)
Central Government Employees Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு வரவிருக்கும் வாரங்கள் மகிழ்ச்சியான வாரங்களாக இருக்கவுள்ளன. குறிப்பாக இந்த அண்டின் தீபாவளி அவர்களுக்கு மறக்க முடியாத தீபாவளியாக இருக்கும். ஏனெனில், இந்த தீபாவளியில் மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் ஆசைகள் பல நிறைவேறவுள்ளன. இந்த முறை தீபாவளி பண்டிகையில் அவர்களுக்கு இனிப்புகள், மத்தாப்புகளுடன் நிதி நிலையும் மேம்படவுள்ளது. இதை பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் காணலாம்.
மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தின் மீது நேரடி தாக்கத்தைக் கொண்டிருக்கும் மூன்று பெரிய செய்திகளை அரசாங்கம் கூடிய விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
- முதலாவதாக, 8வது சம்பளக் குழு உருவாக்கம்
- இரண்டாவதாக, அகவிலைப்படி அதிகரிப்பு (DA).
- மூன்றாவதாக, மிகப்பெரிய ஊதிய உயர்வு.
ToR இறுதி செய்யப்பட்டவுடனேயே ஆணையத்தின் பணிகள் தொடங்கும் என்றும், ஜூலை 2025 -க்கான அகவிலைப்படி அதிகரிப்பு கூடிய விரைவில் நடக்கும் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கிறன.
- 8வது ஊதியக் குழுவை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இப்போது தீபாவளிக்கு முன் ஆணையத்தின் விதிமுறைகள் இறுதி செய்யப்படும் என்றும், ஆணையத்தின் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.
- ஆணையத்தில் 6 உறுப்பினர்கள் இருக்கலாம் என்றும் புதிய பரிந்துரைகள் ஜனவரி 2026 முதல் செயல்படுத்தப்படும் வகையில் விரைவில் அறிக்கையைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- 8வது ஊதியக்குழுவில் மிகப்பெரிய விவாதம் ஃபிட்மென்ட் ஃபாக்டர் பற்றியதாக இருக்கும். பழைய அடிப்படை சம்பளத்துடன் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் பெருக்கப்பட்டு புதிய அடிப்படை ஊதியம் உருவாக்கப்படுகின்றது.
- 8வது ஊதியக்குழுவில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் 1.92-3.0 -க்குள் இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது இதன்படி ஊழியர்களின் அடிப்படை சம்பளமூம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியமும் பெரிய ஏற்றத்தை காணக்கூடும்.
- அடிப்படை ஊதியத்தில் ஏற்படும் அதிகரிப்பு HRA, DA மற்றும் பிற அலவன்சுகளிலும் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், இது இந்த ஒரு முறை மட்டுமே கிடைக்கும் நன்மையாக இருக்காது, மாறாக நீண்ட கால விளைவை ஏற்படுத்தும்.
- மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இன்னும் சில நாட்களில் அகவிலைப்படியில் (Dearness Alloeance) மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் ஏற்றத்தைக் காணும்.
- தற்போது, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி சுமார் 55% ஆக உள்ளது. ஜனவரி-ஏப்ரல் மாதங்களுக்கான AICPI தரவைப் பார்க்கும்போது, ஊழியர்களின் அகவிலைப்படி 58% ஆக உயரக்கூடும் என்று மதிப்பிடப்படுள்ளது.
- இதன் மூலம் ஊழியர்களின் மாத சம்பளம் உடனடி அதிகரிப்பைக் காணும்.
- உதாரணமாக, மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு அதிகரிப்பு இருக்கும். இது வீட்டுச் செலவுகளில் உதவி சேமிப்பை ஊக்குவிக்கும். ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலை நிவாரண உயர்வு கிடைக்கும்.
ஊதிய உயர்வு எவ்வளவு கிடைக்கும்? ஓரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ₹ 50,000 என்று வைத்துக்கொள்வோம். தற்போது, 55% அகவிலைப்படியில், அவரது DA தொகை ₹27,500 ஆக இருக்கும். அதாவது இது மொத்த சம்பளத்தில் ஒரு பெரிய தொகையை சேர்க்கிறது.
- அகவிலைப்படி 58% ஆக உயர்ந்தால், அகவிலைப்படி தொகை ₹29,000 ஆக அதிகரிக்கும். மேலும் ஒரு மாதத்தில் ₹1,500 நேரடி உயர்வு கிடைக்கும். இது ஒரு வருடத்தில் சுமார் ₹18,000 ஐ சேர்க்கும்.
- இப்போது 8வது சம்பளக் குழுவின் பரிந்துரைகளும் இதற்கு மேல் செயல்படுத்தப்பட்டு, அடிப்படை சம்பளம் புதிய ஃபிட்மெண்ட் ஃபாக்டரால் பெருக்கப்பட்டால், அடிப்படை சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இரண்டும் அதிகரிக்கும். இது மொத்த சம்பளத்தில் பெரிய ஏற்றத்திற்கு வழிவகுக்கும்.
சுமார் 10 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு புதிய ஊதியக்குழு அமைக்கப்படுகிறது. 2006 இல் 6வது கமிஷன், 2014 இல் 7வது கமிஷன் ஆகியவை அமைக்கப்பட்டன. இப்போது 2025 இல் 8வது ஊதியக்குழுவிற்கான பணிகள் தொடங்கிவிட்டன. புதிய பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்ட ஒவ்வொரு முறையும், ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தின் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றத்தால், நீண்டகால சலுகைகளைப் பெற்றுள்ளனர். இந்த முறையும் சரியான நேரத்தில் அனைத்து பணிகளும் நடந்து, விரைவில் புதிய ஊதியக்குழு தங்கள் வாழ்வில் நிதி நன்மைகளை அள்ளித்தரும் என ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் காத்திருக்கிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ