SIP Mutual Fund: ஆயிரங்களை கோடிகளாக்கும் எஸ்ஐபி மந்திரம்... 5 காரணங்கள் இது தான்

ஆயிரங்களை கோடிகளாக்கும் எஸ்ஐபி (Systematic Investment Plan) என்னும் முதலீடு மந்திரம் பலரை கோடீஸ்வரர்களாக ஆக்கியுள்ளது. முதலீட்டாளர்களை ஈர்க்க காரணமாக இருக்கும் SIP திட்டத்தின் 5 முக்கிய அம்சங்களை விரிவாக இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 28, 2025, 10:36 AM IST
  • ஆயிரங்களை கோடிகளாக்கும் எஸ்ஐபி என்னும் முதலீடு மந்திரம்.
  • SIP திட்டத்தின் 5 முக்கிய அம்சங்கள்.
  • கூட்டு வட்டி வருமானத்தின் சக்தி.
SIP Mutual Fund: ஆயிரங்களை கோடிகளாக்கும் எஸ்ஐபி மந்திரம்... 5 காரணங்கள் இது தான்

SIP என்னும் முதலீட்டு முறை மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது மிகவும் பிரபலமாகி வருகிறது. பணத்தை பனமடங்காக்கும் மந்திரமாக உள்ள இதில் முதலீடு செய்வதால் பல நன்மைகள் உள்ளன. நீண்ட கால முதலீடுகள் சிறந்த வருமானத்துடன், பெரிய அளவில் செல்வத்தை சேர்க்க உதவுகிறது. நீண்ட கால SIP முதலீட்டின் சராசரி ஆண்டு வருமானம் 12 சதவீதமாக உள்ளது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் இது தவிர, பல வழிகளில் மற்ற திட்டங்களை விட இந்த திட்டத்தை சிறந்த தேர்வக கருதும் பல அம்சங்கள் உள்ளன. 

Add Zee News as a Preferred Source

ஆயிரங்களை கோடிகளாக்கும் எஸ்ஐபி (Systematic Investment Plan) என்னும் முதலீடு மந்திரம் பலரை கோடீஸ்வரர்களாக ஆக்கியுள்ளது. முதலீட்டாளர்களை ஈர்க்க காரணமாக இருக்கும் SIP திட்டத்தின் 5 பெரிய அம்சங்களை விரிவாக இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.

கூட்டு வட்டி வருமானத்தின் சக்தி

எஸ்ஐபி முதலீட்டில் பணத்தை சேர்ப்பதன் பலன் அளப்பரியது. இதில் கூட்டு வட்டி வருமானம் கிடைப்பதே இதற்கு காரணம். எனவே கூட்டு வட்டி வருமானத்தின் பலனை முழுமையாக பெற எஸ்ஐபி முதலீட்டை நீண்ட காலத்திற்கு தொடர வேண்டும். எவ்வளவு காலத்திற்கு முதலீடு தொடருகிறதோ, அந்த அளவுக்கு கூட்டுப் பலன் அதிகமாக இருக்கும். கூட்டுத்தொகையின் கீழ், நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு மட்டும் வருமானம் கிடைக்காது. மாறாக, முந்தைய வருமானத்தின் மீதும் வருமானத்தையும் பெறுவீர்கள்.

நெகிழ்வுத்தன்மை

SIP திட்டத்தில் முதல் சிறப்பு அம்சம் என்னவென்றால், முதலீட்டு காலம் மற்றும் தொகையை நீங்கள் உங்கள் வசதிக்கேற்ப தேர்வு செய்யலாம். அதாவது SIP மூலம் முதலீடு செய்வதில் நெகிழ்வுத்தன்மை உள்ளது. அதாவது, உங்கள் வசதிக்கேற்ப மாதாந்திர, காலாண்டு அல்லது அரையாண்டு முதலீட்டு கால விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். உங்களால் முடிந்த தொகையை முதலீடு செய்யலாம். இது தவிர, உங்களுக்கு முதலீட்டு செய்ய முடியாத நேரத்தில் அதை நிறுத்தலாம். தேவைப்பட்டால் உங்கள் SIP முதலீட்டில் இருந்து பணத்தை எடுக்கலாம். தேவைப்பட்டால், நீங்கள் சிறிது காலத்திற்கு SIP முதலீட்டை இடைநிறுத்தலாம்.

அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை

வெறும் 100-500 ரூபாயில் SIP முதலீட்டை ஆரம்பிக்கலாம், அதாவது சிறிய அளவிலான சேமிப்பை கூட இதில் முதலீடு செய்ய தொடங்கலாம். இதில் அதிகபட்ச முதலீட்டுக்கு வரம்பு இல்லை. இது தவிர, நீங்கள் ஒரே நேரத்தில் பல SIP முதலீடுகளை செய்யலாம். மேலும், எதிர்காலத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது உங்கள் SIP முதலீடுகளையும் அதிகரிக்கலாம்.

ரூபாய்க்கான சராசரி செலவு

உங்கள் முதலீடுகள் பணமாக அல்லாமல் யூனிட்களாக ஒதுக்கப்படுகின்றன. இதனால். நீங்கள் முதலீடு செய்யும் போது, ​​சராசரியாக ரூபாய் செலவின் பலனைப் பெறுவீர்கள். அதாவது, சந்தை வீழ்ச்சியடையும் நேரத்தில் முதலீடு செய்திருந்தால், உங்களுக்கு அதிக யூனிட்கள் ஒதுக்கப்படும். சந்தை உயர்ந்தால், ஒதுக்கப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும். இதனால், சந்தை ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டாலும் உங்கள் செலவுகள் சராசரியாகவே இருக்கும். அதாவது சந்தை சரிந்தாலும் உங்களுக்கு நஷ்டம் ஏற்படாது. சந்தை உயரும் போது, ​​உங்கள் சராசரி முதலீட்டில் சிறந்த வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

முதலீடு செய்யும் பழக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது

SIP மூலம், முதலீடு செய்யும் பழக்கம் ஏற்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முதலீடு செய்து பணத்தை ஈட்டும் ஆர்வம் அதிகரிக்கிறது. இதன் மூலம் நீங்கள் ஒழுக்கமான முதலீடு செய்யும் பழக்கத்தை பெறுவீர்கள்.

மேலும் படிக்க | SIP Mutual Fund: கோடீஸ்வர கனவை நனவாக்க... மாதம் ரூ.3000 முதலீடு போதும்... எளிய கணக்கீடு இதோ

மேலும் படிக்க | SWP: ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்க உதவும் பரஸ்பர நிதியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News