Best Mutual Funds: கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 30 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டிய 50க்கும் மேற்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்த விபரங்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் சந்தையின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் சமீப காலங்களாக மிகவும் அதிகரித்துள்ளது. நீண்ட கால முதலீட்டில் வருமானத்தை அள்ளித் தருவதே இதற்கு காரணம். கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 30 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை ஈட்டிய 50 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்த விபரங்களை இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம். Value Research மற்றும் AMFI தரவுகளின் அடிப்படையில் டாப் 50 மியூச்சுவல் ஃபண்டுகள் விபரம் வழங்கப்பட்டுள்ளன.
வருமானத்தை அள்ளித் தரும் ஸ்மால்கேப் ஃபண்டுகள்
ஸ்மால்கேப் ஃபண்டுகள் 5 ஆண்டுகளில் அதிக வருமானத்தை வழங்குவதில் அதிக எண்ணிக்கையைக் கொண்டுள்ளன. நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட் சுமார் 39 சதவீத வருடாந்திர வருமானத்துடன் முன்னணியில் உள்ளது. முதல் 20 பரஸ்பர நிதியங்கள் எவை என பார்க்கும் போது, இதில் 11 திட்டங்கள் ஸ்மால்கேப் ஃபண்ட் வகையைச் சேர்ந்தவை. அதேசமயம் முதல் 40 மியூச்சுவல் பண்டுகளில், 16 பரஸ்பர நிதியங்கள் ஸ்மால்கேப் வகையைச் சேர்ந்தவை.
மிட்கேப் ஃப்ண்டுகளும் சிறந்த வருமானத்தை கொடுத்துள்ளன
கடந்த 5 ஆண்டுகளில் அதிக வருமானத்தை அளிக்கும் மிட்கேப் நிதிகளைப் பற்றிப் பேசுகையில், மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் நிதி 37.98 சதவீத வருடாந்திர வருமானத்துடன் முதலிடத்தில் உள்ளது. எடெல்வைஸ் மிட்கேப் நிதி 35.12 சதவீத வருடாந்திர வருமானத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. HDFC மிட்கேப் வாய்ப்புகள் நிதி 33.23 சதவீத வருடாந்திர வருமானத்துடன் முதல் திட்டத்திலும், இன்வெஸ்கோ இந்தியா மிட்கேப் நிதி 32 சதவீத வருடாந்திர வருமானத்துடன் முதல் திட்டத்திலும் இடம்பிடித்துள்ளது.
உள்கட்டமைப்பு துறை பரஸ்பர நிதியங்களும் சிறப்பாக செயல்பட்டுள்ளன
உள்கட்டமைப்பு துறையை சார்ந்த 38.11 சதவீத வருடாந்திர வருமானத்துடன் ICICI Pru Infrastructure Fund, 36 சதவீத வருடாந்திர வருமானத்துடன் HDFC Infrastructure Fund ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளன. இவை தவிர, LIC MF உள்கட்டமைப்பு நிதி ஆண்டுதோறும் 34.37% அதிக வருமானத்தை அளித்துள்ளது. கனரா ரோபெகோ உள்கட்டமைப்பு நிதி ஆண்டுதோறும் 34.14% அதிக வருமானத்தை அளித்துள்ளது மற்றும் HSBC உள்கட்டமைப்பு நிதி ஆண்டுதோறும் 32.17% அதிக வருமானத்தை அளித்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் வருமானத்தை அள்ளித் தந்த சிறந்த 50 பரஸ்பர நிதிகள்
நிப்பான் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட்: 38.52%
ஐசிஐசிஐ ப்ரூ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட்: 38.11%
மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்ட்: 37.98%
பந்தன் ஸ்மால்கேப் ஃபண்ட்: 37.92%
HDFC இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட்: 36.07%
பாங்க் ஆஃப் இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட்: 36.06%
எடெல்வைஸ் ஸ்மால்கேப் ஃபண்ட்: 35.97%
எடெல்வைஸ் ஸ்மால்கேப் ஃபண்ட்: 35.64%
டாடா ஸ்மால்கேப் ஃபண்ட்: 35.39%
இன்வெஸ்கோ இந்தியா ஸ்மால்கேப் ஃபண்ட்: 35.34%
கனரா ரோபோகோ ஸ்மால்கேப் ஃபண்ட்: 35.12%
எடெல்வைஸ் மிட்கேப் ஃபண்ட்: 35.12%
HDFC ஸ்மால்கேப் ஃபண்ட்: 35.01%
LIC MF இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட்: 34.37%
நிப்பான் இந்தியா பவர் & இன்ஃப்ரா : 34.28%
கோட்டக் ஸ்மால்கேப் ஃபண்ட் : 34.18%
கனரா ரோபெகோ இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட் : 34.14%
ஐசிஐசிஐ புரு ஸ்மால்கேப் ஃபண்ட் : 34.11%
நிப்பான் இந்தியா க்ரோத் ஃபண்ட் : 33.69%
ஐசிஐசிஐ புரு இந்தியா ஆப்பர்ச்யூனிடீஸ் ஃபண்ட் : 33.68%
ABSL PSU : 33.60%
சுந்தரம் ஸ்மால்கேப் நிதி : 33.41%
டிஎஸ்பி ஸ்மால்கேப் நிதி : 33.29%
நிப்பான் இந்தியா மல்டிகேப் நிதி : 33.27
HDFC மிட்கேப் ஆப்பர்ச்யூனிடீஸ் ஃபண்ட் : 33.23%
ஐசிஐசிஐ புரு டிவிடென்ட் யீல்ட் ஃபண்ட் : 33.14%
மோதிலால் ஓஸ்வால் நிஃப்டி ஸ்மால்கேப் 250 குறியீடு: 33.05%
எல்ஐசிஐ எம்எஃப் ஸ்மால்கேப் ஃபண்ட் : 32.98%
HSBC இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட்: 32.17%
இன்வெஸ்கோ இந்தியா மிட்கேப் ஃபண்ட்: 32.05%
கோடக் எமர்ஜிங்க் ஈக்விடீஸ்: 32.02%
ஆக்சிஸ் ஸ்மால்கேப் ஃபண்ட்: 31.94%
SBI PSU: 31.72%
ஐசிஐசிஐ புரு மிட்கேப் ஃபண்ட்: 31.66%
டாடா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட்: 31.64%
ஐசிஐசிஐ புரு டெக்னாலஜிஸ் ஃபண்ட்: 31.59%
யூனியன் ஸ்மால்கேப் ஃபண்ட்: 31.52%
ABSL இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட்: 31.49%
மோதிலால் ஓஸ்வால் லார்ஜ் & மிட்கேப் ஃபண்ட்: 31.49%
ஐசிஐசிஐ புரு மேன்யுஃபேக்சரிங் ஃபண்ட்: 31.34%
மோதிலால் ஓஸ்வால் நிஃப்டி மிட்கேப் 150 : 31.10%
யூனியன் மிட்கேப் ஃபண்ட்: 31.07%
HDFC ஃபோகஸ்டு 30 : 31.05%
மிரே அசெட் மிட்கேப் : 30.94%
இன்வெஸ்கோ இந்தியா PSU ஃபண்ட் : 30.84%
PGIM இந்தியா மிட்கேப் ஃபண்ட் : 30.84%
HDFC ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் : 30.73%
SBI மேக்னம் மிட்கேப் ஃபண்ட் : 30.21%
SBI இன்ஃப்ராஸ்ட்ரக்சர் ஃபண்ட் : 30.04%
ஐசிஐசிஐ புரு லார்ஜ் & மிட்கேப் ஃபண்ட் : 30.00%
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ