)
7th Pay Commission DA Hike: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் பெரிய செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. மோடி அரசு ஆகஸ்ட் 15, 2025க்குள் ஜூலை 2025 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பை அறிவிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Central Government Employees: விரைவில் வருகிறதா டிஏ உயர்வு?
- இந்த அகவிலைப்படி அதிகரிப்பு ஜூலை 1, 2025 முதல் பொருந்தும்.
- ஜூலை முதல் இதுவரை நிலுவையில் உள்ள டிஏ உயர்வு தொகையையும் ஊழியர்கள் பெறுவார்கள்.
- மேலும், 8வது சம்பள ஆணையத்தைத் தொடங்கும் செயல்முறையும் விரைவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த செய்தி லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு நிவாரணமாக வந்துள்ளது.
Dearness Allowance: ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மதிப்பாய்வு
- அரசு ஊழியர்களின் சம்பளம் அடிப்படை சம்பளத்துடன் மட்டும் நின்றுவிடாது.
- இதில் அகவிலைப்படி (DA), வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), பயண கொடுப்பனவு (TA) போன்ற பல கொடுப்பனவுகள் அடங்கும்.
- இப்போதெல்லாம் இந்தக் கொடுப்பனவுகள் சம்பளத்தில் கிட்டத்தட்ட சரிபாதி பங்கை பெருகின்றன.
- அதாவது, ஒருவரின் சம்பளம் அதிகரித்தால், இந்த கொடுப்பனவுகள் காரணமாக அவருக்கு கிடைக்கும் நன்மைகள் இன்னும் அதிகரிக்கின்றன.
- ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
- இந்த மதிப்பாய்வு பணவீக்க புள்ளிவிவரங்களின் அடிப்படையில் செய்யப்படுகிறது, அதாவது CPI (நுகர்வோர் விலைக் குறியீடு) அடிப்படையில் செய்யப்படுகிறது.
- ஜூலை 2025 -க்கான டிஏ மதிப்பாய்வு கிட்டத்தட்ட தெளிவாகிவிட்டது. ஜூன் மாதத்திற்கான AICPI தரவுகள் வந்ததையடுத்து ஜூலை 2025 -க்கான அகவிலைப்படி உயர்வு 3% இருக்கும் என நம்பப்படுகின்றது.
- ஆனால் அரசாங்கம் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
Salary Hike: ஊதிய உயர்வு எவ்வளவு இருக்கும்?
3% டிஏ உயர்வுக்கு பிறகு சம்பள உயர்வு எவ்வளவு இருக்கும்? இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்ளலாம்.
- ஒரு மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.30,200 என்று வைத்துக்கொள்வோம்.
- 55 சதவீத அகவிலைப்படியில், அவருக்கு ரூ.16,610 அகவிலைப்படி கிடைக்கும்.
- மொத்த சம்பளம் ரூ.46,810 ஆக இருக்கும்.
- டிஏ 3% அதிகரித்தால், புதிய அகவிலைப்படி ரூ.17,516 ஆக இருக்கும்.
- திருத்தப்பட்ட மொத்த சம்பளம் ரூ.47,716 ஆக இருக்கும். அதாவது ரூ.906 உயர்வு இருக்கும்.
ஆகஸ்ட் 15 க்கு முன் ஒரு பெரிய அறிவிப்பு வெளியிடப்படலாம்
அகவிலைப்படி உயர்வு குறித்த பெரிய அறிவிப்பு ஆகஸ்ட் 15 க்கு முன் வெளியிடப்படலாம் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
- அகவிலைப்படி 3 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இது நடந்தால், ஊழியர்களின் சம்பளம் கணிசமாக அதிகரிக்கும்.
Central Government Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கும் அதிகரிக்கும் நன்மைகள்
மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் ஊழியர்களைப் போலவே இப்போது அரசாங்கத்தின் அடுத்த அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அகவிலைப்படி அதிகரித்து 8வது சம்பளக் குழுவும் விரைவில் அமலுக்கு வந்தால், அது லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக இருக்கும். இந்த உயர்வு அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நாளுக்கு நாள் அதிகரிக்கும் பணவீக்கத்தில் அவர்களுக்கு நிதி நிவாரணத்தையும் அளிக்கும்.
8th Pay Commission: சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கான எதிர்பார்ப்பு
7வது ஊதியக்குழு டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைகிறது. இதன் காரணமாக, இப்போது அனைவரின் பார்வையும் 8வது சம்பள ஆணையத்தின் மீது உள்ளது. நாட்டில் சுமார் 50 லட்சம் மத்திய ஊழியர்களும் 62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இந்தப் புதிய ஆணையத்தின் மூலம் வரக்கூடிய ஊதிய மற்றும் ஓய்வூதிய உயர்வுக்காக காத்திருக்கிறார்கள்.
8வது சம்பள ஆணையம் அமைக்கப்படுவதாக அரசாங்கம் ஜனவரி 2025 இல் அறிவித்தது. ஆனால் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனம் இன்னும் நடக்கவில்லை. இதன் காரணமாக இந்த செயல்முறை தாமதமாகி வருகிறது. இருப்பினும், இப்போது அரசாங்கம் இந்த திசையில் விரைவான நடவடிக்கைகளை எடுக்கும் என்று நம்பப்படுகிறது.
சம்பளத்தில் உயர்வுக்கு காரணமாக இருக்கும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 7வது ஊதியக் குழுவில், 2.57 ஆக இருந்தது. இப்போது 8வது சம்பளக் குழுவில், இது 1.83 முதல் 2.46 வரை இருக்கலாம் என்று தகவல்கள் உள்ளன. உதாரணமாக, ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகவும், ஃபிட்மென்ட் ஃபாக்டர் 2.46 ஆகவும் இருந்தால், அவரது சம்பளம் ரூ.44,280 ஆக உயரலாம். அதாவது, சம்பளத்தில் பெரிய ஏற்றம் ஏற்படும். ஓய்வூதியதாரர்களும் இதனால் பயனடைவார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ