)
Senior Citizens Savings Scheme: பணி ஓய்வு என்பது உடலுக்கு ஓய்வை கொடுத்தாலும், மனதில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்திவிடுகிறது. பணி ஓய்வுக்கு பிறகு மாத சம்பளம் திடீரென நின்றுவிடுகிறது, ஆனால் வீட்டுச் செலவுகள், மருந்துகள் மற்றும் அன்றாடத் தேவைகள் என இந்த அத்தியவாசிய செலவுகள் நிற்பதில்லை. ஆகையால், பணி ஓய்வு காலத்தில் நிதி ஆதரவை அளிக்க இள வயதிலேயே அதற்காக திட்டமிட்டு சேமிப்பது நல்லது.
நமது நாட்டில் மூத்த குடிமக்களுக்காக பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றில் அஞ்சல் அலுவலகம் நடத்தும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் மிகவும் பிரபலமான ஒரு திட்டமாக உள்ளது. பணி ஓய்வுக்குப் பிறகு மாதா மாதம் நிலையான வருமானத்தை அளிக்கும் இந்த திட்டம் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
அரசாங்க ஆதரவுடன் வரும் இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்தால், ஓய்வு பெற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் ₹20,500 வருமானம் பெறலாம். இது எந்த வித ஆபத்தும் இல்லாத திட்டமென்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தத் திட்டத்தில், முதலீட்டாளர் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக ₹30 லட்சம் முதலீடு செய்யலாம்.
- தற்போது, இந்தத் திட்டம் 8.2% என்ற விகிதத்தில் வட்டி வழங்குகிறது.
- அதாவது, ஒரு முதலீட்டாளர் ₹30 லட்சத்தை முதலீடு செய்தால், அவருக்கு ஒரு வருடத்தில் ₹2,46,000 வட்டி கிடைக்கும்.
- வட்டி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தப்படுகிறது.
- அதாவது, ஒவ்வொரு காலாண்டிலும் ₹61,500 நேரடியாக முதலீட்டாளரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.
- சராசரியாக, இது மாதத்திற்கு ₹20,500 ஆகும்.
இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய நன்மை இது ஒரு பாதுகாப்பு திட்டம் என்பதுதான். இது மத்திய அரசின் சேமிப்புத் திட்டம். ஆகையால், இதில் உங்கள் பணத்திற்கு எந்த ஆபத்தும் இருக்காது. ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்திற்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டியை எடுப்பதற்குப் பதிலாக அதை குவிக்கும் வசதியையும் முதலீட்டாளர்கள் தேர்வு செய்யலாம். இதன் மூலம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, உங்கள் மொத்த முதலீடு சுமார் ₹42 லட்சமாக வளரும்.
60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். ஓய்வு பெற்ற அரசு அல்லது தனியார் துறை ஊழியர்கள் விதிகளைப் பூர்த்தி செய்தால் முதலீடு செய்யலாம். கணவன்-மனைவி சேர்ந்து இதில் கூட்டுக் கணக்கையும் திறக்கலாம்.
- இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கைத் திறக்க, முதலில் உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்திற்குச் செல்லவும்.
- விண்ணப்பப் படிவத்தை நிரப்பி, உங்கள் ஆதார் அட்டை, பான் அட்டை, முகவரிச் சான்று மற்றும் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை சமர்ப்பிக்கவும்.
- சரிபார்ப்புக்குப் பிறகு, உங்கள் கணக்கு திறக்கப்படும்.
- பின்னர் வட்டி உங்கள் வங்கிக் கணக்கில் தொடர்ந்து வரவு வைக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ