம் பெறவும் ஆயிரங்களை கோடிகளாக்கும் முதலீடுகள் அவசியம். இதனை பெற உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் சேர்க்கப்பட வேண்டிய 5 முக்கிய முதலீடுகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 4, 2025, 01:16 PM IST
  • PPF என்னும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், நல்ல கார்பஸை உருவாக்க உதவும் சிறந்த முதலீடு.
  • கூட்டு வட்டி வருமானத்தை கொடுப்பதால், இது உங்கள் பணத்தை மிக வேகமாக வளரச் செய்கிறது.
  • பங்குகளில் நேரடியாக பணத்தை முதலீடு செய்வதை விட பரஸ்பர நிதியங்களில் ரிஸ்க் குறைவு.
லட்சங்களில் வருமானம் கிடைக்க.. நீங்கள் கட்டாயம் வேண்டிய 5 முதலீடுகள் இவை தான்...

சிறந்த முதலீடுகளின் மூலம், உங்களுக்கான ஓய்வு கால நிதியை கோடிகளில் சேர்ப்பதோடு, அதன் மூலம் மாத வருமானமாக லட்சங்களை பெறலாம். உங்கள் பொருளாதார நிலை உயரவும், ஓய்வு காலத்தில் லட்சங்களில் வருமானம் பெறவும் ஆயிரங்களை கோடிகளாக்கும் முதலீடுகள் அவசியம். அதே சமயத்தில் பாதுகாப்பான முதலீடுகளும் தேவை. இந்த இரண்டையும் பெற நீங்கள் முதலீடுகளை பன்முகப்படுத்த வேண்டும் என்று நிதி நிபுணர்கள் கூறுகிறார்கள். உங்கள் பணத்தை எப்போதும் ஒரே இடத்தில் முதலீடு செய்யக்கூடாது. முதலீட்டை பன்முகப்படுத்துவதன் மூலம் அனைத்து வகையான நிதி அபாயங்களையும் குறைத்து சிறந்த லாபத்தைப் பெறலாம். அந்த வகையில் உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் சேர்க்கப்பட வேண்டிய 5 முக்கிய முதலீடுகளை பற்றி (Investment Tips) இங்கே தெரிந்து கொள்ளலாம்.

Add Zee News as a Preferred Source

பரஸ்பர நிதியங்கள் (Mutual Fund Investment)

மியூச்சுவல் ஃபண்டுகள் என்னும் பரஸ்பர நிதியங்கள் சந்தை இணைக்கப்பட்ட திட்டங்கள். எஸ்ஐபி (SIP Mutual Fund) மூலம் இதில் எளிதாக முதலீடு செய்யத் தொடங்கலாம். பங்குகளில் நேரடியாக பணத்தை முதலீடு செய்வதை விட இதில் ரிஸ்க் குறைவு என்பது இதன் சிறப்பு அம்சம். நீண்ட கால எஸ்ஐபி முதலீடுகளில் கிடைக்கும் சராசரி ஆண்டு வருவாய் சுமார் 12% - 15% என்ற அளவில் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், கூட்டு வட்டி வருமானத்தை (Power Of Compounding) கொடுப்பதால், இது உங்கள் பணத்தை மிக வேகமாக வளரச் செய்கிறது. பொருளாதார நிபுணர் ஆலோசனைப்படி, உங்கள் இலக்குகளுக்கு ஏற்ப கடன், ஈக்விட்டி, ஹைப்ரிட் ஃபண்டுகள் போன்றவற்றை உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் சேர்க்க வேண்டும்.

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund)

PPF என்னும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம், நல்ல கார்பஸை உருவாக்க உதவும் சிறந்த முதலீடு. இதற்கு வருமான வரி விலக்கும் உண்டு. இதில் செய்யு முதலீடு, பெறப்படும் வருமானம் என அனைத்திற்கும் விலக்கு கிடைக்கும். இதில், ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சியடைகிறது. தற்போது 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் அதிக லாபம் ஈட்ட திட்டத்தை நீட்டிக்க ஆப்ஷனும் உள்ளது.

தங்கம் (Gold)

உங்கள் போர்ட்ஃபோலியோவில் தங்கத்தின் பங்கு 10% முதல் 15% வரை இருக்க வேண்டும் என்று நிதி நிபுணர்கள் கூறுகிறார்கள். தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது மேலும் உயரும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். தங்கத்தை நகையாக காயினாக வாங்க விரும்பவில்லை என்றால், நீங்கள் தங்க ஈடிஎஃப் அல்லது டிஜிட்டல் தங்கத்தில் பணத்தை முதலீடு செய்யலாம்.

நிலையான வைப்பு தொகை ( FD Deposit Schemes)

வங்கிகள் மற்றும் அஞ்சலகம் வழங்கும் நிலையான வைப்பு திட்டங்களில், 1 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு முதலீடு செய்யலாம். காலத்துக்கு ஏற்ப வட்டி விகிதமும் மாறுபடும். இதன் மூலம், நிலையான அளவில் பணம் பெருகுவதோடு, உங்களது தேவைக்கு ஏற்ப FD மூலம் அந்தத் தேவையை நீங்கள் பூர்த்தி செய்யலாம். பாதுகாப்பான முதலீட்டிற்கான சிறந்த விருப்பங்களில் FD ஒன்றாகும்.

காப்பீடு (Insurance)

உடல்நலக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு முதலீடுகள் இல்லை என்றாலும், இவை உங்கள் போர்ட்ஃபோலியோவில் சேர்க்கப்பட வேண்டும். உடல்நலக் காப்பீடு கடினமான காலங்களில் உங்களுக்கு ஆதரவளிப்பது மட்டுமல்லாமல், உங்கள் சேமிப்பைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது. துரதிஷ்டவசமான நேரங்களில், ஆயுள் காப்பீடு நிதி குடும்பத்திற்கு உதவி அளிக்கிறது.

மேலே குறிப்பிட்டுள்ள முதலீடுகளின் மூலம், உங்களுக்கான ஓய்வு கால நிதியை கோடிகளில் சேர்ப்பதோடு, அதன் மூலம் மாத வருமானமாக லட்சங்களை பெறலாம்

பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | டீ காசை மிச்சம் பிடித்தே லட்சாதிபதி ஆகலாம்... கை கொடுக்கும் SIP என்னும் பரஸ்பர நிதிய முதலீடு

மேலும் படிக்க | PPF முதலீடு... மாதம் ரூ.12,500 போதும்.... 60 வயதில் கையில் ரூ.2.25 கோடி இருக்கும்... எளிய கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News