)
Trump Tariffs: இந்தியாவை குறி வைத்து தாக்கிக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பொருட்களுக்கு முன்னர் இருந்த வரிக்கு கூடுதலாக மேலும் 25% வரி விதிக்கப்படும் என நேற்று அறிவித்தார். இதற்கான கோப்புகளில் அமெரிக்க அதிபர் கையெழுத்திட்டுள்ளதாகவும் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனுடன் இந்திய பொருட்கள் மீதான மொத்த வரி 50% ஆக அதிகரித்துள்ளது.
இன்று இரவு 9:30 மணிக்கு முக்கிய அறிவிப்பு
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சமீபத்திய கூடுதல் 25% வரிக்கான அறிவிப்பு இத்துடன் நிற்காது என்றும், இதில் தொடர்ச்சியாக இன்னும் பல அறிவிப்புகள் வரவுள்ளன என்றும் கூறப்படுகின்றது. ஆகஸ்ட் 7, அதாவது இன்று இரவு இந்திய நேரப்படி இரவு 9:30 மணியளவில், அமெரிக அதிபர் இந்தியா குறித்து மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஜீ மீடியாவிடம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
25% கூடுதல் வரி வெறும் டிரெய்லர்தான்....
25% கூடுதல் வரி விதித்து அமெரிக்க அதிபர் விடுத்த அறிவிப்பு வெறும் டிரெய்லர்தான் என்றும், இன்னும் சில முக்கிய அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகள் தொடர்பான நிர்வாக உத்தரவில் டிரம்ப் இன்று கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பொருட்களுக்கு 100% வரி?
சில குறிப்பிட்ட இந்திய பொருட்களுக்கு 100 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் என்று சந்தையில் சலசலப்பு நிலவுகிறது. இந்த பொருட்களில் செமிகண்டக்டர்கள், சிப்கள், முக்கிய மின்னணு உபரிகள் இருக்கலாம் என கூறப்படுகின்றது.
ரஷ்யாவுடன் இந்தியாவின் எண்ணெய் வர்த்தகத்தின் எதிரொலியாக, இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போதுள்ள 25 சதவீத வரியை நேற்று டிரம்ப் இரட்டிப்பாக்கினார். இந்த அறிவிப்பு வந்து சில மணிநேரங்களுக்குள் 100% வரி பற்றிய இந்த செய்தி பரவத் தொடங்கியுள்ளது. டிரம்பின் மிரட்டல்களுக்கு அஞ்சாத நரேந்திர மோடி 3.0 அரசாங்கம், இதுவரை ரஷ்யாவுடனான தனது எண்ணெய் வர்த்தகத்தில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
'நியாயமற்ற செயல்': வெளியுறவு அமைச்சகம்
இந்தியப் பொருட்களுக்கான வரியை 50% ஆக இரட்டிப்பாக்கியுள்ளதாக வந்த வெள்ளை மாளிகையின் அறிவிப்புக்குப் பிறகு, வெளியுறவு அமைச்சகம், "சமீபத்திய நாட்களில் ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா குறிவைத்துள்ளது. இந்த விஷயங்களில் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். எங்கள் இறக்குமதிகள் சந்தை காரணிகளை அடிப்படையாகக் கொண்டவை. மேலும் இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதை அவை ஒட்டுமொத்த நோக்கமாகக் கொண்டுள்ளன." என்று கூறியது.
"பல நாடுகள் தங்கள் சொந்த தேசிய நலனுக்காக பல நடவடிக்கைகளை எடுக்கின்றன. இந்தியாவும் அதே போன்ற நடவடிக்கைகளை எடுக்கும்போது இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிப்பது துரதிர்ஷ்டவசமானது" என்று அமைச்சகம் மேலும் கூறியுள்ளது.
இந்த நடவடிக்கைகள் "நியாயமற்றவை மற்றும் சரியான காரணமற்றவை" என்றும் வெளியுறவு அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியது. "இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்," என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கூடுதல் வரியால் என்ன பாதிப்பு?
- கூடுதல் வரி காரணமாக வியட்நாம் மற்றும் வங்கதேசம் போன்ற பிராந்திய போட்டியாளர்களுக்கு எதிராக இந்தியாவிற்கு பாதகமாக சூழ்நிலை ஏற்படலாம்.
- இதற்கிடையில், சாத்தியமான வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ஆகஸ்ட் 24 அன்று ஒரு அமெரிக்க தூதுக்குழு இந்தியாவுக்கு வருகை தர உள்ளது.
- இதற்கு முன்னர், குறைந்தபட்சம் ஐந்து சுற்று வர்த்தக பேச்சுவார்த்தைகள் நடந்துவிட்டன. ஆனால், இவற்றில் இன்னும் எந்த வித ஒப்பந்தமும் எட்டபடவில்லை.
- டொனால்ட் ட்ரம்பின் வரி நடவடிக்கைகள் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் அவற்றின் சாத்தியமான தாக்கம் குறித்த நிச்சயமற்ற தன்மை முதலீட்டாளர்களை இக்கட்டான சூழலில் வைத்துள்ளது.
- சுமார் 20 நாடுகள் அமெரிகாவின் 20 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வரிகளை எதிர்கொள்கின்றன.
- இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா தற்போது 50 சதவீத வரியை விதித்துள்ளது. பிரேசிலுக்கான வரியும் இதனுடன் ஒத்துப்போகிறது.
- லாவோஸ், மியான்மர், சுவிட்சர்லாந்து, கனடா, செர்பியா மற்றும் ஈராக் போன்ற நாடுகள் 35 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வரிகளை எதிர்கொள்கின்றன.
இதற்கிடையில், இந்தியா மீதான கூடுதல் 25 சதவீத வரியைப் போலவே சீனாவின் மீதும் கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவுடன் இந்தியா கொண்டிருக்கும் வர்த்தக ரீதியிலான உறவும் நட்பும் அமெரிக்காவை கடும் கோவத்திற்கு ஆளக்கிடுள்ளது. இந்த நிலையில், பொருளாதார ரீதியாக இந்தியாவை பழிவாங்கத் துடிக்கும் அமெரிக்கா தன் ஆட்டத்தை கட்டம் கட்டமாக ஆடி வருகிறது. இது ஒரு பக்கம் இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இதன் அதிர்வலைகள் அமெரிக்க பொருளாதாரத்திலும் காணப்படும். இப்படிப்பட்ட சூழலில், இன்று இரவு அமெரிக்க அதிபர் இந்தியா தொடர்பாக ஒரு பெரிய அறிவிப்பை வெளியிடுவார் என வந்துள்ள செய்தி அனைவரின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ