Mutual Fund: ரூ.10,000 முதலீட்டை ரூ.2 கோடியாக பெருக்க உதவும் டாப்-அப் SIP மந்திரம்

Top-Up SIP: நீண்ட கால SIP முதலீட்டில், முதலீட்டாளர்கள் கூட்டு வட்டி வருமானத்தின் பலனைப் பெற்று, ஆயிரங்களை கோடிகளாக்குகின்றனர். இதில் டாப்-அப் எஸ்ஐபி உத்தி மூலம், எளிதில் பணத்தை பெருக்கலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 12, 2025, 12:44 PM IST
  • பணத்தை பனமடங்காக்கும் டாப் அப் எஸ்ஐபி முதலீட்டு உத்தி
  • TOP-UP SIP சூத்திரம் மிகப்பெரிய நிதி பலன்களை அளிக்கும்.
  • கூட்டு வட்டி பலனுடன் கிடைக்கும் வருமானம் ரூ. 1.30 கோடி
Mutual Fund: ரூ.10,000 முதலீட்டை ரூ.2 கோடியாக பெருக்க உதவும் டாப்-அப் SIP மந்திரம்

Top-Up SIP: மியூச்சுவல் ஃபண்டுகளில் SIP முதலீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2025 பிப்ரவரி மாதத்தில் எஸ்ஐபி முதலீடு ரூ.26,000 கோடியை எட்டியது. மியூச்சுவல் ஃபண்டுகளில் சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்ஐபி) முதலீடு சாமான்யர்களும் எளிய வகையில் முதலீடு செய்யும் வகையில் நீண்ட கால முதலீட்டிற்கான சிறந்த உத்தியாக உள்ளதே இதற்கு காரணம். SIP முதலீட்டினை உங்களது வசதிக்கேற்ப, மாதம்தோறும், வாரம் தொறும் அல்லது தினசரி என்ற அடிப்படையில் செய்யலாம். 

Add Zee News as a Preferred Source

நீண்ட கால SIP முதலீட்டில், முதலீட்டாளர்கள் கூட்டு வட்டி வருமானத்தின் பலனைப் பெற்று, ஆயிரங்களை கோடிகளாக்குகின்றனர். இதில் டாப்-அப் எஸ்ஐபி என்னும் உத்தி மூலம், எளிதில் பணத்தை பெருக்கலாம். குறிப்பிட்ட அளவு தொகையில் SIP தொடங்கிய நிலையில், ஒவ்வொரு ஆண்டும் உங்கள் வருமானம் உயரும் போது எஸ்ஐபி தொகையை படிபடியாக அதிகரிப்பது தான் டாப்-அப் எஸ்ஐபி. உங்கள் பணத்தை மிக விரைவாக பெருக்கி கோடிகளில் கார்பஸை உருவாக்க நினைத்தால், இந்த உத்தி பெரிதும் கை கொடுக்கும்.

TOP-UP SIP முதலீட்டு உத்தி

உதாரணத்திற்கு ரூ.10,000 மாதாந்திர SIP தேர்ந்தெடுத்த நிலையில் TOP-UP SIP எவாறு பணம் பெருக உதவுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். உங்கள் சம்பளம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில், அந்த விகிதத்தில் ஒவ்வொரு வருடமும் முதலீட்டை சிறிதளவு அதிகரித்து SIP முதலீட்டில் டாப்-அப் செய்யலாம். இதனை எளிய கணக்கீடுகள் மூலம் இதைப் புரிந்துகொள்வோம்.

SIP கணக்கீடு

வழக்கமான SIP முதலீடு

வழக்கமான SIP முதலீடாக, ரூ. 10,000 என்ற தொகையை, 20 ஆண்டுகளுக்கு தொடர்ந்தால், 12% வருமானத்தில், உங்களிடம் ரூ. 99.91 லட்சம் (ரூ.1 கோடி) இருக்கும். இதில் உங்கள் முதலீட்டு தொகை ரூ. 24 லட்சம் என்ற அளவிலும், கூட்டு வட்டி பலனுடன் கிடைக்கும் வருமானம் ரூ. 75.91 லட்சம் என்ற அளவிலும் இருக்கும்.

டாப்-அப் எஸ்ஐபி முதலீடு

டாப்-அப் எஸ்ஐபி முதலீடாக, ரூ10,000 என்ற தொலையில் தொடங்கி, ஆண்டு தோறூம் முதலீட்டை 10% (10% வருடாந்திர டாப்-அப்) என்ற அளவில் அதிகரித்து, 20 ஆண்டுகளுக்கு தொடர்ந்தால், 12% வருமானத்தில், உங்களிடம் ரூ1.99 கோடி (ரூ.2 கோடி) இருக்கும். இதில் உங்கள் முதலீட்டு தொகை ரூ.68.73 லட்சம் என்ற அளவிலும், கூட்டு வட்டி பலனுடன் கிடைக்கும் வருமானம் ரூ.1.30 கோடி என்ற அளவிலும் இருக்கும்.

வழக்கமான SIP முதலீட்டுடன் ஒப்பிடுகையில், TOP-UP SIP சூத்திரம் உங்களுக்கு மிகப்பெரிய நிதி பலன்களை அளிக்கும் என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். உங்கள் சம்பளம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதால், அந்த விகிதத்தில் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட தொகையை SIP முதலீட்டில் டாப்-அப் செய்வதன் மூலம் உங்கள் முதலீட்டு இலக்கை விரைவாகவும் எளிதாகவும் அடையலாம்.

பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

 

மேலும் படிக்க | SIP Mutual Fund: கோடீஸ்வர கனவை நனவாக்க... மாதம் ரூ.3000 முதலீடு போதும்... எளிய கணக்கீடு இதோ

மேலும் படிக்க | SWP: ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்க உதவும் பரஸ்பர நிதியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News