மாதந்தோறும் ஒரு சிறிய தொகையை மியூச்சுவல் ஃபண்ட் SIP-யில் முதலீடு செய்வதன் மூலம், கோடிகளில் நிதியைச் சேகரிக்கலாம். நீங்கள் நீண்ட காலம் SIP மூலம் பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்தால், நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம். மியூச்சுவல் ஃபண்ட் SIP மூலம் ரூ.1000 முதலீட்டில் கூட ரூ.1 கோடி வரை நிதியை சேர்க்க முடியும். இதற்கு, முதலீட்டாளர் ஆலோசனைப்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பரஸ்பர நிதியங்களில் பணத்தை முதலீடு செய்வது மிகவும் முக்கியம்.
மியூச்சுவல் ஃபண்ட் SIP
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு SIP மூலம் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்களால் முடிந்த சிறிய தொகையை முதலீடு செய்யலாம். SIP முதலீட்டாளர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில், மாதாந்திர, காலாண்டு அடிப்படையில் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்யலாம். மாதம் வெறும் 500 ரூபாயில் யார் வேண்டுமானாலும் SIP முதலீட்டைத் தொடங்கலாம். SIP மூலம் 1 கோடி வரை நிதியை சேர்க்க அதிகமல்ல மாதம் ரூ.1000 என்ற அளவில் தொடங்கினால் போதும்.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஆயிரங்களை கோடிகளாக்கலாம்
நீங்கள் 25 வயதில் மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீட்டில், ரூ.1000 என்ற அளவில் மியூச்சுவல் ஃபண்ட் SIP முதலீட்டை தொடங்கிய நிலையில், நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது, உங்கள் பங்களிப்பை 10% அதிகரித்தால், ஆயிரங்களை கோடிகளாக்கலாம். இதன் மூலம் இரண்டாவது ஆண்டில், உங்கள் மாதாந்திர SIP ரூ.1,100 ஆகவும், மூன்றாம் ஆண்டு ரூ.1,210 ஆகவும் இருக்கும். இந்த வகையில் முதலீட்டில் படிப்படியான அதிகரிப்பு காலப்போக்கில் அதிகரித்து கூட்டு வட்டி வருமானத்தின் பலனால், பணம் பன்மடங்காகிறது.
ரூ.1 கோடியை அடைய எவ்வளவு காலம் ஆகும்?
ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் நிச்சயம் இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
மாதாந்திர SIP: ரூ.1,000
ஆண்டு அதிகரிப்பு: 10%
எதிர்பார்க்கப்படும் வருமானம்: ஆண்டுக்கு 12%
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனுமானங்களுடன் ஒரு ஸ்டெப்-அப் SIP கால்குலேட்டரைப் பயன்படுத்தி, சுமார் 32 ஆண்டுகளில் நீங்கள் ரூ.1 கோடியை அடையலாம். 31வது ஆண்டின் இறுதியில், உங்கள் மொத்த முதலீடு சுமார் ரூ.24.12 லட்சமாக இருக்கும். ஆனால், அதே நேரத்தில் உருவாக்கப்படும் வருமானம் கிட்டத்தட்ட ரூ.80.98 லட்சமாக இருக்கும், இது உங்கள் ஒட்டுமொத்த நிதியை சுமார் ரூ.1.05 கோடியாகக் உயர்த்தும்.
பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









