பங்குச் சந்தை சரிவிலும்... ஆண்டுக்கு 32% வருமானம் தந்த டாப் 5 ம்யூச்சுவல் பண்டுகள் இவை தான்

SIP Mutual Funds: கடந்த ஆறு மாதங்களாக பங்குச் சந்தையில் ஏற்ற இற்றக்கங்கள் அதிகம் காணப்படுகிறது. ஆனாலும், முதலீட்டாளர்கள் முதலீட்டை தொடங்கவும் தொடரவும் சிறந்த நேரம் இது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 11, 2025, 01:51 PM IST
  • முதலீட்டாளர்கள் முதலீட்டை தொடங்கவும் தொடரவும் சிறந்த நேரம் இது.
  • துறைசார் நிதிகள் அதிகம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான காரணம்
  • கடந்த 5 ஆண்டுகளில், உள்கட்டமைப்பு நிதிகள் 25% முதல் 41% வரை வருமானத்தை ஈட்டியுள்ளன.
பங்குச் சந்தை சரிவிலும்... ஆண்டுக்கு 32% வருமானம் தந்த டாப் 5 ம்யூச்சுவல் பண்டுகள் இவை தான்

கடந்த ஆறு மாதங்களாக பங்குச் சந்தையில் ஏற்ற இற்றக்கங்கள் அதிகம் காணப்படுகிறது. இதனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களும் கலக்கம் அடைந்துள்ளனர் என்பதை மறுக்க இயலாது. புவிசார் அரசியல் பதற்றங்கள் முதல் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி மந்தமாவது குறித்த கவலைகள் வரை பல காரணிகள் உலக அளவில் பங்குச் சந்தைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. ஆனால், முதலீட்டாளர்கள் முதலீட்டை தொடங்கவும் தொடரவும் சிறந்த நேரம் இது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

Add Zee News as a Preferred Source

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சுமார் 3% சரிவு

இந்திய பங்குச் சந்தை அளவுகோல்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இந்த மாதம் இதுவரை சுமார் 3% சரிந்துள்ளன. அதே நேரத்தில் பரஸ்பர நிதியத்தின் ஸ்மால்கேப் 250 மற்றும் மிட்கேப் 150 பெரிய பாதிப்பை சந்தித்துள்ளன. எனினும் ம்யூச்சுவல் ஃபண்டுகளில் கடந்த மூன்று மற்றும்  ஆறு மாதங்களில், பெரும்பாலான பிரிவுகள் மோசமான நிலையில் இருந்தாலும், சுவாரஸ்யமாக, சில துறைசார் பரஸ்பர நிதியங்கள் கடந்த மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகளில் வலுவான மற்றும் நிலையான வளர்ச்சியைக் காட்டியுள்ளன.

சிறந்த வருமானத்தை தரும் 5 துறைசார் ம்யூச்சுவல் ஃபண்டுகள்

கடந்த ஐந்து ஆண்டு காலப் பதிவின் அடிப்படையில் சிறந்த வருமானத்தை தரும் ஐந்து துறைசார் ம்யூச்சுவல் ஃபண்டுகளை அறிந்து கொள்ளலாம். அனைத்து பரஸ்பர நிதி வகைகளிலும், துறைசார் நிதிகள், குறிப்பாக உள்கட்டமைப்பு, பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடுகள் செய்யும் பரஸ்பர நிதியங்கள் சுமார் 36%  முதல் 41% என்ற அதிகபட்ச சராசரி வருமானத்தை வழங்கியுள்ளன. 

கடந்த மூன்று ஆண்டுகளில், உள்கட்டமைப்பு நிதியங்கள் 13% முதல் 26% வரை வருமானத்தை ஈட்டியுள்ளன. ஐந்து ஆண்டுகள் வரை ​​வருமானத்தை பார்க்கும் இன்னும் சிறப்பாக உள்ளது.  5 ஆண்டுகளுக்கான சராசரி வருமானம் 25% முதல் 41%  என்ற அளவில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் சிறந்த 5 துறைசார்/பொதுத்துறை பரஸ்பர நிதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள

1. Quant Infrastructure Fund

கடந்த 5 ஆண்டு வருமானம்: 41.09%

கடந்த  3 ஆண்டு வருமானம்: 14.98%

2. ICICI Prudential Commodities Fund

கடந்த  5 ஆண்டு வருமானம்: 39.06%

கடந்த  3 ஆண்டு வருமானம்: 11.65%

3. ICICI Prudential Infrastructure Fund

கடந்த  5 ஆண்டு வருமானம்: 38.25%

கடந்த  3 ஆண்டு வருமானம்: 25.58%

4. Bandhan Infrastructure Fund

கடந்த 5 ஆண்டு வருமானம்: 37.04%

கடந்த  3 ஆண்டு வருமானம்: 23.03%

5. HDFC Infrastructure Fund

கடந்த  5 ஆண்டு வருமானம்: 36%

கடந்த  3 ஆண்டு வருமானம்: 26.39%

(தகவல் ஆதாரம்: AMFI)

துறைசார் நிதிகள் அதிகம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான காரணம்

தற்போது சந்தையில் உள்ள சுமார் 210 நிதியங்களில் உள்கட்டமைப்பு, பொதுத்துறை நிறுவனங்கள், மருந்துத்துறை, வங்கி மற்றும் நுகர்வு போன்ற துறைகளை அடிப்படையாகக் கொண்ட  நிதிகள் கடந்த சில ஆண்டுகளில் நல்ல வருமானத்தைத் தந்துள்ளன என AMFI தரவுகள் கூறுகிறது. இதன் காரணமாக இதில் முதலீடு செய்யும் ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒரு துறையில் ஏற்ற இறக்கம் இருக்கும்போதும், ​​இந்த நிதிகள் மற்ற நிதிகளை விட மிகச் சிறப்பாக செயல்படுகின்றன

பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: அரசின் பரிசாக புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்? குஷியில் ஊழியர்கள்

மேலும் படிக்க | NPS முதலீடு... 55வது வயதில் கையில் ரூ.3.7 கோடி... மாதா மாதம் ரூ.85,000 பென்ஷனும் உண்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News