SCSS Latest News: மூத்த குடிமக்களுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் பிரபலமான நலத்திட்டமாக உள்ள தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் பற்றி இந்த பதிவில் காணலாம்.

Senior Citizens Savings Scheme: மனித வாழ்விற்கு இன்றியமையாத விஷயங்களில் பணம் மிக முக்கியமாகும். குறிப்பாக, வயோதிகத்தில் இதற்கான தேவை அதிகரிக்கிறது. ஏனெனில், வயதாகும் போது நம்மால் இளமையில் இருப்பது போல சுறுசுறுப்புடன் பணம் ஈட்ட முடியாது.
பணி ஓய்வுக்கு பிறகு மாதா மாதம் ஒரு நிலையான வருமானம் கிடைத்தால், வாழ்க்கை மிகவும் நிம்மதியாகத் இருக்கும். இதுபோன்ற சமயங்களில், மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பான முதலீடு மற்றும் உத்தரவாதமான வருமானம் ஆகியவை முக்கியமானவையாக மாறுகின்றன. மூத்த குடிமக்களுக்காக பல வித நலத்திட்டங்கள் நடத்தபடுகின்றன. இவற்றில் தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் மிகவும் பாதுகாப்பான மற்றும் பிரபலமான நலத்திட்டமாக பார்க்கப்படுகின்றது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் நம்பகமான அரசாங்கத் திட்டங்களில் ஒன்றாகும். இது நல்ல வட்டி விகிதத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், வரி சேமிப்பு மற்றும் வழக்கமான வருமானத்தையும் உறுதி செய்கிறது. ஓய்வுக்குப் பிறகு எந்த ஆபத்தும் இல்லாமல் தங்கள் சேமிப்பில் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானத்தை விரும்பும் மூத்த குடிமக்களுக்காக இந்தத் திட்டம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- SCSS என்பது ஒரு பாதுகாப்பான சேமிப்புத் திட்டமாகும்.
- இதில் தற்போது 8.2% வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது.
- இந்த வட்டி பல வங்கிகளின் நிலையான வைப்புத்தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
- இதில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 ஆகும்.
- அதிகபட்சமாக இந்த திட்டத்தில் ரூ.30 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
- 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட எவரும் இந்தத் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்யலாம்.
- 55 முதல் 60 வயதுக்குள் ஒரு அரசு ஊழியர் தன்னார்வ ஓய்வு பெற்றிருந்தால், அவரும் இதற்கு தகுதியுடையவர்.
- ஓய்வு பெற்ற பாதுகாப்புப் பணியாளர்கள் 50 முதல் 60 வயது வரை முதலீடு செய்யலாம்.
- கணவன் மனைவி இணைந்து இதில் கூட்டுக்கணக்கை திறக்கலாம்.
ரூ.30 லட்சம் முதலீடு செய்தால்....
- ஒருவர் இந்தத் திட்டத்தில் மொத்தமாக ரூ.30 லட்சம் முதலீடு செய்தால், அவருக்கு ஒவ்வொரு ஆண்டும் வட்டியில் மட்டும் சுமார் ரூ.2.46 லட்சம் கிடைக்கும்.
- இந்தப் பணம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கணக்கில் வரும்.
- அதாவது, மாதத்திற்கு சுமார் ரூ.20,500 வழக்கமான வருமானத்திற்கு உத்தரவாதம் கிடைக்கும்.
ரூ.20 லட்சம் முதலீடு செய்தால்....
- முதலீட்டாலர் ரூ.20 லட்சம் முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளில் வட்டி உட்பட மொத்த வருமானம் சுமார் ரூ.28.2 லட்சமாக இருக்கும்.
- இந்தக் காலகட்டத்தில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சுமார் ரூ.41,000, அதாவது மாதம் ரூ.13,666 வருமானம் கிடைக்கும்.
- SCSS மூலம், பிரிவு 80C இன் கீழ் ஆண்டுதோறும் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம்.
SCSS திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
- இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்கானது.
- இதை 3 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்.
- ஒரு வருடத்திற்கு முன் கணக்கை மூடினால், வட்டி எதுவும் வழங்கப்படாது.
- 2 முதல் 5 ஆண்டுகளுக்குள் கணக்கை மூடினால், 1% வட்டி கழிக்கப்படும்.
SCSS திட்டம்: சுருக்கமாக....
- இந்த திட்டத்தில் அரசாங்க உத்தரவாதத்துடன் வயதான காலத்தில் நிதி பாதுகாப்பு கிடைக்கிறது.
- இதன் வட்டி விகிதம் பல வங்கிகளை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
- இதில் வரி சேமிப்பு சாத்தியம்.
- நிலையான வருமானத்திற்கான நம்பகமான திட்டமாக இது பார்க்கப்படுகின்றது.
- பணி ஓய்வுக்கு பிறகு நிலையான வருமானத்தை பெற விரும்பும் மூத்த குடிமக்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.
- SCSS ஓய்வூதியதாரர்களுக்கான நம்பகமான மற்றும் லாபகரமான திட்டமாக பார்க்கப்படுகின்றது.
(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் முன் உங்கள் நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற அறிவுறுத்தப்படுகின்றது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ