)
Aadhar Card Update: இந்திய மக்களின் அடையாள ஆவணமாக ஆதார் அட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரசு நலத்திட்டங்கள் தொடங்கி, வேலைவாய்ப்பு வரை பலவற்றிற்கும் ஆதார் அட்டை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆதார் அட்டையில் பெயர், முகவரி, வயது, பாலினம், பயோமெட்ரிக் விவரங்கள் என ஒருவரின் அனைத்து தனிப்பட்ட விவரங்களும் இடம்பெற்றிருக்கும். ஆதாரை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நிர்வகித்து வருகிறது. ஆதார் அட்டையை ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அப்டேட் செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. இதனால், மக்கள் ஆதார் கார்டில் அப்டேட் செய்து வருகின்றனர்.
மேலும், ஆதார் கார்டில் முகவரி போன்றவற்றையும் மாற்றி வருகின்றனர். இதற்கிடையில், ஆதார் கார்டு அப்டேட் தொடர்பாக சில மாற்றங்களை UIDAI கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, ஆதார் கார்டு அப்டேட் செய்யும் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்ததேதி, மொபைல் எண் போன்றவற்றை மாற்றுவதற்கான கட்டணம் 50 ரூபாயில் இருந்து ரூ.75 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கைரேகை, கருவிழி, புகைப்படம் போன்ற பயோமெட்ரிக் அப்டேட் செய்வதற்கான கட்டணம் 100 ரூபாயில் இருந்து ரூ.125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் 2028ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவை தரம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளின் செலவைக் கருத்தில் கொண்டு இந்த கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளதாக UIDAI கூறுகிறது. மேலும், குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. 7 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேன் போன்ற பயோமெட்ரிக் புதுப்பிப்புகள் இலவசமாக செய்யப்படும் என தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு கட்டணம் வசூலிக்கப்பட்டது. குழந்தைப் பருவத்தில் முகம் மற்றும் கைரேகை அங்கீகாரம் மாறுகிறது, எனவே அவ்வப்போது புதுப்பிப்புகள் அவசியம் என்று UIDAI கூறியது. குழந்தையின் ஆதார் அட்டையும் செயலிழக்கப்படாமல் இருக்க பள்ளிகளும் இந்த விஷயத்தில் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் மற்றும் மொபைல் எண் போன்ற ஆதார் விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்க முடியும். ஆதார் அட்டையில் முகவரி போன்றவற்றை மாற்றி கொள்ள ஆதார் சேவை மையத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. எனவே, நவம்பர் 1ஆம் தேதி வீட்டில் இருந்த மேற்கண்டவற்றை ஆன்லைனில் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. UIDAI.Gov.In என்ற இணையதளத்தை பார்வையிட்டு உங்கள் ஆதார் விவரங்களைச் சரிபார்க்கவும். பெயர் அல்லது முகவரி தவறாக இருந்தால், உடனடியாக ஆன்லைனில் திருத்தம் செய்யுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ