கோடிகளில் நிதியை உருவாக்க மிகப்பெரிய முதலீடுகள் தேவையில்லை. சிறிய அளவிலான முதலீடுகள் மூலம் கோடீஸ்வர கனவை எளிதாக நிறைவேற்றலாம். இதற்கு கை கொடுப்பது மியூச்சுவல் ஃபண்ட் என்னும் பரஸ்பர நிதியம். இதில் கிடைக்கும் கூட்டு வட்டி வருமான பலன் காரணமாக, மூலதன ஆதாயம் பெருகி, ஆயிரங்கள் எளிதில் கோடிகளாக ஆகின்றன.
டாப்-அப் SIP என்னும் பணம் காய்க்கும் மரம்
இன்றைய காலகட்டத்தில் மாதம் ரூ.2500 சேமிப்பது என்பது பெரிய விஷயம் அல்ல. இந்த சிறிய தொகை கூட உங்களை கோடீஸ்வரராக மாற்றும். உங்கள் பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை, மாதம் ரூ.2500 என்ற அளவில் SIP முறையில் முதலீடு செய்ய துவங்கினால், கோடீஸ்வர கனவை எளிதில் நிறைவேற்றலாம். SIP முறையில் டாப்-அப் SIP உத்தியை கடைபிடிப்பது பலன் தரும்.
டாப்-அப் SIP அல்லது ஸ்டெப்-அப் SIP என்றால் என்ன?
டாப் அல்லது ஸ்டெப் SIP என்பது ஒரு ஸ்மார்ட் ஆன முதலீட்டு திட்டம் ஆகும். நம்மில் அனைவருக்கும், வருமானம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் மாதம் ரூ. 2500 என்று தொடங்கிய முதலீட்டை ஒவ்வொரு ஆண்டும் 10% என்ற அளவில் அதிகரித்து வந்தால், கோடீஸ்வரர் கனவை விரைவில் நிறைவேற்றலாம். அதாவது முதல் ஆண்டில் ரூ.2500, அடுத்த ஆண்டில் ரூ.2750, அதற்கு அடுத்த ஆண்டில் ரூ.3025 என்ற அளவில் மாதாந்திர SIP தொடர வேண்டும்.
சுமார் 12% வருடாந்திர வருமானம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்
ஒவ்வொரு மாதமும் ரூ.2500 என்ற அளவில் SIP முதலீட்டை தொடங்கிய நிலையில், அதை ஒவ்வொரு ஆண்டும் 10% அதிகரிக்கலாம். இவ்வாறு 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்வதன் மூலம், சுமார் 12% வருடாந்திர வருமானத்தின் உதவியுடன் ரூ.1 கோடி நிதியை எளிதாக உருவாக்கலாம். ஸ்டெப்-அப் SIP ஐ அடிப்படையாகக் கொண்ட கணக்கீடு, சராசரியாக 12% ஆண்டு வருமான அளவை கருத்தில் கொண்டு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில், பரஸ்பர நிதிய முதலீடுகளில், சராசரியாக குறைந்தபட்சம் 12% மூலதன ஆதாயம் இருப்பதை தரவுகள் காட்டுகின்றன.
SIP மூலம் உங்களை கோடீஸ்வரரர் ஆக்குவதற்கான எளிய கணக்கீடு
டாப் அப் அல்லது ஸ்டெப் அப் எஸ் ஐ பி SIP மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.2500 என்ற அளவில் தொடங்கி, பின்னர் நீங்கள் அதை ஒவ்வொரு ஆண்டும் 10% என்ற அளவில் அதிகரித்தால் 25 ஆண்டுகளில் நீங்கள் மொத்தம் ரூ.29.50 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள். இதில் கிடைக்கும் மொத்த மதிப்பிடப்பட்ட மூலதன ஆதாயம் ரூ.77.38 லட்சம் என்ற அளவில் இருக்கும். 25 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த நிதி மதிப்பு ரூ. 1.07 கோடியாக இருக்கும்.
ஸ்டெப்-அப் SIP இல்லாமல் சாதாரண SIP முதலீட்டில் கிடைக்கும் கார்பஸ்
ஒவ்வொரு ஆண்டும் SIP முதலீட்டை 10% அதிகரிக்காமல், ரூ.2500 நிலையான தொகையை மட்டும் தொடர்ந்து முதலீடு செய்தால், 25 ஆண்டுகளில் ரூ.46.97 லட்சம் நிதி மட்டுமே உங்களிடம் இருக்கும். ஆனால் ஸ்டெப்-அப் SIP உத்தியை கடைபிடிப்பதன் மூலம், நிதி மதிப்பு ரூ.1.07 கோடியை எட்டலாம், அதாவது குறைந்தபட்சம் ரூ.60 லட்சம் கூடுதல் நன்மையைப் பெறுவீர்கள்.
மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம்: வயதுக்கு ஏற்ப 20%-100% பென்ஷன் உயர்வு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









