ஓய்வு காலத்தில் யாரையும் சாராமல் வாழக்கை நடத்த வேண்டும் என்றால், வழக்கமான வருமானத்தை பெற உதவும் வகையில், ஓய்வூதிய நிதியை சேர்க்க வேண்டும். ஓய்வு காலத்திற்காக, கோடிகளில் நிதியை சேர்க்க விரும்புபவர்களுக்கு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சிறந்த தேர்வாக இருக்கும். எஸ்ஐபி மூலம் மாதந்தோறும் சிறிதளவு முதலீடு செய்வதன் மூலம், ஆயிரத்தை எளிதாக கோடிகளாக ஆக்கி விடலாம். தற்போது, பங்குச்சந்தையில் சரிவு காணப்பட்டாலும், நீண்ட தொடர் முதலீடுகள் மூலம் நிச்சயம் வருமானம் சிறப்பாகவே இருக்கும்.
பரஸ்பர நிதியத்தில் செய்யப்படும் நீண்ட கால தொடர் முதலீட்டின் மூலம் கூட்டு வட்டி வருமானத்தின் பலன் கிடைப்பதாலும், வங்கிகளுடன் ஒப்பிடுகையில் அதிக வருமானம் கிடைப்பதாலும், பணத்தை பனமடங்காக்குவது எளிதாகிறது. மேலும் பங்குச் சந்தை சரிவின் போது முதலீடு செய்வது, சலுகை விலையில் பங்குகளை வாங்குவது போன்றது. இதனால், சந்தை மீளும் போது வருமானம் பெருகும்
SIP மூலம் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு வேகமாக அதிகரித்து வருகிறது. 2025 பிப்ரவரி மாதத்தில், SIP முதலீடு ரூ. 25,999 கோடியை எட்டியுள்ளது. சிறிய முதலீடுகளிலிருந்து பெரிய லாபம் ஈட்டக்கூடிய ஒரே முதலீடு SIP மட்டுமே. SIP திட்டம் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கும் ஒரு ரகசிய சூத்திரம் உள்ளது. இது உங்களுக்கு கோடிக்கணக்கான பணத்தைத் தரும் தந்திரம். அதுவும் குறைந்த கால அளவில் உங்கள் முதலீட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் SIP சூத்திரத்தை இன்று நாம் அறிந்து கொள்ளலாம்.
டாப்-அப் SIP என்னும் பணத்தை பன்மடங்காக்கும் சூத்திரம்
டாப்-அப் SIP என்பது உங்கள் செல்வத்தை இரட்டிப்பாக்கப் பயன்படுத்தக்கூடிய ஒரு சூத்திரமாகும். இதில் என்ன செய்ய வேண்டும் என்றால், ஒவ்வொரு வருடமும் உங்கள் SIP முதலிட்டை 10% அதிகரிக்கவும். உங்கள் சம்பளம் அதிகரிக்கும் போது, அதற்கேற்ப உங்கள் முதலீட்டை அதிகரிப்பதன் மூலம், கோடிகளில் காப்ர்பஸை எளிதாக உருவாக்கலாம்.
SIP கணக்கீடு: வழக்கமான SIP முதலீடு மூலம் சேர்க்கப்படும் கார்ப்ஸ்
மாதாந்திர SIP: ரூ.10,000
முதலீட்டுக் காலம்: 20 ஆண்டுகள்
கணிக்கப்பட்ட வருமானம்: 12%
மொத்த முதலீடு: ரூ.24 லட்சம்
20 ஆண்டுகளுக்குப் பிறகு SIP மதிப்பு: ரூ.99.91 லட்சம்
கணிக்கப்பட்ட லாபம்: ரூ.75.91 லட்சம்
SIP கணக்கீடு: டாப்-அப் SIP முதலீடு மூலம் சேர்க்கப்படும் கார்ப்ஸ்
மாதாந்திர SIP (தொடக்க ஆண்டில்): ரூ.10,000
முதலீட்டுக் காலம்: 20 ஆண்டுகள்
கணிக்கப்பட்ட வருமானம்: 12%
ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் SIP முதலீடு: 10%
மொத்த முதலீடு: ரூ.68.73 லட்சம்
20 ஆண்டுகளுக்குப் பிறகு SIP மதிப்பு: ரூ.1.99 கோடி
கணிக்கப்பட்ட லாபம்: ரூ.1.30 கோடி
ரூ.10,000 முதலீட்டை ரூ.2 கோடியாக பெருக்கும் சக்ஸஸ் ஃபார்முலா
20 ஆண்டுகளுக்கு செய்யப்படும் ரூ.10000 என்ற செய்யப்படும் வழக்கமான SIP முதலீடு மூலம் சேர்க்கப்படும் கார்ப்ஸ் ரூ.99.91 லட்சமாக உள்ள நிலையில், டாப்-அப் SIP முதலீடு மூலம் சேர்க்கப்படும் கார்ப்ஸ் ரூ.1.99 கோடி அதாவது, சுமார் ரூ.2 கோடி என்ற அளவில் இரு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதை காணலாம்.
டாப்-அப் SIP ஏன் சிறந்த முதலீட்டு முறையாக கருதப்படுகிறது?
1. கூட்டு வட்டி வருமானம் மந்திரம்: டாப்-அப் SIP உங்களுக்கு கூட்டு வட்டி வருமானத்தின் சிறந்த நன்மைகளை வழங்குகிறது.
2. இலக்குகளை விரைவாக அடைய உதவும்: வழக்கமான SIP-ஐ விட உங்கள் நிதி இலக்குகளை வேகமாக அடையலாம்.
டாப்-அப் SIP உங்கள் நிதி பயணத்தை மேலும் எளிதாக்குகிறது
SIP திட்டத்தில் முதலீடு செய்வது நீண்ட கால செல்வத்தை உருவாக்குவதற்கான பாதுகாப்பான மற்றும் சிறந்த வழியாகும். டாப்-அப் SIP உங்கள் நிதி பயணத்தை மேலும் எளிதாக்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் முதலீட்டை சிறிய அளவுகளில் அதிகரிப்பதன் மூலம், உங்கள் கார்பஸ் வேகமாக வளரும். குறிப்பாக சந்தை வாய்ப்புகள் சிறப்பாக இருக்கும்போது, இந்த சூத்திரம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: எங்கள் கணக்கீடுகள் கணிப்புகள் மட்டுமே, முதலீட்டு ஆலோசனை அல்ல. பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் கடந்தகால வருமானம், எதிர்காலத்திலும் தொடரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. SEBI அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகி ஆலோசித்த பின்னரே முதலீடு தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க | SWP: ஓய்வுக்கு பிறகு மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்க உதவும் பரஸ்பர நிதியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









