Senior Citizens Latest News: முதுமையில் நிதி பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒரு விஷயமாகும். மூத்த குடிமக்களுக்கு மற்ற வயதினரை போல நிலையான வருமானம் இருப்பதில்லை. ஆனால், அந்த வயதில் செலவுகளும் அதிகமாக வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட நிலையில், முதுமையில் நிலையான நிதி ஆதரவை பெற இள வயதிலேயே திட்டமிடுவது மிக அவசியமாகும். அரசாங்கமும் மூத்த குடிமக்களுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
முதலீட்டை பொறுத்த வரை, மூத்த குடிமக்கள் அதிக வருமானத்தை விட உத்தரவாதமான வருமானத்தையே விரும்புகிறார்கள். முதுமை நெருங்கும்போது, வழக்கமான வருமானமே மிகப்பெரிய கவலையாக இருப்பதே இதற்கு காரணம். அத்தகைய சூழ்நிலையில், அரசாங்கத் திட்டங்கள் முதுமைக் காலத்தில் நல்ல உத்தரவாதமான வருமானத்தை வழங்க உதவும்.
அரசின் ஓய்வூதியத் திட்டங்கள்
பணி ஓய்வு பெற்று, உடல் தளர்ந்து, வருமானத்திற்கு வேறு வழியில்லாதபோது, ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான ஓய்வூதியத்தை வழங்கும் ஒரு பாதுகாப்பான திட்டம் தேவைப்படுகிறது. இத்தகைய நேரங்களில், அரசாங்கத்தின் ஓய்வூதிய அடிப்படையிலான திட்டங்கள் ஒரு வலுவான ஆதரவாக அமைகின்றன. குறிப்பாக, அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கும் அல்லது தனியார் வேலைகளுக்குப் பிறகு எந்த ஓய்வூதியத் திட்டமும் இல்லாதவர்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
கடந்த சில ஆண்டுகளில், அரசாங்கம் முதுமைக் காலத்தில் நிதிப் பாதுகாப்பை வழங்கும் பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டங்களில் மிகவும் பிரபலமான மற்றும் நம்பகமான திட்டங்களாக கருதப்படும் இரு திட்டங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Pradhan Mantri Vaya Vandana Yojana
பிரதம மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) திட்டம் குறிப்பாக 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கானது. இது எல்.ஐ.சி (LIC) மூலம் நடத்தப்படுகிறது. இதில் முதலீடு செய்பவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு உத்தரவாதமான ஓய்வூதியம் கிடைக்கும். முதலீட்டாளர்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு ஓய்வூதியத்தைத் தேர்வு செய்யலாம். தற்போது, இந்த திட்டம் சுமார் 7.4% உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது. ஒரு நபர் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் முதலீடு செய்தால், அவருக்கு மாதத்திற்கு சுமார் ரூ. 9,250 ஓய்வூதியம் கிடைக்கும்.
Atal Pension Yojana
அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டம் குறிப்பாக அமைப்புசாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காகக் கொண்டுவரப்பட்டது. 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் இதில் சேரலாம். பயனாளிகள் எவ்வளவு விரைவாக இதில் சேருகிறார்களோ, அவ்வளவு பிரீமியம் குறைவாக இருக்கும், பலன்களும் அதிகமாக இருக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், 60 வயதுக்குப் பிறகு ஒரு நபருக்கு மாதத்திற்கு ரூ. 1,000 முதல் ரூ. 5,000 வரை ஓய்வூதியம் கிடைக்கும். இதில் முதலீட்டாளர் மற்றும் அரசாங்கம் இருவரும் பங்களிக்கின்றனர். வருமான வரி செலுத்தாதவர்களுக்கும் இந்தத் திட்டத்தில் அரசாங்கப் பங்களிப்பு கிடைக்கிறது.
PMVVY திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி
- பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா (PMVVY) திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பினால், முதலீட்டாளர் அருகிலுள்ள எல்.ஐ.சி அலுவலகத்திற்குச் சென்று படிவத்தை நிரப்பலாம்.
- மேலும், எல்.ஐ.சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
- இதற்கு ஆதார் அட்டை, பான் அட்டை, வயதுச் சான்றிதழ் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் தேவைப்படும்.
APY திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி
- முதலீட்டாளர்கள் தங்கள் அருகிலுள்ள வங்கி கிளை அல்லது அஞ்சல் அலுவலகத்திற்குச் சென்று அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- இதற்கு விண்ணப்பிக்க ஒரு சேமிப்புக் கணக்கு இருக்க வேண்டும்.
- வங்கி முதகீட்டாளருக்கு ஒரு APY படிவத்தை வழங்கும்.
- அதை அவர் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
- நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் மூலமாகவும் இந்தத் திட்டத்தில் பதிவு செய்யலாம்.
- பதிவு செய்தவுடன், முதலீட்டாளர் தேர்ந்தெடுத்த ஓய்வூதியத் தொகைக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட பங்களிப்புத் தொகை ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கிலிருந்து தானாகவே கழிக்கப்படும்.
பிரதம மந்திரி வய வந்தனா யோஜனா மற்றும் அடல் பென்ஷன் யோஜனா ஆகிய இரு திட்டங்களும் மூத்த குடிமக்களுக்கு மிக பாதுகாப்பான மற்றும் சிறந்த வருமானத்தை அளிக்கக்கூடிய அரசாங்க திட்டங்களாக கருதப்படுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









