FD முதலீடு: மூத்த குடிமக்களுக்கு 9.10% வட்டி... வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் சிறுநிதி வங்கிகள்

RBI ரெப்போ விகிதக் குறைப்புகளுக்குப் பிறகு, அனைத்து பெரிய மற்றும் சிறிய வங்கிகளும் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகை (Fixed Deposits) மீதான விகிதங்களைக் குறைத்துள்ளன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 26, 2025, 04:39 PM IST
  • ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மொத்தம் 0.50% (50 அடிப்படை புள்ளிகள்) குறைத்துள்ளது.
  • சிறுநிதி வங்கிகளின் நிலையான வைப்புத்தொகை (FDs) மீதான அதிக வட்டி விகிதங்கள் விபரங்கள்.
  • ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் விகிதமாகும்.
FD முதலீடு: மூத்த குடிமக்களுக்கு 9.10% வட்டி... வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் சிறுநிதி வங்கிகள்

2025 ஆம் ஆண்டில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த இரண்டு கொள்கைக் கூட்டங்களில் அதன் ரெப்போ விகிதத்தை மொத்தம் 0.50% (50 அடிப்படை புள்ளிகள்) குறைத்துள்ளது. ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் விகிதமாகும். இதனை அடுத்து, அனைத்து பெரிய மற்றும் சிறிய வங்கிகளும் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகை (Fixed Deposits) மீதான விகிதங்களைக் குறைத்துள்ளன.

Add Zee News as a Preferred Source

RBI ரெப்போ விகிதக் குறைப்புகளுக்குப் பிறகு ஒரு சாதாரண நடைமுறையாக, வங்கிகள் மலிவான வட்டி விகிதத்தில் பணம் பெறும்போது, ​தாங்கள் வழங்கும் வட்டி விகிதங்களையும் குறைக்கின்றன. கடன் வாங்குபவர்கள் இதன் மூலம் பயனடைந்தனர். ஆனால் அதே நேரத்தில் நிரந்திர வைப்புத்தொகை அல்லது சேமிப்புக் கணக்குகளில் தங்கள் பணத்தை முதலீடு செய்து வைத்திருப்பவர்கள், வங்கிகளின் வட்டி விகித குறைப்பால் வருமானத்தை இழக்கிறார்கள்.

பெரும்பாலான பொது மற்றும் தனியார் வங்கிகள் தங்கள் FD வட்டி விகிதங்களை வெகுவாகக் குறைத்திருந்தாலும், சில சிறு நிதி வங்கிகள் இன்னும் மூத்த குடிமக்களுக்கு 9.10% வரை சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன. மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத் திட்டங்களுக்கு இன்னும் 9.10% வரை வட்டி விகிதங்களை வழங்கும் சில சிறு நிதி வங்கிகளின் விபரங்களை கீழே காணலாம்

சிறுநிதி வங்கிகளின் நிலையான வைப்புத்தொகை (FDs) மீதான அதிக வட்டி விகிதங்கள் விபரங்கள்

வங்கிகள்

பொது மக்களுக்கான

வட்டி விகிதங்கள்

மூத்த குடிமக்களுக்கான

வட்டி விகிதங்கள்

AU சிறு நிதி வங்கி  7.75%  8.25%
ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி  8.05% 8.55%
ESAF சிறு நிதி வங்கி  7.75% 8.25%
ஜனா சிறு நிதி வங்கி  8.25% 8.75%
சூர்யோதய் சிறு நிதி வங்கி  8.60% 9.10%
உத்கர்ஷ் சிறு நிதி வங்கி  8.50% 9.10%
உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி  8.05% 8.55%

தகவல் ஆதாரம்: பேங்க்பஜார்

மேலே கொடுக்கப்பட்டுள்ள தரவுகள் ஏப்ரல் 24, 2025 அன்று அந்தந்த வங்கியின் வலைத்தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

சிறு நிதி வங்கிகள் பாதுகாப்பானதா?

பல முதலீட்டாளர்களின் மனதில் சிறு நிதி வங்கிகள் பாதுகாப்பானது தானா என்ற கேள்வி எழுகிறது. ஆம், சிறு நிதி வங்கிகளும் பாதுகாப்பானவை. நிதி சவால்கள் மற்றும் ஒழுங்குமுறை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவதால், இந்த வங்கிகளில் பணத்தை முதலீடு செய்வது பாதுகாப்பு தானா கேள்வி தொடர்ந்து எழுகிறது. மேலும், சிறிய நிதி வங்கிகள் பொதுவாக புதிய நிறுவனங்களாகும், பெரிய வங்கிகளுடன் ஒப்பிடுகையில் நிதியும் குறைவாகவே இருப்பதால் சிறு நிதி வங்கிகள் என அழைக்கப்படுகின்றன.

இருப்பினும், பெரிய அரசு அல்லது தனியார் வங்கிகளைப் போலவே, இந்த வங்கிகளும் ரிசர்வ் வங்கியால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ரொக்க இருப்பு விகிதம் (CRR), சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதம் (SLR) போன்ற அனைத்து தேவையான நிபந்தனைகளும் அவற்றுக்கும் பொருந்தும். இது தவிர, இந்த வங்கிகளில் உங்கள் வைப்புத்தொகை வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்தின் (DICGC) கீழ் ரூ.5 லட்சம் வரை உத்தரவாதத்துடன் வருகிறது. இதன் பொருள் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டாலும், ரூ.5 லட்சம் வரையிலான தொகை பாதுகாப்பாக இருக்கும்.

நீங்கள் ஒரு மூத்த குடிமகனாக இருந்து, பாதுகாப்பான மற்றும் நல்ல வருமானத்தை விரும்பினால், சிறு நிதி வங்கிகளின் நிலையான வைப்புத்தொகைகள் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். சிறுநிதி வங்கிகளை தேர்ந்தெடுக்கும்போது வங்கியின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கவும்.

மேலும் படிக்க | SIP Mutual fund: மாதம் ரூ.5,000 போதும்... ஓய்வு பெறும் போது கையில் ரூ.1 கோடி இருக்கும்

மேலும் படிக்க | Retirement Planning: ஆயிரங்களை கோடிகளாக்க... உங்களுக்கான முக்கிய முதலீட்டு டிப்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News